Wednesday, December 29, 2004 |
ரியாத்-வெடிகுண்டு ? |
10 நிமிடத்திற்கு முன் வீடு திடீரென்று அதிர்ந்தது. (போனில் இருந்த நண்பர் மோகனும் உணர்ந்ததாகச் சொன்னார். ) வீடு அதிரலால் உந்தப்பட்டு, பில்டிங்கில் உள்ள எல்லோரும் மாடி சென்று பார்த்தோம். புகை மண்டலம்!
இந்த படம், 10 நிமிடங்களுக்கு அப்புறம் எடுக்கப்பட்டது, என் வீட்டிலிருந்து படம் எடுக்கும் போது, புகை மண்டலம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
தொடர்ந்து, போலீஸ் வேன்களின் சத்தம் கேட்ட வண்ணம்... முழுமையான விபரம், நாளைதான் தெரியவரும்.
இது மினிஸ்ட்ரி அப் இண்டீரியர் அருகில் .... அப்படியிருக்கும் பட்சத்தில், அது சவுதி கவர்மெண்டுக்கு பெரும் இடிதான். ஏனென்றால், அந்த பகுதியில்தான் கடும் செக்கிங் எப்பொழுதும் இருக்கும். குடியிருப்புப் பகுதிகள் அருகில் அதிகம் இல்லை... உயிரிழப்பு (அதிகம்?) இருக்காது என்று ஒரு நம்பிக்கை.
|
posted by சாகரன் @ 12/29/2004 08:38:00 PM   |
|
|
Saturday, December 11, 2004 |
கிளிக் |
அடுத்தடுத்த தொடர்ச்சியான வேலைகள் தலைக்குமேல் இருப்பதான எண்ணம் வந்தால், என்ன செய்யத் தோன்றும்?!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதை சமாளித்தாலும், சமாளிக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் தோன்றும் அந்த சில நிமிட நேரங்களை என் மனது ஏனோ கப் பென்று பிடித்துக்கொள்ளும். அழுத்தமாக சில நிமிடங்கள் யோசித்து, இந்த கவலைகளிலிருந்து உடனடியாக விடைபெற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும்.
இது போன்ற நேரங்களின் இரவு நேரம் அலாதியானது. சந்திக்க வேண்டிய விசயங்கள் ஆயிரம் இருந்தாலும், அதை எல்லாம் மறந்துவிட்டு.. அமைதியாக இரவின் குளுமையை தனிமையின் அமைதியை அனுபவித்தபடி, ஏதோ ஒரு பிடித்தமான விசயத்தைச் செய்யத் தோன்றும்; அதிலும் முக்கியமாக முன்னர் படித்து ரசித்த புத்தகத்தை மீண்டும் எடுத்து படிக்கத் தோன்றும். அப்படி படித்து முடித்த அந்த சில மணி நேரங்களின் புத்துணர்ச்சி... இனி வரும் பிரச்சனைகளை/வேலைகளை சகஜமாகக் கையாள உதவி செய்வதான எண்ணம் எனக்கு உண்டு.
இதுவும் அதே போன்றதொரு அமைதியான இரவு தான்...
கண்ணுக்கெதிரே படம் போல செய்ய வேண்டிய வேலைகள் விரிந்து கொண்டிருக்கிறது!
இன்னும் சில மாதங்களில் செய்ய வேண்டிய BEA Portal 8 Upgrade, இன்னும் இரண்டு தினங்களில் செய்ய வேண்டிய புராடக்ட் அப்கிரேட், நாளை ரிலீஸ் செய்ய வேண்டிய மாடுயூல், இன்னும் இரண்டு வாரங்களில் எழுத வேண்டிய எம்.பி.ஏ எக்ஸாம், டிக்கெட்- எக்ஸிட் ரீ எண்ட்ரி... இப்படி நிறைய...
~~~~*~~~~~
டிஜிடல் காமெராவில் எடுக்கப்பட்ட படங்களை பெரும்பாலும் எடுக்கப்பட்ட பிறகு மேம்பாடு செய்வதற்கான தேவையோ நேரமோ பல சமயம் இருப்பதில்லை. ஆனாலும், இந்த முறை டிஜிடல் கேமரா வாங்கும் போது, சந்தித்த நண்பரின் 'மவுஸ்' வண்ணம் பார்த்து எனக்கும் ஆசை வரத்தான் செய்தது!
'போட்டோ ஷாப்' தெரியும்தான் என்றாலும், அதில் தேடித் தேடி கமாண்ட் கண்டுபிடித்து இந்த வேலைகள் செய்வதென்பது ஒரு கடி என்ற எண்ணம் எனக்கு அழுத்தமாகவே உண்டு.
சில தினங்களாகவே பல வருடங்களுக்கு முன், உபயோகித்த 'பெயிண்ட் ஷாப் புரோ' இப்பொழுது எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நேற்று டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து பார்த்துவிட்டு...
அட...
என்னை நிச்சயம் ஆச்சரியப்படுத்தியது அந்த மென்பொருள். சிம்பிள். அதிலும் போட்டோ மேம்படுத்துதலில்... Just Select & Click!
|
posted by சாகரன் @ 12/11/2004 11:19:00 PM   |
|
|
Monday, December 06, 2004 |
பங்க்சுவல் |
டோண்ட் வொர்ரி சார்.. நான் ரொம்ப பங்க்சுவல்! - ஊர்சுற்றிப்பார்க்க எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிராவல் ஏஜெண்ட் அமீர் சொன்ன வார்த்தை இது! சொன்ன வார்த்தையை கடைசி வரை காப்பாற்றவும் செய்தார்! (இல்லையென்றால், எத்தனை திணறல் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கையில்...)
சட்டென்று மனசுக்குள் ஒரு சிறு பொறி பறந்தது. பங்சுவல் என்றால் என்ன என்று கேட்கும் பழக்கம் சொல்லாமலே ஒட்டிக்கொள்ளும் ஊர் சவுதி அரேபியா! அங்கிருந்து வரும் எனக்குக் கூட அந்தப் பழக்கம் இல்லாமல் இருக்குமா என்ன?!
ஊரிலிருந்து வந்த ஒருவாரமாக ஒழுங்காக நேரத்திற்கு அலுவலகம் வருவதும், சொன்ன நேரத்தில் மீட்டிங் செல்வதுமாக இருக்கிறேன். கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறது. ஆனாலும் இது எத்தனை நாள் தொடரும்?! மீண்டும் இன்ஷா அல்லாஹ்...
------------------------------
அடுத்தடுத்த மாதங்கள்.. இன்னமும் வேகமாகப் போகப்போகின்ற காலங்கள்!
இந்த மாதம் முழுவதுமாக வேலையிலேயே நேரம் போய்விடும் போல் இருக்கிறது! அவ்வளவு டைட்..
|
posted by சாகரன் @ 12/06/2004 02:37:00 PM   |
|
|
|
About This Blog |
 பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Last Post |
|
Archives |
|
Links |
|
Template by |
 |
|