சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, January 03, 2005
அலைகள்...
நேற்று முந்தினம், என்.டி.டி.வி-ல் ஒரு வக்கீலின் பேட்டி; அதில், சுனாமியால் அனாதையான குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்...

நீண்ட நாட்களாக இது குறித்த விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு எண்ணம்..

துணை இது குறித்து சொன்னபோது, என்.டி.டி.வி-யின் தளத்தில் சென்று அது குறித்து விபரம் இருக்கிறதா என்று தேடினேன், கிடைக்கவில்லை.

இணையத்தில் இன்று சில செய்திகள் படித்தேன்.

ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ள அரசே முன் வந்திருப்பதாக..

முதல்வர், விருப்பமுள்ளவர்கள் தத்து எடுத்துக்கொள்ளலாம், சில விதிமுறைகளுக்குட்பட்டு..
என்று சொன்னதாக படித்தபோது, அதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ளும் எண்ணம் வலுப்பட்டது.

அந்தத் தளத்தில் சென்று பார்த்த போது...

1) ஹோம் ரிப்போர்ட் - நம் வீட்டிற்கு ஒருவர் வந்து விபரங்கள் கேட்டுச் செல்வார்.
2) நம் விருப்பப்படி, குழந்தையின் போட்டோ அனுப்பி வைக்கப்படும்.
3) பிடித்திருப்பின், நேரில் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்
4) பிடித்திருப்பின், மற்ற வேலைகள் செய்யப்படும்.

இவற்றிற்கெல்லாம் குறைந்தது 3 மாதங்களாவது எடுக்கும்..

விளக்கத்தின் நடுவில், சில விடயங்கள், ஹிந்து லா-வின் படி, அடாப்ட் செய்ய முடியும். முஸ்லீம் அல்லது கிருஸ்துவராக இருந்தால், கார்டியனாக முடியும். என்று இருந்தது.

இந்துவாக இருந்தாலும், கார்டியனாக இருப்பது எப்படி, இது குறித்து மேல் விபரம் தெரிந்து கொள்ளும் எண்ணம் வருகிறது.

என்.டி.டி.வி பேட்டியில், ஹிந்து லா-வின் படி, உங்களுக்கு ஆண்குழந்தை முன்னரே இருந்தால் பெண்ணும், பெண்குழந்தை முன்னரே இருந்தால் ஆண் குழந்தையுமே தத்து எடுக்க அனுமதிக்கப்படும் என்று ஒரு விபரம் சொல்லியிருந்தார்களாம். இது போன்ற சட்டங்களைத் தெளிவாகச் சொல்லும் இணையதளம் உண்டா?ம்.. தேடவேண்டும்.

இதற்கு நடுவில், அமெரிக்க சம்பந்தமான ஒரு செய்தியும் கண்ணில் பட்டது, அதில், சுனாமி பாதிப்பிற்குள்ளான அனாதைக் குழந்தைகளை அடாப்ட் செய்யும் அனுமதி இப்போதைக்கு அமெரிக்க சிட்டிசன்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி இருந்தது.

ஏன் என்னும் போது, அந்த குழந்தையின் பெற்றோர் திரும்ப வரவோ, அல்லது உறவினர்கள் கண்டுபிடிக்கப்படவோ வாய்ப்பு இருப்பதால், கண்டிப்பாக் அந்த குழந்தை பெற்றோரற்ற குழந்தை என்று நிச்சயமாக சில மாதங்களாவது ஆகும். அதனால், இப்போதைக்கு அனுமதி மறுப்பு என்று தெளிவு படுத்தியிருந்தார்கள்.

அது என்னவோ சரிதான் என்று தோன்றுகிறது.

கூடவே அண்ணா யுனிவர்சிடி ஆதரவற்ற குழந்தைகளின் விபரங்களுடன் ஒரு தளம் அமைத்திருப்பதாக ஒரு செய்தி மாலைமலரில்... http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=33602
ஆனால் அப்படி ஒரு தளம் எங்கிருக்கிறது?! :-(
posted by சாகரன் @ 1/03/2005 06:45:00 PM  
2 Comments:
  • At 5:23 PM, Anonymous Anonymous said…

    (11.1.2005) ரோஸாவசந்த் said...

    சாகரன். தவலுக்கு நன்றி. ட்சுனாமி மீட்பு பணிகள் குறித்து விவாதிக்க புதிய வலைப்பதிவு தொடங்க பட்டுள்ளது. http://relieftsunami.blogspot.com/ அதில் உங்களின் இந்த பதிவை சேர்த்துகொள்ளலாம என்று சொல்லுங்கள். இப்படியே அல்லது எடிட் செய்து உங்கள் விருப்பம் வகையில் இதை இந்த வலைப்பதிவில் பதியலாம். நன்றி!

     
  • At 2:15 PM, Blogger Magesh said…

    (12.2.2006) Mageshram said...

    Really excited to go thro your blog... Good work.. Fantastic to read in Tamil....

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER