சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, January 15, 2005
குழப்பம்தான் மிஞ்சும்.
தமிழ் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள். எத்தனையோ பெயர்களில்...

இணையத்தில் நடந்த உரையாடல்களை கொண்ட ஜெயமோகனின் ஒரு புத்தக முன்னுரையில், "தமிழில் 10000 க்கும் அதிகமான புத்தகங்கள் வெளிவருகின்றன.. ஆனால், 300 புத்தகங்களுக்கு மட்டுமே மதிப்புரை எழுத இயலும்,இப்போதுள்ள ஊடகங்கள் மூலம்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கென்னமோ அதுவுமே அதிகம் என்று தோன்றுகிறது!

புத்தக மதிப்புரையால் மட்டுமே ஒரு புத்தகம் மக்களிடையே ரீச் ஆகிவிடும் என்று சொல்ல முடியாது. அப்படி இருந்தாலும் கூட, அது பிரபல பத்திரிக்கையின் புத்தக விமர்சனமாக இருந்தால் மட்டுமே ரீச் ஆகும். அதிலும், பாலிடிக்ஸ் இருன்ந்தால்?! என்க்கு இந்த துறையின் எதிர்காலம் குறித்து கேள்வி இருக்கிறது.

இவ்வளவு புத்தகங்கள் எப்படி?, இதிலிருந்து முத்தெடுப்பது எப்படி? பாதிக்கு மேல், திரும்பத் திரும்ப சுழற்றி அடிக்கும் மாற்றி மாற்றி சொன்னதையே வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லும், 'சுமார்' புத்தகமாக இருக்காது என்பது என்ன நிச்சயம்?

பல வருடங்களுக்கு முன்னரெல்லாம், புத்தகம் என்றால் பிரபல எழுத்தாளர்கள் மட்டுமே கண்ணில் படுவர். ஆனால் இப்பொழுது ஏராளமான எழுத்தாளர்கள். யாருமே அந்தளவு பிரபலம் இல்லை. ஏனென்றால், வெகுஜனப்பத்திரிக்கைகளில் அவ்வளவு எழுதுவது இல்லையோ என்னமோ!

இது சரியா என்று தெரியவில்லை. ஆனால் வெகுஜனப்ப்பத்திரிக்கைகளில் எழுதி பிரபலமானவர்கள் மட்டுமே சராசரி மக்களுக்கு வெகுபழக்கம்.

அப்படி சராசரி மக்களுக்குப் பழக்கம் இல்லாதவர்களின் புத்தகம் விற்க வேண்டுமானால், அது ஜோதிடம், ஆன்மீகம், சம்பந்தமாக இருந்தால் எடுத்துப்பார்க்கலாம்.

1000 பேர் வந்தால், அதில் குறைந்தது 990 பேர் சராசரி வாசகர்கள். என் அம்மா , எங்கள் குடும்ப உறவினர்கள் உட்பட பலர் எனக்கு முன்னரே இந்த கண்காட்சியைப் பார்த்திருந்தார்கள்.

அவர்கள் வாங்கி வந்த புத்தகங்கள் அனைத்தும், வெகுஜன பிரப்லயமானவை அல்லது ஆன்மீகம் சம்பந்தமானவை..(குமுதம் ஜோதிடப்புகழ்.., சோ, ஆன்மீகம்) இதெல்லாம்தான்.

'அள்ள அள்ள பணம்', என் மாமனார், பார்த்துவிட்டு படித்துவிட்டுத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் பங்குச் சந்தையையே இப்பொழுது சுவாசமாக செய்பவர்.

மொத்தத்தில், இதெல்லாம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் இல்லாமல், இந்த கண்காட்சிக்குச் செல்வது... வேடிக்கை பார்க்க மட்டுமே உதவும்.(பா.ரா, பட்டியல் பிரிண்ட் எடுத்துக்கொண்டு மறுபடிப் போகப் போகிறேன். என்னைப் போன்ற சராசரி வாசகருக்கு இது போன்ற பட்டியல் இந்த நேரத்தில் மிகவும் உதவி. - நன்றி பரி)

"..ர..ர.. சங்கர" ஜெயகாந்தனின் புத்தகம். ரொம்ப சுமார். எனக்குப் பிடிக்கவில்லை. (சொல்லிய செய்திக்காக அல்ல... என்னமோ போர் அடித்தது. அவருடைய முன்னுரை அதைவிடக் குழப்பம்.அவசியம் படிக்க வேண்டும் என்ற புத்தகப் பட்டியலில் நான் இதைச் சேர்க்க விரும்பவில்லை.)
posted by சாகரன் @ 1/15/2005 08:04:00 AM   1 comments
Sunday, January 09, 2005
பதினோரு மாத சம்பளம்!
ஏதோ ஒரு பேச்சு. நடுவில் நுழைந்தார் என் பிராஜக்ட் மேனேஜர்.
எந்த விசயத்திலும் ஏதாவது பேசக்கூடியவர்...! சுவாரஸ்யமான ஆள்!!

"நாங்கள்லாம் கொடுத்து வச்சவங்கப்பா... எங்க காலத்தில அதாவது 18-20 வருடம் முன்னால எல்லாம், பெண்கள் கல்யாணம் பண்ணிகிட்டா, வீட்டில் உள்ள பொறுப்பு எல்லாம் அவங்களோடது, சமையல, குழந்தையை கவனிச்சுக்கறதெல்லாம் அவங்க வேலை அப்படின்னு கிளியரா இருந்தாங்க. அதனால, we were enjoying both the worlds. வீட்லயும் நிம்மதியா இருக்கும், வெளியிலயும் நம்ம ஆக்டிவிட்டீஸ் எப்பவும் போல இருக்கும். ஆனா, இப்ப அப்படி இல்லை.

எங்க காலத்தில் என் மகன் குழந்தையா இருந்தப்போ நான் ஏதாவது உதவி செய்தால் கூட, மத்தவங்க வித்தியாசமா பார்ப்பாங்க.. 'இவன் என்ன லூசா. இதெல்லாம் போய் செய்றானே' அப்படிங்கறமாதிரி. ஆனா இன்னிக்கி இதெல்லாம் செய்யாம இருக்கவே முடியாது. வீட்லயும் நீங்க வேலை செய்யணும், வெளி ஈடுபாடுகளையும் குறைச்சுக்கணும்...

உங்க பாடு திண்டாட்டம்தான் :-)

இந்தியாவில இந்த நிலை இப்ப 50-50 பர்ஸண்டேஜ்ல இருக்கு. அமெரிக்காவில இருக்கற பசங்கள்லாம்.. இப்ப கல்யாணம்னு வரும்போது இந்தியாவில இருக்கிற, வில்லேஜ் கேர்ள்ஸ் வேணும்னுதான் கேட்கறாங்களாம்!"

இதில் எவ்வளவு தூரம் உண்மை என்ற வாதத்தை அந்தப்பக்கம் தள்ளி வைத்துவிடலாம். ஆனால், இது மிகவும் சுவாரஸ்யமான பேச்சுப் பொருள் என்பது மட்டும் நிச்சயம்; அதிலும் முக்கியமாக ஆண்களுக்கு!

*

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல்.. என் பெயரும் உன்பெயரே என்று சொல்லி, நானும் ரியாத்-தில் தான் எனக்கு ஒரு போன் செய்ய முடியுமா என்று கேட்டு! அட... எப்படியெல்லாம், காண்டாக்ட் கிடைக்கிறது!! பேசியபோது, இணையத்தில் என் தளத்தில் உள்ள அட்ரஸ்/ குடும்ப விபரம் எல்லாமே படித்திருந்தார்! நட்பு என்பது எப்படி வேண்டுமானாலும், ஏற்படும். அதிலும் இணையம், ஒரு சுவாரஸ்யமான ஊடகம்.

ரியாத் வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறதாம்... ஆனால், 'மிடிலீஸ்டில் 12 வருடங்கள் இருந்திருக்கிறேன்' என்றார்.

'அப்புறமும் எதுக்குங்க திரும்பி இங்கியே!?'

'இந்தப் பக்கம் இருந்துட்டு திரும்ப இந்தியாவில செட்டில் ஆகறதுங்கறது கொஞ்சம் கஷ்டம்தான்...'.

நானறிந்த பலர் இப்படித்தான் திரும்பியிருக்கிறார்கள்!

*

ரியாலுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சர சரவென்று குறைந்துவிட்டது. சென்ற இரண்டு வாரங்களுக்கு முன், 12.33 என்று இருந்தது, இந்த வாரம், 11.48 ஆகிவிட்டது. இன்னமும் குறைந்து 10.90 வரும் என்று சொல்கிறார்கள். ஒரு சிறு கால்குலேசன் போட்டு பார்த்தால்.... கிட்டத்தட்ட 1 ரியாலுக்கு ஒரு ரூபாய் இழப்பு!
100 ரியாலுக்கு --> கிட்டத்தட்ட 100 ரூபாய் இழப்பு....
ஒரு வருடத்தில் 1200 ரூபாய் இழப்பு... அதாவது, ஒரு வருடத்திற்கு 11 மாத சம்பளம்தான்!!

'சை.. இதெல்லாம் கால்குலேட் பண்ணவே கூடாது!' - என்னிடமே நான்!

*

இன்னும் இரு தினங்களில் சென்னை பயணம்....
posted by சாகரன் @ 1/09/2005 05:45:00 PM   9 comments
Monday, January 03, 2005
அலைகள்...
நேற்று முந்தினம், என்.டி.டி.வி-ல் ஒரு வக்கீலின் பேட்டி; அதில், சுனாமியால் அனாதையான குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்...

நீண்ட நாட்களாக இது குறித்த விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு எண்ணம்..

துணை இது குறித்து சொன்னபோது, என்.டி.டி.வி-யின் தளத்தில் சென்று அது குறித்து விபரம் இருக்கிறதா என்று தேடினேன், கிடைக்கவில்லை.

இணையத்தில் இன்று சில செய்திகள் படித்தேன்.

ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ள அரசே முன் வந்திருப்பதாக..

முதல்வர், விருப்பமுள்ளவர்கள் தத்து எடுத்துக்கொள்ளலாம், சில விதிமுறைகளுக்குட்பட்டு..
என்று சொன்னதாக படித்தபோது, அதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ளும் எண்ணம் வலுப்பட்டது.

அந்தத் தளத்தில் சென்று பார்த்த போது...

1) ஹோம் ரிப்போர்ட் - நம் வீட்டிற்கு ஒருவர் வந்து விபரங்கள் கேட்டுச் செல்வார்.
2) நம் விருப்பப்படி, குழந்தையின் போட்டோ அனுப்பி வைக்கப்படும்.
3) பிடித்திருப்பின், நேரில் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்
4) பிடித்திருப்பின், மற்ற வேலைகள் செய்யப்படும்.

இவற்றிற்கெல்லாம் குறைந்தது 3 மாதங்களாவது எடுக்கும்..

விளக்கத்தின் நடுவில், சில விடயங்கள், ஹிந்து லா-வின் படி, அடாப்ட் செய்ய முடியும். முஸ்லீம் அல்லது கிருஸ்துவராக இருந்தால், கார்டியனாக முடியும். என்று இருந்தது.

இந்துவாக இருந்தாலும், கார்டியனாக இருப்பது எப்படி, இது குறித்து மேல் விபரம் தெரிந்து கொள்ளும் எண்ணம் வருகிறது.

என்.டி.டி.வி பேட்டியில், ஹிந்து லா-வின் படி, உங்களுக்கு ஆண்குழந்தை முன்னரே இருந்தால் பெண்ணும், பெண்குழந்தை முன்னரே இருந்தால் ஆண் குழந்தையுமே தத்து எடுக்க அனுமதிக்கப்படும் என்று ஒரு விபரம் சொல்லியிருந்தார்களாம். இது போன்ற சட்டங்களைத் தெளிவாகச் சொல்லும் இணையதளம் உண்டா?ம்.. தேடவேண்டும்.

இதற்கு நடுவில், அமெரிக்க சம்பந்தமான ஒரு செய்தியும் கண்ணில் பட்டது, அதில், சுனாமி பாதிப்பிற்குள்ளான அனாதைக் குழந்தைகளை அடாப்ட் செய்யும் அனுமதி இப்போதைக்கு அமெரிக்க சிட்டிசன்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி இருந்தது.

ஏன் என்னும் போது, அந்த குழந்தையின் பெற்றோர் திரும்ப வரவோ, அல்லது உறவினர்கள் கண்டுபிடிக்கப்படவோ வாய்ப்பு இருப்பதால், கண்டிப்பாக் அந்த குழந்தை பெற்றோரற்ற குழந்தை என்று நிச்சயமாக சில மாதங்களாவது ஆகும். அதனால், இப்போதைக்கு அனுமதி மறுப்பு என்று தெளிவு படுத்தியிருந்தார்கள்.

அது என்னவோ சரிதான் என்று தோன்றுகிறது.

கூடவே அண்ணா யுனிவர்சிடி ஆதரவற்ற குழந்தைகளின் விபரங்களுடன் ஒரு தளம் அமைத்திருப்பதாக ஒரு செய்தி மாலைமலரில்... http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=33602
ஆனால் அப்படி ஒரு தளம் எங்கிருக்கிறது?! :-(
posted by சாகரன் @ 1/03/2005 06:45:00 PM   2 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER