சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, February 04, 2007
Hats of to you madam! (or) குருவி படம்
நான் படித்த ஸ்கூலும் சரி, நான் படித்த கல்லூரியும் சரி இரண்டும் கோ-எடுகேஷன். எனவே எனக்கு எதிர் பாலாரிடம் பழகுவதில் என்றுமே தயக்கம் இருந்ததில்லை. நான் நன்றாக ப்ரீயாகப் பேசுவேன். இது என்னுடைய தாய்க்கு மிகுந்த கவலை தருவதாக இருந்தது. ஏன் உண்மையைச் சொன்னால் என்னைப் பலர் அப்பொழுது தவறாகவே நினைத்தார்கள். சகஜமாகப் பேசிப் பழகும் பெண்கள் மேல் இருக்கும் உலகின் சந்தேகப் பார்வை என் மீதும் இருந்தது.:-) தொடர்ந்து நான் முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நோக்கமும் எனக்குத் தெளிவாகவே இருந்தது.

எனக்கு பி.யூசி முடித்தவுடன் மருத்துவப் படிப்பிற்கான சீட் கிடைக்கவில்லை. அடுத்த ஒரு வருடத்திற்கு பி.எஸ்.ஸி பயோ கெமிஸ்ட்ரி கிளாசுக்கு போய் குருவிப் படம் போட்டுக்கொண்டிருந்தேன். ஆம், என் எண்ணமெல்லாம் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்பதாகவே இருந்ததால், 'குருவி படமும்' 'கிளி படமும்தான்' என்னுடைய பயோ கெமிஸ்ட்ரி நோட்டுப் புத்தகங்களில் இருக்கும்! :-) கடவுள் கருணையால் அடுத்த வருடம் என்னுடைய கனவான எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது. அந்த நேரத்தில் நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நான் சர்ஜிகல் லைனில் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். என்னை விட ஒரு மதிப்பெண் குறைந்த மார்க் வாங்கிய மாணவரை சர்ஜிகலுக்கும் என்னை அனலிதிகலுக்கும் (?) அனுப்பி வைத்தார்கள். கேட்டதற்கு அவர் ஆண் என்பதால் சர்ஜிகல் அவருக்கு தந்திருப்பதாகச் சொன்னார்கள். இதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் இன்று, நான் இந்த முடிவிற்காக மிகவும் மகிழ்கிறேன். ஏனென்றால் 'சர்ஜிகல்' என்ற வேலையின் ரெஸ்பான்ஸிபிலிட்டி மிக மிக அதிகம்.

இதன் பின்னர் என்னுடைய வாழ்க்கையின் மிக இனிமையான நிகழ்ச்சிகள் நடந்தன. என்னுடைய காதல் கணவருக்கு நான் 'யெஸ்' சொன்னேன்! உண்மையாகச் சொன்னால் பள்ளிக்கூட காலத்திலிருந்தே நானும் அவரைக் காதலித்துதான் வந்திருந்தேன்:-) ஆனால் என்றுமே சொல்லியது கிடையாது. இன்னும் கூட அவரிடம் 'இதெல்லாம் வேணாம் ஒழுங்கா படிப்பைப் பாருங்க' என்றெல்லாம் அட்வைஸ் கொடுத்திருக்கிறேன். 11 வருடங்கள் கழித்துதான் நானும் 'யெஸ்' என்பதைச் சொன்னேன். இன்று என் கணவன் மற்றும் மகனுடன் மிகவும் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என்னுடைய தினசரி வேலைகளில் இவர்கள் இருவரும் எனக்கு நிறைய உதவிகள் செய்கிறார்கள்.

இன்னும் இரண்டு மாதத்தில் என்னுடைய வீட்டில் மீண்டும் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி நடக்கப்போகிறது. என்னுடைய விருப்பப்படி ஒரு பெண் குழந்தையை அடாப்ட் செய்ய முடிவு செய்திருக்கிறேன். அனைத்து பார்மாலிட்டிகளும் முடிந்துவிட்டன. கடவுள் கருணையால் அந்தக் குழந்தையை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்.

என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளான, 'மக்களுக்கு சர்வீஸ்' என்பதில் நான் ஓரளவுக்கு வெற்றி பெற்று விட்டேன். இனியுள்ள என் வாழ்க்கையின் குறிக்கோள் 'அனாதைக் குழந்தைகளுக்கான ஒரு இல்லம்' அமைத்து அவர்களுடைய வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டுமென்பதுதான். இதற்காக என்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு பெரும் பகுதியை நான் சேமித்து வருகிறேன். என்னுடைய இந்தக் குறிக்கோளும் நிறைவேற இறைவன் துணை நிற்பான் என்று நம்புகிறேன்.

**

குடும்பத்தினையும் கவனித்து, பணியிலும் தெளிவாக இருந்து, வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும் சாதிக்கும் முயற்சியோடு வாழும் பெண்கள் இந்த உலகத்தின் உயிர் நாடிகள். டாக்டர் தஹ்சீன் சுல்தானா அவர்களுக்கு என் மனதார ஒரு 'ஹேட்ஸ் ஆப் டு யூ மேடம்' சொன்னேன்!

~~~**~~~

பிரபல பாடகர் ஒருவரின் கஜலும், பிரபல பேச்சாளரின் பட்டிமன்றமும் ஒரே தினத்தில் இங்கு நடந்தேறியது. நமது ரியாத் எழுத்துக்கூடத்தின் ஆஸ்தான கவிஞர்கள் இருவரும் பட்டிமன்றத்தில் பங்குபெற்று சிறப்பித்தது மகிழ்ச்சிக்குறிய விடயம்!

~~~**~~~

அவளுக்கு டான்ஸ் என்றால் கொள்ளை பிரியம். அவளுடைய அம்மாவும் டான்ஸர். டான்ஸ் என்றால் சாதாரணமாக இல்லை. பெல்லி டான்ஸ். இடுப்பை ஆட்டும் வேகத்தில் பார்ப்பவர் மனசும் சேர்ந்து ஆடும்! ஒரு பிரபல டான்ஸரிடம் சேர்கிறாள். கண் சரியாகத்தெரியாத ஆசிரியர் ஒருவருடன் பழகுகிறாள். அவள் வயதொத்த ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள்;கைபிடிக்கிறாள். ஆனால் கணவனுக்கு இவளது ஆடல் பிடிக்கவில்லை. தனக்காக மட்டுமே இவளது ஆடல் இருக்க வேண்டுமென நினைக்கிறான். இது சரியா? அவளால் ஒத்துக்கொள்ள இயலவில்லை. என்னுடைய கழுத்திற்குக் கீழ் இருக்கும் உடல் மட்டுமே உனது என்று கணவனிடம் ஒப்புக்கொடுக்கிறாள். பின்னர் ஒரு கட்டத்தில் விலகி வந்துவிடுகிறாள். இதற்குள் ஆசிரியருடனான இவளது பழக்கம் அதிகரிக்கிறது. ஆசிரியரின் அறிவில் மயங்குகிறாள். ஆசிரியர் ஒரு அரபி மொழி வித்துவர். 'காதல் காமம் இவையனைத்தும் அரபியின் பழைய இலக்கியங்களில் இருக்கும் போது இன்றைய காலத்தில் இதிலிருந்து ஒதுங்கியிருக்கச் சொல்வது தவறு' என்ற கோட்பாடுடையவர். இந்த சூழலிலிருந்து இலக்கியத்தை மீட்டெடுக்கவேண்டுமென்ற ஆர்வம் உடையவர். கதாநாயகி, ஆசிரியரின் கோட்பாடுகளால் கவரப்படுகிறாள். கிளிட்டோரஸ் அறுக்கப்படுமொரு இளம்பெண்ணிற்காக வேதனைப்படுகிறாள். ஒரு கட்டத்தில் ஆசிரியருடன் இணையவும் துணிகிறாள். அந்த இறுதி முயக்கத்திற்குப் பிறகு ஆடல் மட்டுமே அவளது வாழ்க்கையாகுகிறது. நீண்ட தூரத்திற்கு பாலைவனமாகத்தெரியும் ஒரு பாலைவனத்தின் மலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவளது ஆட்டம் தொடர்கிறது. திரை விழுகிறது.

- சென்னையில் பிலிம் பெஸ்டிவலில் பார்த்த ஒரு படத்தின் கதைச்சுருக்கம்.

~~~**~~~

சவுதி ஸ்டாக் மார்க்கெட் 6700 இண்டெக்ஸை தொட்டு விட்டு இப்பொழுதுதான் எழுந்து கொண்டிருக்கிறது. 10 மாதத்தில் 22ஆயிரத்திலிருந்து 6700 க்கு இண்டெக்ஸ் செல்லும் என்று எவரும் எண்ணியிருக்கக்கூட இயலாது.

'இன்னிக்கித்தான் ஊரிலேர்ந்து வந்தேன் மச்சி. ஒரு கம்பெனியில ஸ்டாக் வாங்கியிருந்தேன். இப்ப 3000 ரியால் மாட்டிகிட்டிருக்கு. ஆனா ஒரு சேஞ்சும் இல்லை. என்னன்னு கேட்டா கம்பெனியையே de-list பண்ணிட்டாங்க சொல்றாங்க. இப்ப என்ன பண்ணனும் தெரியலையே'

Labels: , , ,

posted by சாகரன் @ 2/04/2007 05:40:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER