சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, December 11, 2004
கிளிக்
அடுத்தடுத்த தொடர்ச்சியான வேலைகள் தலைக்குமேல் இருப்பதான எண்ணம் வந்தால், என்ன செய்யத் தோன்றும்?!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதை சமாளித்தாலும், சமாளிக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் தோன்றும் அந்த சில நிமிட நேரங்களை என் மனது ஏனோ கப் பென்று பிடித்துக்கொள்ளும். அழுத்தமாக சில நிமிடங்கள் யோசித்து, இந்த கவலைகளிலிருந்து உடனடியாக விடைபெற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும்.

இது போன்ற நேரங்களின் இரவு நேரம் அலாதியானது. சந்திக்க வேண்டிய விசயங்கள் ஆயிரம் இருந்தாலும், அதை எல்லாம் மறந்துவிட்டு.. அமைதியாக இரவின் குளுமையை தனிமையின் அமைதியை அனுபவித்தபடி, ஏதோ ஒரு பிடித்தமான விசயத்தைச் செய்யத் தோன்றும்; அதிலும் முக்கியமாக முன்னர் படித்து ரசித்த புத்தகத்தை மீண்டும் எடுத்து படிக்கத் தோன்றும். அப்படி படித்து முடித்த அந்த சில மணி நேரங்களின் புத்துணர்ச்சி... இனி வரும் பிரச்சனைகளை/வேலைகளை சகஜமாகக் கையாள உதவி செய்வதான எண்ணம் எனக்கு உண்டு.

இதுவும் அதே போன்றதொரு அமைதியான இரவு தான்...

கண்ணுக்கெதிரே படம் போல செய்ய வேண்டிய வேலைகள் விரிந்து கொண்டிருக்கிறது!
இன்னும் சில மாதங்களில் செய்ய வேண்டிய BEA Portal 8 Upgrade, இன்னும் இரண்டு தினங்களில் செய்ய வேண்டிய புராடக்ட் அப்கிரேட், நாளை ரிலீஸ் செய்ய வேண்டிய மாடுயூல், இன்னும் இரண்டு வாரங்களில் எழுத வேண்டிய எம்.பி.ஏ எக்ஸாம், டிக்கெட்- எக்ஸிட் ரீ எண்ட்ரி... இப்படி நிறைய...

~~~~*~~~~~

டிஜிடல் காமெராவில் எடுக்கப்பட்ட படங்களை பெரும்பாலும் எடுக்கப்பட்ட பிறகு மேம்பாடு செய்வதற்கான தேவையோ நேரமோ பல சமயம் இருப்பதில்லை. ஆனாலும், இந்த முறை டிஜிடல் கேமரா வாங்கும் போது, சந்தித்த நண்பரின் 'மவுஸ்' வண்ணம் பார்த்து எனக்கும் ஆசை வரத்தான் செய்தது!

'போட்டோ ஷாப்' தெரியும்தான் என்றாலும், அதில் தேடித் தேடி கமாண்ட் கண்டுபிடித்து இந்த வேலைகள் செய்வதென்பது ஒரு கடி என்ற எண்ணம் எனக்கு அழுத்தமாகவே உண்டு.

சில தினங்களாகவே பல வருடங்களுக்கு முன், உபயோகித்த 'பெயிண்ட் ஷாப் புரோ' இப்பொழுது எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நேற்று டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து பார்த்துவிட்டு...

அட...

என்னை நிச்சயம் ஆச்சரியப்படுத்தியது அந்த மென்பொருள். சிம்பிள். அதிலும் போட்டோ மேம்படுத்துதலில்... Just Select & Click!
posted by சாகரன் @ 12/11/2004 11:19:00 PM  
2 Comments:
  • At 11:49 AM, Anonymous Anonymous said…

    (13.12.2004) மோகன் said...

    என்னங்க எங்கிட்ட சொல்லி இருந்தா நான் முடிச்சு கொடுத்திருப்பேனே. ஒரு மியூச்சுவல் அக்ரிமென்ட் போட்டோஷாப் நான் சொல்லித் தர்றேன். ப்ரோக்ராமிங் நீங்க சொல் லித் தரனும் சரியா?

    மோகன், ரியாத்

     
  • At 12:06 PM, Anonymous Anonymous said…

    (13.12.2004) சாகரன் said...

    :-)

    மோகன், கண்டிப்பா... சொல்லித் தரேன்! :-)

    அன்புடன்,
    சாகரன்.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER