சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, January 15, 2005
குழப்பம்தான் மிஞ்சும்.
தமிழ் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள். எத்தனையோ பெயர்களில்...

இணையத்தில் நடந்த உரையாடல்களை கொண்ட ஜெயமோகனின் ஒரு புத்தக முன்னுரையில், "தமிழில் 10000 க்கும் அதிகமான புத்தகங்கள் வெளிவருகின்றன.. ஆனால், 300 புத்தகங்களுக்கு மட்டுமே மதிப்புரை எழுத இயலும்,இப்போதுள்ள ஊடகங்கள் மூலம்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கென்னமோ அதுவுமே அதிகம் என்று தோன்றுகிறது!

புத்தக மதிப்புரையால் மட்டுமே ஒரு புத்தகம் மக்களிடையே ரீச் ஆகிவிடும் என்று சொல்ல முடியாது. அப்படி இருந்தாலும் கூட, அது பிரபல பத்திரிக்கையின் புத்தக விமர்சனமாக இருந்தால் மட்டுமே ரீச் ஆகும். அதிலும், பாலிடிக்ஸ் இருன்ந்தால்?! என்க்கு இந்த துறையின் எதிர்காலம் குறித்து கேள்வி இருக்கிறது.

இவ்வளவு புத்தகங்கள் எப்படி?, இதிலிருந்து முத்தெடுப்பது எப்படி? பாதிக்கு மேல், திரும்பத் திரும்ப சுழற்றி அடிக்கும் மாற்றி மாற்றி சொன்னதையே வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லும், 'சுமார்' புத்தகமாக இருக்காது என்பது என்ன நிச்சயம்?

பல வருடங்களுக்கு முன்னரெல்லாம், புத்தகம் என்றால் பிரபல எழுத்தாளர்கள் மட்டுமே கண்ணில் படுவர். ஆனால் இப்பொழுது ஏராளமான எழுத்தாளர்கள். யாருமே அந்தளவு பிரபலம் இல்லை. ஏனென்றால், வெகுஜனப்பத்திரிக்கைகளில் அவ்வளவு எழுதுவது இல்லையோ என்னமோ!

இது சரியா என்று தெரியவில்லை. ஆனால் வெகுஜனப்ப்பத்திரிக்கைகளில் எழுதி பிரபலமானவர்கள் மட்டுமே சராசரி மக்களுக்கு வெகுபழக்கம்.

அப்படி சராசரி மக்களுக்குப் பழக்கம் இல்லாதவர்களின் புத்தகம் விற்க வேண்டுமானால், அது ஜோதிடம், ஆன்மீகம், சம்பந்தமாக இருந்தால் எடுத்துப்பார்க்கலாம்.

1000 பேர் வந்தால், அதில் குறைந்தது 990 பேர் சராசரி வாசகர்கள். என் அம்மா , எங்கள் குடும்ப உறவினர்கள் உட்பட பலர் எனக்கு முன்னரே இந்த கண்காட்சியைப் பார்த்திருந்தார்கள்.

அவர்கள் வாங்கி வந்த புத்தகங்கள் அனைத்தும், வெகுஜன பிரப்லயமானவை அல்லது ஆன்மீகம் சம்பந்தமானவை..(குமுதம் ஜோதிடப்புகழ்.., சோ, ஆன்மீகம்) இதெல்லாம்தான்.

'அள்ள அள்ள பணம்', என் மாமனார், பார்த்துவிட்டு படித்துவிட்டுத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் பங்குச் சந்தையையே இப்பொழுது சுவாசமாக செய்பவர்.

மொத்தத்தில், இதெல்லாம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் இல்லாமல், இந்த கண்காட்சிக்குச் செல்வது... வேடிக்கை பார்க்க மட்டுமே உதவும்.(பா.ரா, பட்டியல் பிரிண்ட் எடுத்துக்கொண்டு மறுபடிப் போகப் போகிறேன். என்னைப் போன்ற சராசரி வாசகருக்கு இது போன்ற பட்டியல் இந்த நேரத்தில் மிகவும் உதவி. - நன்றி பரி)

"..ர..ர.. சங்கர" ஜெயகாந்தனின் புத்தகம். ரொம்ப சுமார். எனக்குப் பிடிக்கவில்லை. (சொல்லிய செய்திக்காக அல்ல... என்னமோ போர் அடித்தது. அவருடைய முன்னுரை அதைவிடக் குழப்பம்.அவசியம் படிக்க வேண்டும் என்ற புத்தகப் பட்டியலில் நான் இதைச் சேர்க்க விரும்பவில்லை.)
posted by சாகரன் @ 1/15/2005 08:04:00 AM  
1 Comments:
  • At 12:07 PM, Anonymous Anonymous said…

    (15.1.2005) sakaran said...

    lot's of spelling mistakes... :-( sorry about it.. i was writing from a machine using suratha raavanan.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER