சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, December 23, 2006
Kamali - கமலி
"ஹே... ஆஸ்ட்ரிக்ஸ் பார்க்கலியா..."

"நோ... ஐ கேம் மெயின்லீ டு சீ 'கிரேசி'"

- ஒடிசலான தேகத்திலிருந்த பெண் சொல்லியது. ஆனாலும் கி.ரே.சி ஆரம்பிக்க இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது.
உட்லண்ட்ஸ் சிம்பொனி யின் மாடியில் உட்காருவதற்காகப் போடப்பட்டிருந்த சீட்களில் ஒன்றில் நான் அமர்ந்திருந்தேன். அது மாலை ஐந்தை நெருங்கும் நேரம்.
சிம்பொனியில் 'தி பாலண்ட் ஆப் கமலி - மை டாட்டர்' என்ற படத்திற்காக வந்திருந்தேன். ஏனோ படத்தின் டைட்டில் என்னை ஈர்த்திருந்தது.

எப்பொழுது வந்த மாறுதல் இது என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
சென்னையைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் எங்கேனும் ட்ரைனிங் எடுத்திருப்பார்களா என்ன?
சாதாரணமாகவே பெண்களுக்கு ட்ரஸிங் சென்ஸ் செமையாக இம்ப்ரூவ் ஆகியிருக்கிறது. ஒவ்வொருவரின் உடையும் சுட்டியிழுக்கும் விதத்தில்தான் இருக்கிறது. பளிச்சென்ற முகம்,
சிம்பிளான மேட்சிங்கான அலங்காரங்கள், அதற்கேற்ற உடை.... நளினங்கள்...( ம்... இதுவே அதிகம். இதற்குமேல் வர்ணித்தால் வீட்டுக்காரம்மா படிக்கும் போது உதை விழும்:-))
அங்கு அத்தனை பெண்களை எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏதேனும் பிலிம் இன்ஸ்டிட்ட்யூட் அல்லது விசுவல் கம்யூனிகேசன் டெக்னாலஜியைச்
சேர்ந்தவர்களாக இருக்கலாம். கல கலவென பெண்கள் பட்டாளமும், கூடவே ஒட்டிய சில ஆண்களுமாக இடம் சல சலத்துக் கொண்டிருந்தது.

****

தெலுகு மொழிப்படம். (தெலுங்கு என்பதை விட தெலுகு என்பது ஏனோ சுகமாகத் தெரிகிறது :-))

நந்திதாதாஸ் - பெயர் போடப்படும் போது செம கைத்தட்டல். பின் சீட்டில் உட்கார்ந்திருந்த படத்தின் டைரக்டர் சாஸ்திரி ஒரு முறை கைத்தட்டியவர்களைத் திரும்பிப் பார்த்து சிரித்துக்கொண்டார்.
K.என்.டி சாஸ்த்ரி என்ற டைரட்டரைப் பற்றி குறிப்பிடும் போது கூட, பிலிம் கிரிட்டிக் என்றுதான் அறிமுகப்படுத்துகிறார்கள். ஏன் என்பது படத்தினை முடிக்கும் போது தெளிவாகத் தெரிகிறது.

கமலி - லம்பாடி இனத்தினைச் சேர்ந்த பெண். இவளது கண்வன், குடிக்கு அடிமையானவன். எல்லா நேரமும் குடி. 'இப்படி குடிச்சுகிட்டே இருந்தே செத்துருவே' என்று சொல்லும்போது கூட
'நீங்கத்தான் குடிக்க சொல்லிக்குடுத்தீங்க. இப்ப வேணான்னு சொன்னா எப்படி நிறுத்தறது' என்று கேட்கிறான். இதென்ன கதை? வேலைக்கு கட்டாயம் சென்றே தீர வேண்டிய நிலையிலுள்ள
அந்த தாய், தாய்ப்பால் சுரப்பினும், அதனைத் தவிர்த்து, சாராயத்தினை ஊட்டி வளர்க்கிறார். இது ஒரு பாடலாகவும் பின்புலத்தில் ஒலிக்கிறது. மிகவும் உறுக்கமான வரிகள். 'என்னை எட்டி உதை
என் கண்ணே, என் செல்லமே, என்னுள்ளே தாய்ப்பால் சுரந்தாலும், அதனை உனக்குத் தராமல், சாராயத்தினை ஊட்டி வளர்க்கின்ற பாவி நான்' என்பதாக வரிகள். சட்டென்று நெஞ்சைப் பிடித்து
சீட்டினுள் வைத்து 'ஐயோ' என்று சொல்லத்தோன்றும் வேதனை.

கமலி யின் முதல் குழந்தை - டாண்டா - கொடுக்கப்பட்டுவிடுகிறது. அதாவது குழந்தை விற்கப்பட்டுவிடுகிறது. பெண் குழந்தைகள் மட்டுமே இப்படி விற்கப்படும். இப்படி விற்கப்படும் குழந்தைகள்
பிற்காலத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேட்டு திக்கித்து நிற்கிறாள் கமலி.

அவளுக்கு அடுத்த குழந்தை பிறக்கிறது. அது ஆண். பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் மறுபடி விற்று காசாக்கலாமே என்று வருத்தப்படுகிறான் கணவன். அவளிருக்கும் ஆஸ்பத்திரியிலுள்ள
ஒரு நர்ஸ், கமலி டாய்லெட் சென்றிருந்த நேரம் பார்த்து, பெண் மகவு ஒன்றை ஆண் மகவுக்கு பதிலாகப் போட்டு விடுகிறார். கமலி யின் முறையீட்டினை யாருமே ஏற்க்கவில்லை. அவள் பொய் சொல்கிறாள்
என்கிறார்கள் அனைவரும். கணவனும், குழந்தையை விற்றுவிடலாம் என்கிறான். கமலி ஆஸ்பத்திரியின் வாசலில் தண்டோரா செய்கிறாள். மீடியா வருகிறது. டி.என்.ஏ டெஸ்ட் ரிசல்டும் வருகிறது.
பெண் குழந்தை அவளுடையது அல்ல என்பது தெளிவாகிறது. கமலியின் தண்டோரா தொடர்கிறது. மாட்டிக்கொள்ளும் பயத்தில் ஒரு அதிகாலை மழை நேரம் யாரும் இல்லாத சமயத்தில் அந்த நர்ஸ்
எப்படியோ கண்டுபிடிச்சுட்டோம், இந்தா உன் குழந்தை, அப்படியே போலீஸ் கண்ணில் மாட்டுவதற்கு முன் ஓடிப் போய்விடு என்கிறாள். தன் குழந்தையைப் பெற்றுக்கொண்டு நகரும் முன்,
இந்த பெண் குழந்தை யாருடையது என்று கேட்கிறாள் கமலி. யாரோ அனாதை, உனக்கென்ன பிரச்சனை உன் குழந்தைதான் கிடைச்சிருச்சில்ல நீ கிளம்பு என்று பதில் வருகிறது.
சட்டென்று அந்த பெண் குழந்தையையும் வாங்கிக்கொண்டு அவர்களைப் பார்த்து பயந்தபடியே ஓடுகிறாள் கமலி. அவர்களோ அப்பா நிம்மதி என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

****

படம் ஆரம்பமாகும் காட்சி, கமலியுடன் வளரும் 7 வயது மதிக்கத்தக்க இரண்டு குழந்தைகளுடன் ஒரு ஆஸ்பத்திரி இடிப்புக்கான வேலை நடக்கும் இடம். இந்த ஆஸ்பத்திரிதான் கமலி போராடிய ஆஸ்பத்திரி.

****
படம் நிறைவுற்றுவிடுகிறது. படத்தின் தொடர்ச்சியான கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கத்தான் செய்கின்றன. குழந்தைகளை விற்பது என்பது சர்வ சாதாரணமாக இப்பொழுதும் நடைபெற்று வருகிறது.
என்று குற்றம் சாட்டுகிறார் டைரக்டர். சென்சார் அதிகாரிகள் தவிர, கவர்மெண்டைச் சேர்ந்த ஒருவர் கூட இந்தப் படத்தினை பார்க்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார். ஆந்திர கவர்மெண்ட்
இந்த விவகாரத்தில் சுத்தமாக ஈடுபாடு காட்ட இயலாத விதத்தில் ஊழல் அதிகாரிகளின் கை ஓங்கியிருக்கிறது. அனைத்தினையும் படமிட்டால், இந்தப் படம் வந்திருக்காது என்று பப்ளிக் ஸ்டேட்மெண்ட் விடுகிறார்.

***

சமீபத்தில் 'சிவப்பதிகாரம்' என்று ஒரு படம். தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு இதுதான் என்று இல்லை. ஏதாவது ஒரு தகுதியாவது வையுங்கள் என்று கேட்பதையே நோக்கமாகக் கொண்ட படம்.
அதில் கடைசியாக ஒரு வரி டைட்டில் கார்டுடன் படம் முடியும் - 'ஏதாவது செய்யணும் சார்'. இந்தப் படத்தில் அந்த டைட்டில் கார்ட் போடவில்லை, அவ்வளவுதான்.
posted by சாகரன் @ 12/23/2006 10:17:00 AM   0 comments
Monday, December 18, 2006
திரை மழையில் சில துளிகள்
புரட்டித்தான் போடுகின்றன சில படங்கள்...

சென்னைக்குள் நுழைந்ததும் பெரிய ஸ்கிரீன் தியேட்டரில் நல்ல படத்தினை பார்த்துவிடமாட்டோமா என்ற ஆதங்கம் ஏனோ ஒவ்வொரு முறையும் இருக்கத்தான் செய்கிறது. சின்ன வயசு மனசு. அடம்பிடித்து பழசினை நினைக்க வைக்கிறது. சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் இப்படி கெடவில்லை தமிழ்சினிமா என்று தோன்றுகிறது. ஏதேனும் ஒரு படம் என்றாலும், இளையராசா மியூசிக் கலக்கலாக இருக்கும். தமிழ்சினிமா சி.செண்டர் அனைத்திலும் கட்டாயம் ஓடும். தெளிவாக சில ஹீரோக்கள், ஸ்டாண்டர்ட் வில்லன்கள். சுவாரசியமான திரைக்கதை. டி.வி பொட்டிகள் ஆங்காங்கே அப்பொழுதுதான் முளைக்கத் துவங்கியிருந்த நேரம்.

ஆனால், இன்று 24 மணி நேரமும் சினிமா மிரட்டுகிறது.பக்கத்து வீட்டிலிருந்து காலை ஒரு மணிக்கே ஏதேனும் கேட்க ஆரம்பித்துவிடுகிறது. உஷ்...

சென்னை வந்து ஒழுங்கான படங்கள் இல்லாமல் காய்ந்திருந்த எனக்கு ஆபத்பாந்தவனாக சென்னை உலகத் திரைப்பட விழா வந்தது மிக்க மகிழ்ச்சியைத் தரத்தான் செய்தது. பார்க்கிறோமோ இல்லியோ ஒரு 300 ரூபா குடுத்து பெயரை புக் பண்ணிடலாம் என்ற எண்ணம்தான் முதலில் இருந்தது.

புக் பண்ணியவுடன், ஏற்கனவே திரைப்படம் ஆரம்பித்தாகிவிட்டது என்று கேள்விப்பட்டு, சின்ன உட்லண்ட்ஸில் எட்டிப்பார்த்தேன். - ஜி என்ற இந்தோனேசியப் படம் ஓடிக்கொண்டிருந்தது.

ஜி - கதாநாயகனின் பெயர். இது ஒரு உண்மை கேரக்டர். சரியாக பதிவு செய்யப்படாமல் போன ஒரு கதாநாயகனின் வாழ்க்கை வரலாறு. சர்வாதிகாரத்தின் போக்கினை எதிர்க்கும் ஒரு நாயகன். கல்லூரிக் காலங்களில் அவனது வீரியமிக்க எழுத்து.. அவனை விரும்பும் ஒரு காதலி.. என்று செமையாக படம் சென்று கொண்டிருந்தது. முழுக்க பார்க்க விடாத டெலிபோன் காலினை சபித்த படி பாதியில் எழுந்து வந்து விட்டேன்.

****

சோபியின் உலகம் - நான் டீடைலில் வரக்கூடிய ஒரு புத்தகம். பிலாசபியை சுலபமாக உள் நுழைக்கும் ஒரு அழகான கதை. அந்த புத்தகத்தினை இன்னமும் முழுசாக முடிக்க வில்லை என்ற எண்ணமே, இன்று அந்த படத்தினை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்தியிருந்தது.

ஏ க்ளாஸ் என்று சொல்லலாம். இன்னமும் மனசில் அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் இருக்கிறது. கண்ணெதிரே காட்சிகள் பயணித்த வண்ணம் இருக்கின்றன!


******

நாளை :

க்ரேசி என்ற கனேடிய திரைப்படம் மாலை 7:00 க்கு வுட்லண்சில் திரையிடப்பட இருக்கிறது. இது குறித்து மதி அவர்களில் பதிவில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. கட்டாயம் செல்ல வேண்டும்.

அதே போல, மாலை 5 மணிக்கு "மை டாட்டர் கமலி" என்ற இந்தியத் திரைப்படம் உட்லண்ட்ஸ் - சிம்பொனியில் திரையிடப்பட இருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் பார்க்க வேண்டுமேன நினைக்கிறேன்.

பார்க்கலாம்...
posted by சாகரன் @ 12/18/2006 09:01:00 PM   0 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER