Saturday, November 27, 2004 |
ரிடர்ன் பேக் |
தமாம்... பஹ்ரைன்... எகிப்த்... டிரிப் முடித்து, ரிடர்ன் திரும்பியாகிவிட்டது.
எகிப்த் - அப்படி ஒன்றும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற இடம் இல்லை. ஆனாலும், வாழ்க்கையில் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் மிடில் ஈஸ்டில் இருக்கும் இந்த நேரத்தில்தான் இந்த இடங்களை பார்க்கமுடியும். இல்லையென்றால் யார் வேலை மெனக்கட்டு இங்கு வந்து பார்ப்பது?! எகிப்தில் இருந்த போது இந்தியாவில் இருந்தது போன்ற எண்ணமே இருந்தது.. ஒரே ஒரு வித்தியாசம், தென்னை மரங்களுக்கு பதிலாக பேரிச்சை மரங்கள்!
பெற்றோர்கள் இன்று காலை சென்னை சேர்ந்து தொலைபேசிவிட்டார்கள்! மீண்டும் வந்து சீட்டில் உட்கார்ந்து விட்டாகிவிட்டது..... வெல்கம் பேக் வார்த்தைகளை அலுவலக நண்பர்களிடமிருந்து கேட்டாகிவிட்டது!
இன்ஷா அல்லாஹ்.... !
|
posted by சாகரன் @ 11/27/2004 11:59:00 AM   |
|
|
Saturday, November 13, 2004 |
பக்ரைனிலிருந்து |
இந்தப் பதிவினை இப்பொழுது பக்ரைனிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இரண்டு தினங்கள் தமாம்... அல்கோபர் பக்கங்களில் சுற்றிவிட்டு, பாதிநிலவு பீச், கார்னிஷ், டால்பின் ஷோ இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, பக்ரைன் காஸ்வே மூலமாக கிராஸ் செய்து, கொஞ்ச தூரம் டிரைவிங்கில் நண்பர் சரவணனின் உதவியுடன், இடம் பிடித்து, பெட்டி படுக்கைகளை எடுத்து வைத்துவிட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பக்ரைன் எனக்கு எதுவும் பெரும் வித்தியாசமாக இல்லை. பெண்கள் உடைகளில் பர்த்தா இல்லை. எல்லா இடங்களிலும் மலையாளிகள் பார்க்க முடிகிறது. ஆங்கிலம் பேசுகிறார்கள். இது இரண்டு மணி நேர கணிப்பு மட்டுமே.
சன் டிவி வருகிறது. சங்கராச்சாரியார் பிரச்சனை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.
நடுவில் யாசர் அராபத் மரணித்துவிட்டார் என்று சரவணன் சொன்னார். எகிப்து நாட்டில் அவருடைய அடக்கம் கூட முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்று 13ம் திகதி. ஈத் முபாரக் எஸ்.எம்.எஸ் சில நண்பர்களுக்கு காலையில் அனுப்பியதுடன் ஆரம்பித்த நாள்... happy Eid!
|
posted by சாகரன் @ 11/13/2004 07:02:00 PM   |
|
|
Wednesday, November 03, 2004 |
சிட்டிசன்(ஷிப்) |
சிட்டிசன்ஷிப் - சவுதிஅரேபியாவின் கடந்த வார ஹாட் சப்ஜெக்ட்களிலும், ஜாலியாக கிண்டல் செய்யவும் உதவியாக இருந்த ஒரு வார்த்தை!
ஆச்சரியம் ஆனால் உண்மை என்ற பெயரில் சில விசயங்கள் தினமலர் சிறுவர்மலரிலோ அல்லது வேறு ஏதோ ஒரு சிறுவர் பத்திரிக்கையிலோ வரும். அது போல, சவுதியில் சிட்டிசன்ஷிப் கூட!
குறைந்த பட்சம் 10 வருடங்கள் இருந்தவர்கள், தேவையான வாண்டட் புரொபசனில் இருப்பவர்கள், அராபிக் எழுத, பேசத் தெரிந்தவர்கள் என்று தகுதி நிர்ணயம் செய்திருக்கிறது சவுதி கவர்மெண்ட்.(இன்னொரு ஆச்சரியம், முஸ்லீம் என்ற தகுதி நிர்ணயம் செய்யாமலிருப்பது! (´Õ §Å¨Ç «Ð implied??!)
இரட்டைக் குடியுரிமை இல்லாத காரணத்தினால், இந்திய குடியுரிமையை இழக்க வேண்டிவரும். இருந்தாலும், பாகிஸ்தானியர் போன்றவர்கள் இதனை நிச்சயம் உபயோகப்படுத்திக்கொள்வார்கள் என்று பேசப்படுகிறது.
தமாம் அராபிக் கற்றுக்கொடுக்கும் இன்ஸ்டிடியூட்டில் இடமே இல்லையாம்!
(நான் எழுதுவது நிச்சயம் லேட்தான்... இதற்குள் இந்த டாபிக்-கின் சூடு குறைந்தே விட்டது!)
*******
இந்தப் பகுதியில் விரைவில் ஒரு பயணக்கட்டுரை எழுதப் படப் போகிறது?! :-)
இன்னும் ஒரு வாரத்தில்... பஹ்ரைன் வழியாக எகிப்திற்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம்!!
*******
Undelivered Mail: Mail Delivery Failure : இப்படி எப்படியோ நான் பார்க்கும் வெப்சைட்களிலிருந்தெல்லாம், என்னுடைய காண்டாக்டில் (அட்ரஸ்புக்கில் இல்லாவிடாலும் கூட!) உள்ளவர்களிடமிருந்தெல்லாம் ஸ்பாம் மெயில் வந்து படுத்துகிறது! சர்பிரைஸிங்! எப்படி இதெல்லாம்?!! இன்று கூட மரத்தடியிலிருந்தும், ராகாகி குரூப்பிலிருந்தும் வருவது போல ஸ்பாம் மெயில்கள் வந்திருக்கின்றன!
:-(
|
posted by சாகரன் @ 11/03/2004 04:02:00 PM   |
|
|
|
About This Blog |
 பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Last Post |
|
Archives |
|
Links |
|
Template by |
 |
|