சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, January 20, 2007
Maruthy Zen for 1000 Rupees
சில வாரங்களாகவே கார் வாங்கலாமா என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. காலையில் எழுந்தவுடன் தினசரிகளைப் பார்ப்பது ஒரு பழக்கமாகிவிட்டிருந்தது. அப்படித்தான் அன்று காலையில்...
தினசரியில் ஒரு விளம்பரம் - 1997 மாருதி சென் கார் 1000 ரூபாய் மட்டுமே. அந்த விளம்பரத்தை என் மனைவியிடம் காட்டினேன். "வேடிக்கையாக இருக்கிறது ஏதாவது சின்ன சைஸ் கேம் கார் போலிருக்கு" என்றேன். ஆனால் அவளுக்கு அதில் ஆர்வம் வந்துவிட்டது. 'உடனே போன் செய்யுங்க' என்றாள். 'என்னம்மா இது. இப்பத்தான் 6:30 மணி ஆகுது. அவங்க தூங்கி கிட்டு இருந்தாலும் இருப்பாங்க. இப்ப எப்படி போன் செய்யறது'. 'சும்மாருங்க அதெல்லாம் எழுத்ந்திருச்சிருப்பாங்க. நீங்க உடனே போன் பண்ணுங்க'. 'சரி நீ விடமாட்டே. நான் செஞ்சு பார்க்கிறேன்'.

போன் செய்தேன். எதிர் முனையில் ஒரு பெண்மணியின் குரல்.

'ஆம். 1000 ரூபாய்தான். '

'பணமாக பெற்றுக்கொள்ளமாட்டேன். நீங்கள் செக்காகத் தர வேண்டும்.'

'பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ்ட். நீங்கள் முதலில் வந்தால் கார் உங்களுடையது.'

என்னால் நம்ப முடியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் என்னுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி. என்னிடமிருந்து போனைப் பிடுங்கி..'மேடம், நாங்க காரை கண்டிப்பா வாங்கிக்கறோம். கண்பர்ம்ட். உடனே வர்றோம்' என்று சொல்லிக்கொண்டிருந்தாள். 'அது எப்படி 1000 ரூபாய்க்கு கார் கிடைக்கும். இதெல்லாம் நம்பற மாதிரி இல்லை. ஏதாவது திருட்டுப் பொருளா இருக்கும்' என்று நான் சொல்லிக்கொண்டிருந்ததை அவள் கவனிக்கக்கூட இல்லை. 'சும்மாருங்க.. ஏதோ நம்மளுக்கு அதிர்ஸ்டம் அடிக்குது, நீங்க நொய் நொய்னுகிட்டு. நீங்க பாட்டுக்கு தேவையில்லாம வாயத் தொறந்தீங்கண்ணா இருக்கு சொல்றேன். சீக்கிரமா ஆட்டோ பிடிங்க.'

உடனடியாக ஆட்டோ பிடித்து அந்த இடத்திற்குச் சென்றோம். காலிங் பெல்லினை அழுத்துவதற்கு முன் வீட்டு வாசலில் இருந்த அந்தக் காரை நோட்டமிட்டேன். கார் நன்றாகவே இருந்தது. நீல கலர். இஞ்சின் இல்லாவிட்டாலும், அந்த ஸ்டீல் பாடி கூட ஆயிரம் ரூபாய்க்கு தகுதி தான்.

கதவைத் திறந்தது ஒரு 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி. டெலிபோன் குரலில் இருந்த தளர்ச்சியைப் பார்த்து நான் யாராவது வயதானவர்களாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். "வணக்கம். நாங்க காலையில உங்களுக்கு போன் பண்ணியிருந்தோம்", "உள்ள வாங்க. செக் எடுத்துட்டு வந்திருக்கீங்களா?"

உள்ளே நுழைந்த அவர், ஒரு கத்தையாக சில காகிதங்களைக் கொண்டு வந்தார். சேல் டீட், அக்ரிமெண்ட் என்று பல பார்மாலிட்டி பேப்பர்கள் இருந்தன. ஒவ்வொன்றாக படித்து பார்த்து கையெழுத்திட்டுக்கொண்டிருந்தேன். கூடவே எனக்கு டென்ஷனும் ஏறியது. ஆயிரம் ரூபாய் காருக்கு இவ்வளவு பேப்பரிலும் முழுமையாக எழுத வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்தது. என் மனைவியோ பாதி வானத்திலும் பாதி நிலத்திலுமாக இருந்தார். என்னை 'எந்த கேள்வியும் கேட்காதீங்க' என்று சைகை காட்டிக்கொண்டிருந்தார்.

'காரைப் பார்க்கிறீர்களா?' - சாவியைக் கொடுத்தார் அந்த பெண். நானும் என் மனைவியும் வெளியில் வந்தோம். காரில் முதலில் இஞ்சின் பானட்டை ஓபன் செய்து பார்த்தேன். ஆச்சரியம் இஞ்சின் கூட இருந்தது. எனக்கு நம்ப முடியவில்லை. என் மனைவி இப்பொழுது என்னை நச்சரிக்க ஆரம்பித்தார்.
"ஏங்க. இவ்வளவு அழகான காரை ஏங்க ஆயிரம் ரூபாய்க்கு விற்கணும். ப்ளீஸ் கேளுங்க."

நான் அந்த பெண்மணியிடம் சென்றேன். "மேடம். தயவு செஞ்சு நான் கேட்கறதுக்கு நீங்க கட்டாயம் பதில் சொல்லணும். இவ்வளவு நல்ல காரை நீங்க ஏன் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்கறீங்க".

காரணம் தெரிந்தபோது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.அவருடைய கணவன் ஒரு விபத்தில் ஒரு வாரத்திற்கு முன் இறந்துவிட்டார். அவனுடைய உயில் பிரகாரம், இந்தக் காரினை விற்று வரும் பணம், அவனுடைய ஆபீஸ் லேடி செக்ரட்டரிக்குச் செல்ல வேண்டுமாம்!

வரும் போது, என் மனைவி, ' பாருங்க. நாங்க பெண்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று'.

'பெண்கள் புத்திசாலிகளா இல்லையா என்பதை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்'

*****

டோஸ்ட் மாஸ்டர்ஸ் - பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கேள்விப்படாதவர்களுக்கு - இது பப்ளிக் ஸ்பீக்கிங் - எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் ஒரு குழு. உலகமெங்கும் நடத்தப்படுகிறது. பல வருடங்களாக ரியாத்-திலும் நடத்தப்படுகிறது. சின்ன சின்னதாக குழுக்களாக - சுமார் 30 பேர் இருப்பார்கள் ஒரு TM குழுவில்.

இந்த வார டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங்கில் - திரு. சுப்ரமணியம் என்ற ஒரு டோஸ்ட்மாஸ்டர் பேசிய பேச்சுதான் மேலேயுள்ளது. இது உண்மையில் நடந்ததா, அவருக்கு நிகழ்ந்த நிகழ்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் 'நகைச்சுவைப் பேச்சு' என்ற தலைப்பிற்கு நச்சென்ற கதை! இல்லியா?


*****

இந்த நிகழ்ச்சி தொடர்பான் பதிவு : http://sakaran.blogspot.com/2007/01/photo-play.html
மூலக்கதையின் ஆசிரியர் மல்லாடி வெங்கட கிருஷண மூர்த்தி.
posted by சாகரன் @ 1/20/2007 11:17:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER