சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, January 14, 2007
விசாலமும் - விசாகாவும் (Visaka Hari)
"விசாகா ஹரி" - இன்றைய தமிழகத்தின் சங்கீதப் புயல்! இவர் மட்டும் மெயின் ட்ராக் பாட வந்திருந்தால் பலர் ஓரம் கட்டப்பட்டிருப்பர் - இப்படி ஒரு கட்டுரை நான் கல்கியில் படித்து சில மாதங்களுக்கு மேலாக இருக்கும். நண்பர் ஒருவர் மூலமாக அவரது 'ஹரி கதா' எம்.பி.3 கிடைத்து நான் கேட்டிருக்கிறேன். முழுக்க முழுக்க பிராமண பாஷையில் நிகழ்த்தப்படும் உபன்யாசம். கூடவே சங்கீதமும். இரண்டு மணி நேரம் கேட்க பொறுமையில்லாமல் பாதியில் நிறுத்தியிருக்கிறேன்.
*
இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். இன்று மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு முக்கிய டெக்னாலஜி இம்ப்ரூவ்மெண்ட் - ஒலிப் புத்தகங்கள்.
இன்று கூட பத்ரியின் பதிவில் இது குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
ஒலிப் புத்தகங்கள். இன்று அதிக அளவில் இணையத்தில் விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது. சுமார் 300 MB அளவில் ஹாரிப்பாட்டரின் எம்.பி.3 ஆடியோ புத்தகம் எனக்கு கிடைத்தது. கேட்க ஆரம்பித்த சில நிமிடங்களில் நம்மை படிக்கும் உலகிற்கு அழைத்துச் செல்லும் குரல். ஆனால் எனக்கு இதிலிருக்கும் சந்தேகமெல்லாம் - எவ்வளவு நேரம் பொறுமையாக கேட்க முடியும்? நீண்ட புத்தகங்களாக இல்லாமல் 10 பக்கங்களுக்கு ஒன்று என்ற விதத்தில் ஒருவேளை எம்.பி.3 கிடைக்கப்பெற்றால் நன்றாக இருக்கும். அதைவிட முக்கியம். புக்மார்க்கிங்க். எங்கிருந்து விட்டோமோ அங்கிருந்து திரும்ப ஆரம்பிக்க இயல வேண்டும். பல இடங்களில் குறித்துக்கொள்ள இயலவேண்டும். அப்படிப்பட்ட மென்பொருட்கள் ஆடியோ புத்தகங்களுக்காகவே இருந்தால் நன்றாக இருக்கும். (ஏற்கனவே இருக்கலாம்). இந்த டெக்னாலஜியின் பிரச்சனை மற்றவை போலத்தான். ஒரு முறை எம்.பி.3 வந்துவிட்டால் அவ்வளவுதான். ஆளாளுக்கு அடுத்தவருக்கு அனுப்பிவிடுவார்கள். பணம் பார்ப்பது கடினமாகிவிடலாம்.

இதற்கும் ஒரு அருமையான டெக்னாலஜியை ராகா பயன்படுத்தியிருக்கிறது. ராகா.. மைக்ரோசாப்டின் காப்பிரைட் மெதேடை பயன்படுத்துகிறது. இந்த டெக்னாலஜி ஈ-புத்தகங்களின் அமைப்பை ஒத்தது. அதனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட கணினிக்கு மட்டுமேயான காப்பிரைட்டினைத் தருகிறார்கள்.

*
சென்னை கிருஷ்ண கான சபாவில் காலை 9 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்துவிட்டது. சுற்றிப்போய் பின் பக்கமாக நுழைந்து எள் விழக்கூட இடமில்லாத கூட்டத்தினிடையே ஊடாடிப்போய் ஒரு தூண் ஓரமாக நின்று கொண்டு கேட்க ஆரம்பித்தேன்.

விசாகாவின் குரலின் இனிமையும் கம்பீரமும் பாவமும் சர்வ நிச்சயமாக கூட்டத்தினை கட்டிப்போட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை 'வெள்ளை தலை'கள். என்னைத் தவிர என் வயதொத்த இளைஞர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தேன். ஒருவர் கூட கண்ணில் படவில்லை. ஓரிரு இளைஞிகள் இருந்தனர். ஒருவேளை சங்கீதம் படிப்பவர்களாக இருக்ககூடும் அல்லது பாட்டி தாத்தாவை அழைத்து வந்திருக்கக்கூடும்!

தியாகராசரின் சரிதம். பின்னி எடுத்துக்கொண்டிருந்தார் விசாகா. இவரது ஸ்பெஷாலிட்டியே சங்கீதமும் கதையும் சேர்த்து சொல்வதுதான். கேசட் எல்லாம் வேஸ்ட். நேரடியாக கேட்கும் போது கிடைக்கும் திருப்தியே அலாதி! கர்னாடக சங்கீதத்தில் எனக்கு மிகவும் பிடித்தது தமிழ்ப்பாடல்கள் இதற்காகவே ஸ்பெஷலாக எனக்கு நித்யஸ்ரீயைப் பிடிக்கும். நிறைய அருமையான தமிழ்ப்பாடல்கள் கொண்ட கேசட்கள் இவருடையவை. அன்றைய தியாகராசரின் சரித்திர உபன்யாசத்தில் தமிழிசை எங்கு இருக்கப்போகிறது என்று நினைத்திருந்தேன். சரிதத்தின் ஓரிடத்தில் சரஸ்வதியின் பெயர் வரும்போது - சட்டென்று 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்ற பாரதியின் பாடலைப் பாடி என்னை ஆச்சரியப்பட வைத்தார்.

*
விசாகா பற்றி: இந்த வருடத்தின் டிசம்பர் சீசனில், வேறு யாருக்குமே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் குவிந்தது, 'விசாகா ஹரி' அவர்களுக்கு மட்டும்தானாம்! நாரத கான சபா-வில் ரெக்கார்ட் பிரேக் செய்ததாம் கூட்டம்! ஒரு பெரிய ரவுண்ட் வரப்போகிறார் இவர் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது!!
posted by சாகரன் @ 1/14/2007 05:44:00 PM  
1 Comments:
  • At 3:20 PM, Blogger Bala said…

    ஸ்ரீமதி விசாகா ஹரி பெரிய சுற்று வரப் போகிறார் என்பது் பொய். ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். நான் அவருடைய நிகழ்ச்சிகளை நேரில் கேட்டதில்லை.இந்த வருடம் ஜெயா தொலைக்காட்சியில் கேட்டதுதான். அதில் தியாகய்யரின் சரித்திரம். மடை திறந்த வெள்ளம் போல் தியாகயைரின் கீர்த்தனைகளுடன் கூடிய சொற்பொழிவு. இவரது நடையை lec-con(lecture concert) என்று கூறுகிறார்கள். இது ஹரி கதையிலிருந்து சற்று வேறு பட்டது. பாடல்கள் ராக ஆலபனைகளுடன் பாடப்படுகின்றன.

    சிறு கொசுறு: இவரின் கர்னாடக சங்கீத குரு - லால்குடி ஜெயெராமன. ஹரி கதைக்கு ஸ்ரீ கிருஷ்ணப்பிரேமி. பின்னர் வித்வத்திற்கு கேட்க்கவா வேண்டும்? இவர் ஸ்ரீ கிருஷ்ணப்பிரேமியின் மருமகளூம் கூட. அவரின் மகன் திரு ஹரியை மணந்துள்ளார்.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER