சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, December 06, 2004
பங்க்சுவல்
டோண்ட் வொர்ரி சார்.. நான் ரொம்ப பங்க்சுவல்! - ஊர்சுற்றிப்பார்க்க எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிராவல் ஏஜெண்ட் அமீர் சொன்ன வார்த்தை இது! சொன்ன வார்த்தையை கடைசி வரை காப்பாற்றவும் செய்தார்! (இல்லையென்றால், எத்தனை திணறல் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கையில்...)

சட்டென்று மனசுக்குள் ஒரு சிறு பொறி பறந்தது. பங்சுவல் என்றால் என்ன என்று கேட்கும் பழக்கம் சொல்லாமலே ஒட்டிக்கொள்ளும் ஊர் சவுதி அரேபியா! அங்கிருந்து வரும் எனக்குக் கூட அந்தப் பழக்கம் இல்லாமல் இருக்குமா என்ன?!

ஊரிலிருந்து வந்த ஒருவாரமாக ஒழுங்காக நேரத்திற்கு அலுவலகம் வருவதும், சொன்ன நேரத்தில் மீட்டிங் செல்வதுமாக இருக்கிறேன். கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறது. ஆனாலும் இது எத்தனை நாள் தொடரும்?! மீண்டும் இன்ஷா அல்லாஹ்...

------------------------------

அடுத்தடுத்த மாதங்கள்.. இன்னமும் வேகமாகப் போகப்போகின்ற காலங்கள்!

இந்த மாதம் முழுவதுமாக வேலையிலேயே நேரம் போய்விடும் போல் இருக்கிறது! அவ்வளவு டைட்..
posted by சாகரன் @ 12/06/2004 02:37:00 PM  
1 Comments:
  • At 11:15 AM, Anonymous Anonymous said…

    (8.12.2004) மோகன் said...

    இன்னொன்று சொல்ல மறந்து விட்டீர்கள். பங்சுவல் நம்மை மாதிரி வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் தான். சவுதிகளுக்கு இல்லை என்பதை.

    மோகன், ரியாத்

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER