Monday, December 18, 2006 |
திரை மழையில் சில துளிகள் |
புரட்டித்தான் போடுகின்றன சில படங்கள்...
சென்னைக்குள் நுழைந்ததும் பெரிய ஸ்கிரீன் தியேட்டரில் நல்ல படத்தினை பார்த்துவிடமாட்டோமா என்ற ஆதங்கம் ஏனோ ஒவ்வொரு முறையும் இருக்கத்தான் செய்கிறது. சின்ன வயசு மனசு. அடம்பிடித்து பழசினை நினைக்க வைக்கிறது. சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் இப்படி கெடவில்லை தமிழ்சினிமா என்று தோன்றுகிறது. ஏதேனும் ஒரு படம் என்றாலும், இளையராசா மியூசிக் கலக்கலாக இருக்கும். தமிழ்சினிமா சி.செண்டர் அனைத்திலும் கட்டாயம் ஓடும். தெளிவாக சில ஹீரோக்கள், ஸ்டாண்டர்ட் வில்லன்கள். சுவாரசியமான திரைக்கதை. டி.வி பொட்டிகள் ஆங்காங்கே அப்பொழுதுதான் முளைக்கத் துவங்கியிருந்த நேரம்.
ஆனால், இன்று 24 மணி நேரமும் சினிமா மிரட்டுகிறது.பக்கத்து வீட்டிலிருந்து காலை ஒரு மணிக்கே ஏதேனும் கேட்க ஆரம்பித்துவிடுகிறது. உஷ்...
சென்னை வந்து ஒழுங்கான படங்கள் இல்லாமல் காய்ந்திருந்த எனக்கு ஆபத்பாந்தவனாக சென்னை உலகத் திரைப்பட விழா வந்தது மிக்க மகிழ்ச்சியைத் தரத்தான் செய்தது. பார்க்கிறோமோ இல்லியோ ஒரு 300 ரூபா குடுத்து பெயரை புக் பண்ணிடலாம் என்ற எண்ணம்தான் முதலில் இருந்தது.
புக் பண்ணியவுடன், ஏற்கனவே திரைப்படம் ஆரம்பித்தாகிவிட்டது என்று கேள்விப்பட்டு, சின்ன உட்லண்ட்ஸில் எட்டிப்பார்த்தேன். - ஜி என்ற இந்தோனேசியப் படம் ஓடிக்கொண்டிருந்தது.
ஜி - கதாநாயகனின் பெயர். இது ஒரு உண்மை கேரக்டர். சரியாக பதிவு செய்யப்படாமல் போன ஒரு கதாநாயகனின் வாழ்க்கை வரலாறு. சர்வாதிகாரத்தின் போக்கினை எதிர்க்கும் ஒரு நாயகன். கல்லூரிக் காலங்களில் அவனது வீரியமிக்க எழுத்து.. அவனை விரும்பும் ஒரு காதலி.. என்று செமையாக படம் சென்று கொண்டிருந்தது. முழுக்க பார்க்க விடாத டெலிபோன் காலினை சபித்த படி பாதியில் எழுந்து வந்து விட்டேன்.
****
சோபியின் உலகம் - நான் டீடைலில் வரக்கூடிய ஒரு புத்தகம். பிலாசபியை சுலபமாக உள் நுழைக்கும் ஒரு அழகான கதை. அந்த புத்தகத்தினை இன்னமும் முழுசாக முடிக்க வில்லை என்ற எண்ணமே, இன்று அந்த படத்தினை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்தியிருந்தது.
ஏ க்ளாஸ் என்று சொல்லலாம். இன்னமும் மனசில் அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் இருக்கிறது. கண்ணெதிரே காட்சிகள் பயணித்த வண்ணம் இருக்கின்றன!
******
நாளை :
க்ரேசி என்ற கனேடிய திரைப்படம் மாலை 7:00 க்கு வுட்லண்சில் திரையிடப்பட இருக்கிறது. இது குறித்து மதி அவர்களில் பதிவில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. கட்டாயம் செல்ல வேண்டும்.
அதே போல, மாலை 5 மணிக்கு "மை டாட்டர் கமலி" என்ற இந்தியத் திரைப்படம் உட்லண்ட்ஸ் - சிம்பொனியில் திரையிடப்பட இருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் பார்க்க வேண்டுமேன நினைக்கிறேன்.
பார்க்கலாம்...
|
posted by சாகரன் @ 12/18/2006 09:01:00 PM   |
|
|
|
About This Blog |
 பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
 |
|