Sunday, January 09, 2005 |
பதினோரு மாத சம்பளம்! |
ஏதோ ஒரு பேச்சு. நடுவில் நுழைந்தார் என் பிராஜக்ட் மேனேஜர்.
எந்த விசயத்திலும் ஏதாவது பேசக்கூடியவர்...! சுவாரஸ்யமான ஆள்!!
"நாங்கள்லாம் கொடுத்து வச்சவங்கப்பா... எங்க காலத்தில அதாவது 18-20 வருடம் முன்னால எல்லாம், பெண்கள் கல்யாணம் பண்ணிகிட்டா, வீட்டில் உள்ள பொறுப்பு எல்லாம் அவங்களோடது, சமையல, குழந்தையை கவனிச்சுக்கறதெல்லாம் அவங்க வேலை அப்படின்னு கிளியரா இருந்தாங்க. அதனால, we were enjoying both the worlds. வீட்லயும் நிம்மதியா இருக்கும், வெளியிலயும் நம்ம ஆக்டிவிட்டீஸ் எப்பவும் போல இருக்கும். ஆனா, இப்ப அப்படி இல்லை.
எங்க காலத்தில் என் மகன் குழந்தையா இருந்தப்போ நான் ஏதாவது உதவி செய்தால் கூட, மத்தவங்க வித்தியாசமா பார்ப்பாங்க.. 'இவன் என்ன லூசா. இதெல்லாம் போய் செய்றானே' அப்படிங்கறமாதிரி. ஆனா இன்னிக்கி இதெல்லாம் செய்யாம இருக்கவே முடியாது. வீட்லயும் நீங்க வேலை செய்யணும், வெளி ஈடுபாடுகளையும் குறைச்சுக்கணும்...
உங்க பாடு திண்டாட்டம்தான் :-)
இந்தியாவில இந்த நிலை இப்ப 50-50 பர்ஸண்டேஜ்ல இருக்கு. அமெரிக்காவில இருக்கற பசங்கள்லாம்.. இப்ப கல்யாணம்னு வரும்போது இந்தியாவில இருக்கிற, வில்லேஜ் கேர்ள்ஸ் வேணும்னுதான் கேட்கறாங்களாம்!"
இதில் எவ்வளவு தூரம் உண்மை என்ற வாதத்தை அந்தப்பக்கம் தள்ளி வைத்துவிடலாம். ஆனால், இது மிகவும் சுவாரஸ்யமான பேச்சுப் பொருள் என்பது மட்டும் நிச்சயம்; அதிலும் முக்கியமாக ஆண்களுக்கு!
*
சமீபத்தில் ஒரு மின்னஞ்சல்.. என் பெயரும் உன்பெயரே என்று சொல்லி, நானும் ரியாத்-தில் தான் எனக்கு ஒரு போன் செய்ய முடியுமா என்று கேட்டு! அட... எப்படியெல்லாம், காண்டாக்ட் கிடைக்கிறது!! பேசியபோது, இணையத்தில் என் தளத்தில் உள்ள அட்ரஸ்/ குடும்ப விபரம் எல்லாமே படித்திருந்தார்! நட்பு என்பது எப்படி வேண்டுமானாலும், ஏற்படும். அதிலும் இணையம், ஒரு சுவாரஸ்யமான ஊடகம்.
ரியாத் வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறதாம்... ஆனால், 'மிடிலீஸ்டில் 12 வருடங்கள் இருந்திருக்கிறேன்' என்றார்.
'அப்புறமும் எதுக்குங்க திரும்பி இங்கியே!?'
'இந்தப் பக்கம் இருந்துட்டு திரும்ப இந்தியாவில செட்டில் ஆகறதுங்கறது கொஞ்சம் கஷ்டம்தான்...'.
நானறிந்த பலர் இப்படித்தான் திரும்பியிருக்கிறார்கள்!
*
ரியாலுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சர சரவென்று குறைந்துவிட்டது. சென்ற இரண்டு வாரங்களுக்கு முன், 12.33 என்று இருந்தது, இந்த வாரம், 11.48 ஆகிவிட்டது. இன்னமும் குறைந்து 10.90 வரும் என்று சொல்கிறார்கள். ஒரு சிறு கால்குலேசன் போட்டு பார்த்தால்.... கிட்டத்தட்ட 1 ரியாலுக்கு ஒரு ரூபாய் இழப்பு!
100 ரியாலுக்கு --> கிட்டத்தட்ட 100 ரூபாய் இழப்பு....
ஒரு வருடத்தில் 1200 ரூபாய் இழப்பு... அதாவது, ஒரு வருடத்திற்கு 11 மாத சம்பளம்தான்!!
'சை.. இதெல்லாம் கால்குலேட் பண்ணவே கூடாது!' - என்னிடமே நான்!
*
இன்னும் இரு தினங்களில் சென்னை பயணம்....
|
posted by சாகரன் @ 1/09/2005 05:45:00 PM |
|
9 Comments: |
-
(10.1.2005) said...
உங்கள் பிராஜக்ட் மனேஜர் பேசுவது போலவே நீங்கள் சுவாரஸ்யமாக எழுதுகிறீங்கள். நானும் யேர்மனிக்கு வந்த புதிதில் இலங்கை ரூபாவையும், யேர்மன் மார்க்கையும் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
சந்தோசமாக சென்னை போய் வாருங்கள். வாழ்த்துக்கள்.
நட்புடன் சந்திரவதனா
-
(10.1.2005) said...
உங்கள் பிராஜக்ட் மனேஜர் பேசுவது போலவே நீங்கள் சுவாரஸ்யமாக எழுதுகிறீங்கள். நானும் யேர்மனிக்கு வந்த புதிதில் இலங்கை ரூபாவையும், யேர்மன் மார்க்கையும் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
சந்தோசமாக சென்னை போய் வாருங்கள். வாழ்த்துக்கள்.
நட்புடன் சந்திரவதனா
-
(10.1.2005) சாகரன் said...
நன்றி சந்திரவதனா...
அன்புடன், சாகரன்.
-
(11.1.2005) மூர்த்தி said...
இங்கயும் அதே கதைதான் சாகரன்...
-
(12.1.2005) ஷ்ரேயா said...
எல்லாம் சரி...உங்க வீட்டில 50- 50 யா? ;o) பயணம் இனிதாயும் பாதுகாப்பாயும் அமைய வாழ்த்துக்கள்.
-
(13.1.2005) sakaran said...
நன்றி, ஷ்ரேயா... பயணம் சுபம்!
-
(21.1.2005) Dondu said...
ரூபாயின் மதிப்பு ரியாலுக்கு எதிராக அதிகரித்தால்தான் நீங்கள் கூறும் நிலை ஏற்படும். நீங்கள் கூறியது: "சென்ற இரண்டு வாரங்களுக்கு முன், 12.33 என்று இருந்தது, இந்த வாரம், 11.48 ஆகிவிட்டது. இன்னமும் குறைந்து 10.90 வரும் என்று சொல்கிறார்கள். இது ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதையே குறிப்பிடுகிறது. இது உங்களைப் பொருத்த வரையில் நல்ல விஷ்யம் இல்லையென்பது வேறு விஷயம். இப்போது உள்ள நிலயில் கையில் இருக்கும் ரூபாய்களை வைத்துக் கொண்டு அதிக ரியால்கள் பெறலாம். இந்தியாவிற்கு வரும் இறக்குமதியின் விலை குறையும்.
அன்புடன், டோண்டு ராகவன்
-
(21.1.2005) sakaran said...
ada... unmaithaan dondu raagavan! thanks for the correction!!
-
(22.2.2005) KVR said...
//ada... unmaithaan dondu raagavan! thanks for the correction!!//
என்ன சாகரரே, வங்கியிலே வேலைப் பார்த்து இப்போ தானா இது தெரியுது. ம்ஹ்ம் ஒண்ணும் சரி இல்லை :-).
|
|
<< Home |
|
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|
(10.1.2005) said...
உங்கள் பிராஜக்ட் மனேஜர் பேசுவது போலவே நீங்கள் சுவாரஸ்யமாக எழுதுகிறீங்கள்.
நானும் யேர்மனிக்கு வந்த புதிதில் இலங்கை ரூபாவையும், யேர்மன் மார்க்கையும் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
சந்தோசமாக சென்னை போய் வாருங்கள்.
வாழ்த்துக்கள்.
நட்புடன்
சந்திரவதனா