சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Friday, May 19, 2006
நேர மயக்கம்

வழக்கமாக இப்படி ஒரு தலைப்பு இருந்தால் ..

அதற்கு சம்பந்தமாக ஏதாவது ஒரு மகிழ்வான சம்பவத்தை எழுதி வைப்பது வழக்கம். ஆனால் நான் இங்கு எழுதப்போவது அப்ப்டி ஒன்றும் சுவையான சம்பவம் இல்லை. இது ஒரு முயற்சி. என்னைச் சுற்றியுள்ள இடங்களை என்னை பாதித்த விதத்தில் பகிர்ந்து கொள்ள செய்யும் ஒரு சோதனை.

நிற்க.

இன்றைய தினம், வெயிலின் கடுமையை விட, காற்றில் காற்றாகவே கலந்திருக்கும் மெல்லிய் தூசியின் நெடிதான் தூக்கலாக இருக்கிறது. இது அலர்ஜியில் கொண்டுவந்து விடக்கூடிய ஒன்று. பெரும்பாலானவர்களுக்கு இந்த கிளைமேட் மாற்றம் ஜுரம் , தலை சுற்றல் போன்ற வேதனைகளை தந்துவிடும்.

இன்னும் சில நேரங்களில் அலுவலகம் முடிந்துவிடக்கூடும். சவுதி அரேபியாவின் ஸ்டாக் இண்டெக்ஸ் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அடுத்த சீட்டிலிருக்கும் நண்பர் அவ்வப்போது கணினியின் எக்ஸ்ப்ளோரர் ஜன்னலைத் திறந்தும் மூடியும் பார்த்தவண்ணம் இருக்கிறார்.

இன்றைய தினம், இதுதான் ஹாட் டாபிக். இரண்டு பேர் ஒன்றாகச் சேர்ந்தாலே, சவுதி அரேபிய ஸ்டாக் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு இந்த ஸ்டாக் மார்க்கெட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பற்றி தெளிவாகவே தெரிந்திருக்கிறது.

எப்பொழுதுமே ஒரு லாபம் தரும் செயல் பலராலும் செய்யப்பட்டால் சட்டென்று அந்த தொழிலே உடைந்து போய்விடும். உதாரணத்திற்கு, செனையில் லாபம் தரும் தொழிலாக பார்க்கப்ப்ட்ட பிரவுசிங் செண்டர்கள் மூலைக்கொண்றாக வந்துவிட்ட பின்னர், இப்போது சுமாரான லாபம் தரும் சராசரித் தொழிலாகவே மாறிவிட்டது. புற்றீசல் போல முளைத்த கடைகள் காணாமல் போய்விட்டன. இதே போலத்தான் ‘டாட்காம்’ ஸ்காம் கூட.

சவுதியிலும் இரண்டு மாதங்கள் முன்பு வரை எவரும் எதிர்பாரா வண்ணம், சுமார் 21000 பாயிண்டுகளை மூன்றே மாதங்களில் தொட்ட இண்டெக்ஸ், சட்டென்று இரண்டு வாரங்களில் 15000 ஐத்தைத் தொட்டு, இன்றோ 10000 ஆயிரத்திற்கு இறங்கி விட்டது. இன்னமும் குறைந்து சுமார் 8500 பாயிண்டுகளில் ஸ்டேபிளாகும் என்று சொல்கிறார்கள். ‘சவுதி கெசட்’ -ல் எழுதப்பட்ட சில கட்டுரைகள் சில நிமிடங்காள் முன்பு மின்னஞ்சலாக வந்தது, இது போன்ற சில தகவல்களுடன்.

சவுதி அரேபிய கவர்மெண்ட் எக்ஸ்பாட்ரியேட் தொழிலாளிகளும் ஸ்டாக்-கில் இன்வெஸ்ட் செய்யலாம் என்று சொன்னவுடன், என் அலுவலகத்தில் இருக்கும் பல நண்பர்களும் கணக்கு திறந்து விட்டார்கள்.

பார்க்கும் போதும், பேசும் போதும் ‘ஏறுது’ ‘இறங்குது’ என்று ஸ்டாக் மார்க்கெட் பற்றிய பேச்சாக்வே இருக்கிறது. நான் பணம் போடவில்லை (!) என்பதால் கொஞ்சம் சுவாரஸ்யமாகக் கூட இருக்கிறது. எப்பொழுதுமே வெட்டிப்பேச்சு சுவாரஸ்யம்தானே! அதனால் ஏற்படும் நேரமயக்கம் சுவாரஸ்யமாகவே இருந்தாலும்…

posted by சாகரன் @ 5/19/2006 07:02:00 PM   0 comments
Thursday, May 11, 2006
தேர்தல் முடிவு நாள்

சீக்கிரம் எழுந்து சன் டீவி பார்ப்பது வேஸ்ட் போலும். முந்தைய கருத்துக் கணிப்புகளைப் போலவே இருக்கிறது முடிவுகள். வாழ்த்துக்கள் திமுக.

இந்த தேரதல் நாளில் ஒரு ஜோக் - ஜெயா டிவியில் தொடர்ந்து அதிமுக முன்னணியில் இருப்பதான மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவது:-)

ஈராக் போரில் ஒரு செய்தித் தொடர்பாளர் இருந்தார். அடுத்த தெருவில் அமெரிக்கா இருந்த போதும் கூட அமெரிக்கா ஈராக்க்குள் நுழையக்கூட இல்லை என்று சாதித்து வந்தார். (போர் முடிந்த பின்னர் காணாமல் போய்விட்டார்!) அவரை குறித்து ஏகப்பட்ட ஜோக்குகள் இணையத்தில் உலவி வந்தன. அதே போலத்தான் ஜெயா டிவியின் பிரசாரமும்.

இந்த தேர்தலில் இட்லிவடை என்ற தளம் மிக மிக சூப்பர். நிறைய விசயங்களை அப்பப்போ வழங்கி கலக்கிட்டாங்க.

posted by சாகரன் @ 5/11/2006 07:07:00 PM   0 comments
Wednesday, May 10, 2006
தேர்தல் 2006

தேர்தல் முடிவுக்கு வந்துவிட்டது. வழக்கம் போல ஆளும் கட்சி மாறி எதிர்கட்சி ஆட்சிக்கு செல்லும் என்பது நிச்சயமாகிவிட்டது.

இதற்கான காரண்ங்கள் என்னவாக இருக்கக்கூடும் என்பது தெரிந்ததுதான்.

ஜெ.. இன்னமும் நிறைய செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்பது வருத்தம். கொண்டுவந்த நல்ல திட்டங்களைக் கூட திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டார்கள். இது ஒரு தவறு. ஏற்கனவே உள்ள திட்டங்களையும் உடைத்து எறிந்துவிட்டார்கள்! திமுகவின் மீது எரிச்சலுடன் செயல்படுவதே சில வருடங்களுக்கு அவர்கள் வேலையாக இருந்தது.

போஸ்டல் வோட் - ஏன் வெளிநாட்டினருக்கு ஏற்பாடு செய்வதில்லை? இதற்கான முயற்சி செய்யப்படுவதில்லையா என்ன?!

posted by சாகரன் @ 5/10/2006 07:05:00 PM   0 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER