சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Friday, October 22, 2004
மீடியா பயாஸ்
நவராத்திரியை முன்னிட்டு நேற்றிரவு ஒரு வீட்டிற்கு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர்கள், காரசாரமாக புஷ் - கெர்ரி பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர், என் எதிர் சீட்டில் புதிதாக வந்து அமர்ந்தவரைப் பார்த்து, 'என்ன சுவாமி.. நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க?' என்று கேட்க, நான் கேட்கப்பட்டவரை கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். 'அப் கோர்ஸ், கெர்ரிக்குத் தான்! My point is, not that kerry is good, but bush should not come....m.. i'm also afraid, bush may come! :-(' . அவர் அதைச் சொன்ன பிறகு, எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை; இது டிபிகல் தமிழக மனப்பான்மை!

அங்கு அந்தப்பேச்சு இன்னமும் சீரியஸாக 'ஆல் மீடியாக்கள் பயாஸ்(Biosed)' - ஆக இருப்பதாகப் போய்க்கொண்டிருக்க, எனக்குள் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்தது. பக்கத்துச் சீட்டிலிருந்தவருக்கும் அப்படி இருந்திருக்கும் போலும்; பேச ஆரம்பித்தார்....

"எனக்கு வீரப்பனையும், விஜயகுமாரையும் நல்லாத் தெரியுங்க. வீரப்பன் ஆரம்பகாலத்தில நல்லவனாத்தான் இருந்தான். அவன் கூட எப்பவும் ஒரு 20 பேர் இருப்பானுங்க. கிரானைட் கல் குவாரி விசயமாக ரோடு போடணும்கறப்போ, நான் அவனைத்தான் கூப்பிட்டு போடச் சொல்வேன். நல்லா உழைப்பாங்க. 1 கிலோ மீட்டர் ரோடு 4 மணி நேரத்தில போட்டுடுவானுங்க. அப்புறம், எம்.ஜி.ஆரு கிரானைட்-லாம் கவர்மெண்ட் விசயமா மாத்திட்டப்புறம், அதெல்லாம் விட்டுட்டு.. வேற வேலைக்கு நாங்க வந்துட்டோம்.

வீரப்பனோட ஒரே தப்பு ஆறு மாசத்துக்கு ஒரு தபா, யானையைக் கொண்ணு, தந்தம் எடுக்கறது மட்டும்தான். அந்த பீரியட்ல, அந்த ஏரியாவுல ஜெயிச்ச எம்.எல்.ஏ, ஒரு பெரிய பங்களா அண்டர்கிரவுண்டோட கட்டி, அதை கருணாநிதியை வச்சு தொரக்க வச்சி, வீரப்பனைக் கூப்பிட்டு, யானையை கொல்றது பாவம்; நீ மரம் வெட்டு நான் காசு தர்றேன் அப்படின்னு சொல்லி திருப்பிவிட்டுட்டாரு. அது அப்படியே நாலு வருசம் ரொம்ப நல்லா ஓடிச்சு. அப்புறம், வீரப்பனை கர்னாடகா போலீஸ் பிடிச்சிடுச்சு. அப்ப இந்த எம்.எல்.ஏ சப்போர்ட்டுக்கு வரலை. கடுப்பான வீரப்பன், அங்கேர்ந்து தப்பிச்சு வந்து, அவனுக்கு துரோகம் செஞ்சவங்க அத்தனை பேரையும் போட்டு தள்ளிட்டான். அப்புறம், விடுதலைப் புலிகள் தொடர்பு அது இதுன்னு அவன் வளர்ந்துட்டது வேற விசயம்.

83-84 லோ நினைக்கிறேன், அப்ப விஜயகுமாரு சேலம் மாவட்டத்தில வேலை செஞ்சுகிட்டிருந்தாரு. எனக்கு அவர்கிட்ட நல்ல பழக்கம் இருந்தது. அவர் கூட வீரப்பனைப் பத்தி பேசியிருக்கேன். என் கிட்ட, எங்க எல்லாம் அவன் சுத்துவான் இந்த விபரமெல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டாரு. அப்புறம் ஒரு நாள், அவனை முழுசா வளைச்சுட்டாரு. அங்கேர்ந்து சி.எம்-க்கு போன் போட்டாரு. ''ஷூட் அட் சைட்' ஆர்டர் குடுங்க. அவனை உயிரோட பிடிக்க முடியாது. சரவுண்ட் பண்ணிட்டேன்...' அப்படின்னாரு. ஆனா அதுக்கு, சி.எம். கருணாநிதிகிட்டேர்ந்து வந்த பதில்...

'ரிடர்ன் டு சேலம்'!

இதைச் சொல்லி, 'என்ன தம்பி பண்றது' அப்படின்னு விஜயகுமார் எங்கிட்ட வருத்தப்பட்டாரு.

இப்ப கூட பாருங்க. சென்னையில ஒரு என்கவுண்டரில அதிமுக தாதாவை போட்டு தள்ளிட்டதினாலத்தான் ஜெயலலிதா, அவரைத் தூக்கி வீரப்பனைப் பிடிக்கப் போட்டாங்க. அவங்களுக்கும் வீரப்பனைப் பிடிக்கணும்கற எண்ணம்லாம் இல்லை. 20 வருசமா தண்ணி காட்டறவனை இவர் எங்க பிடிக்கப்போறாருன்னு நினைச்சுதான் போட்டாங்க... ஆனா இன்னிக்கி அவன் செத்தப்புறம், ஏதோ ஜெயலலிதா தான் திட்டம் போட்டு செஞ்சதுமாதிரி பந்தா விட்டுகிட்டிருக்காங்க. "

****

இராக்கூத்து

"என்னடா இப்படி இராக்கூத்து அடிக்கறாங்க." - ரமதான் மாதத்தின் இரவு நேர பகலுலகம்(!) ரியாத்தினைப் பார்த்துவிட்டு என் அப்பா சொன்னது இது.

காலையில் 5:30 க்கு எழுந்து, இரவு 9:30 - 10 மணிக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கம் உள்ள அவர்களுக்கு, ரியாத்தின் வாழ்க்கை முறை அவ்வளவு சீக்கிரம் செட்டிலாகிவிடாதுதான். அதுவும் ரமதான் மாதமானதால், இரவு 8 மணியிருந்துதான் வாழ்க்கையே இங்கு ஆரம்பிக்கிறது!

ஊருக்கு வந்த 4-5 நாட்களிலேயே அவர்களுக்கு கொஞ்சம் போரடித்துவிட்டது என்று நினைக்கிறேன். பார்க்க என்ன இருக்கிறது. பெரிய கடைகளைப் பார்க்க வேண்டும் என்றால், இரண்டு கடை பார்த்தால் போதும். மற்ற எல்லா கடைகளும் அதேப் போலத்தான். மத்திம வயதுக்காரர்களாக இருந்தால், ஷாப்பிங்கில் கொஞ்சம் விருப்பம் இருக்கும். வயதான பிறகு, வாழ்க்கையின் பெரும்பாலான முக்கிய கடன்களை முடித்துவிட்ட பிறகு, ஷாப்பிங் போன்றவற்றிலெல்லாம் பெரிதும் விருப்பம் இருப்பதில்லை. கஷ்டம்தான்; இங்கு இருக்கும் பார்க்கக் கூடிய இடங்களில் பாதிக்கு மேல் ஷாப்பிங் மட்டுமே!

ம்... இனிமேல்தான், பார்க்குகள், மியூசியம், zoo, டெசர்ட்(desert), அல்-கோபர் பீச் போன்றவற்றிற்கு அழைத்துப்போக வேண்டும்.
posted by சாகரன் @ 10/22/2004 01:53:00 AM  
1 Comments:
  • At 4:08 AM, Anonymous Anonymous said…

    (23.10.2004) Moorthi said...

    வீரப்ப விஷயம் புதிதாக இருக்கிறது எனக்கு. இதற்குமுன் கேள்விப்பட்டிராத செய்தி இது. தங்களின் எழுத்து தொடரட்டும் சாகரன். இங்கு வந்து நிறைய பேர் படித்துவிட்டு கருத்துக் கூறாமல் செல்வது வருந்தத் தக்கது.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER