வழக்கமாக இப்படி ஒரு தலைப்பு இருந்தால் .. அதற்கு சம்பந்தமாக ஏதாவது ஒரு மகிழ்வான சம்பவத்தை எழுதி வைப்பது வழக்கம். ஆனால் நான் இங்கு எழுதப்போவது அப்ப்டி ஒன்றும் சுவையான சம்பவம் இல்லை. இது ஒரு முயற்சி. என்னைச் சுற்றியுள்ள இடங்களை என்னை பாதித்த விதத்தில் பகிர்ந்து கொள்ள செய்யும் ஒரு சோதனை. நிற்க. இன்றைய தினம், வெயிலின் கடுமையை விட, காற்றில் காற்றாகவே கலந்திருக்கும் மெல்லிய் தூசியின் நெடிதான் தூக்கலாக இருக்கிறது. இது அலர்ஜியில் கொண்டுவந்து விடக்கூடிய ஒன்று. பெரும்பாலானவர்களுக்கு இந்த கிளைமேட் மாற்றம் ஜுரம் , தலை சுற்றல் போன்ற வேதனைகளை தந்துவிடும். இன்னும் சில நேரங்களில் அலுவலகம் முடிந்துவிடக்கூடும். சவுதி அரேபியாவின் ஸ்டாக் இண்டெக்ஸ் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அடுத்த சீட்டிலிருக்கும் நண்பர் அவ்வப்போது கணினியின் எக்ஸ்ப்ளோரர் ஜன்னலைத் திறந்தும் மூடியும் பார்த்தவண்ணம் இருக்கிறார். இன்றைய தினம், இதுதான் ஹாட் டாபிக். இரண்டு பேர் ஒன்றாகச் சேர்ந்தாலே, சவுதி அரேபிய ஸ்டாக் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு இந்த ஸ்டாக் மார்க்கெட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பற்றி தெளிவாகவே தெரிந்திருக்கிறது. எப்பொழுதுமே ஒரு லாபம் தரும் செயல் பலராலும் செய்யப்பட்டால் சட்டென்று அந்த தொழிலே உடைந்து போய்விடும். உதாரணத்திற்கு, செனையில் லாபம் தரும் தொழிலாக பார்க்கப்ப்ட்ட பிரவுசிங் செண்டர்கள் மூலைக்கொண்றாக வந்துவிட்ட பின்னர், இப்போது சுமாரான லாபம் தரும் சராசரித் தொழிலாகவே மாறிவிட்டது. புற்றீசல் போல முளைத்த கடைகள் காணாமல் போய்விட்டன. இதே போலத்தான் ‘டாட்காம்’ ஸ்காம் கூட. சவுதியிலும் இரண்டு மாதங்கள் முன்பு வரை எவரும் எதிர்பாரா வண்ணம், சுமார் 21000 பாயிண்டுகளை மூன்றே மாதங்களில் தொட்ட இண்டெக்ஸ், சட்டென்று இரண்டு வாரங்களில் 15000 ஐத்தைத் தொட்டு, இன்றோ 10000 ஆயிரத்திற்கு இறங்கி விட்டது. இன்னமும் குறைந்து சுமார் 8500 பாயிண்டுகளில் ஸ்டேபிளாகும் என்று சொல்கிறார்கள். ‘சவுதி கெசட்’ -ல் எழுதப்பட்ட சில கட்டுரைகள் சில நிமிடங்காள் முன்பு மின்னஞ்சலாக வந்தது, இது போன்ற சில தகவல்களுடன். சவுதி அரேபிய கவர்மெண்ட் எக்ஸ்பாட்ரியேட் தொழிலாளிகளும் ஸ்டாக்-கில் இன்வெஸ்ட் செய்யலாம் என்று சொன்னவுடன், என் அலுவலகத்தில் இருக்கும் பல நண்பர்களும் கணக்கு திறந்து விட்டார்கள். பார்க்கும் போதும், பேசும் போதும் ‘ஏறுது’ ‘இறங்குது’ என்று ஸ்டாக் மார்க்கெட் பற்றிய பேச்சாக்வே இருக்கிறது. நான் பணம் போடவில்லை (!) என்பதால் கொஞ்சம் சுவாரஸ்யமாகக் கூட இருக்கிறது. எப்பொழுதுமே வெட்டிப்பேச்சு சுவாரஸ்யம்தானே! அதனால் ஏற்படும் நேரமயக்கம் சுவாரஸ்யமாகவே இருந்தாலும்…
|