சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, September 25, 2004
டெக்னாலஜி வேகம்..
டெக்னாலஜி எப்பொழுதும் வேகம்தான்.

இன்று என் கஸின் பிரதரிடமிருந்து மெயில் வந்திருக்கிறது. அடுத்தது எதில் கான்ஸண்ட்ரேட் செய்ய வேண்டும் என்று கேட்டு!

ம்.. ஒரு பக்கம் பார்த்தால், சின்னச் சின்ன பையன்களாக இருந்தவர்கள் கூட இப்பொழுது ஜாவா, இஜேபி -ல வேலை செய்யறேன், மேல படிச்சுகிட்டிருக்கேன் சொல்றப்போ... இங்க சவுதியில இருந்து என்னத்தை கத்துக்கிட்டிருக்கோம்னு ஒரு வருத்தம் வருது...

சென்னையில் இருந்த போது, எனக்கு முழுக்க முழுக்க டெக்னாலஜி பிரண்ட்ஸ் மட்டும்தான். அடுத்தது என்ன கத்துக்கணும், எது டாப்ல இருக்கு, எந்த மார்க்கெட் பூம்? எந்தெந்த கம்பெனி நல்லா செஞ்சுகிட்டிருக்காங்க. என்னென்ன பிராடக்ட் வந்துகிட்டிருக்கு. இது மட்டும்தான் என்னோட கவனமா இருந்தது. DQ Week, PC Quest, Express Computer இப்படி ஒரு மேகஸின் விடாமல் படித்துக் கொண்டிருப்பேன். (What you want to be? என்று ஒரு கேள்வி MCA சமயத்தில் கிளாஸில் கேட்கப்பட்ட போது, I want to be a computer journalist என்று சொல்லி அசரடித்தது ஏனோ ஞாபகம் வருகிறது.:-) இதெல்லாம் சும்மா... நிஜமாகவே அப்படி ஒரு ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் நிறையவே தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்... அப்படிப்பட்ட நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அது இரண்டையுமே நான் இன்னும் செய்யவில்லை.)

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று இப்பொழுது டாப்-ல் இருப்பது எது? அடுத்தது எதில் கான்ஸண்ட்ரேட் செய்ய வேண்டும்.
இப்பொழுதைக்கு ஜாவா ஏரியாவில் கான்ஸட்ரேட் செய்யும் ஒருவருக்கு தேவையான சில தகுதிகளாக கருதப்படுபவை...

1) network knowlege
2) OS - UNIX and Windows
3) Content Management Systems (Vignette, Interwoven, Open Market, etc.))
4) JavaScript HTML coding ability
5) Oracle PL/SQL and SQL or Sybase
6) BEA WebLogic/WebShpere Configuration and Administration
7) Java, JSP, Servlets, EJB, JMS, JDBC
8) Web Services
9) Design Patterns, including MVC
10) XML,
11) Open Sources - Struts, Velocity, Tiles
12) Souce Safe - Rational clearcase or CVS or PVCS or MS source safe.

அடுத்தது எந்த மார்கெட் பூம் -ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள்? என்பதற்கு எனக்கு கிடைத்த தகவல்: BioInformatics.

படிக்க வேண்டிய விசயங்கள், கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் தலைக்கு மேல் இருக்கின்றன. இனி, நேரம் ஒத்துழைக்கும்போது.... வலைப்பதிவு!
posted by சாகரன் @ 9/25/2004 10:58:00 AM  
6 Comments:
  • At 7:55 PM, Anonymous Anonymous said…

    (25.9.2004) Visitor said...

    ஆமாம், வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் நேரம் வேண்டும். வலைப்பதிவுகளை ஒரு தவம் போல விடாமல் செய்ய வேண்டியதில்லை. வாழ்வில் அவ்வப்போது ஒரு உந்துதல் வரும், 'இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளணும்' என்று, அப்போது எழுதலாம். முன்பெல்லாம் எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவில்லையென்றால் அடிக்கடி வந்துபார்ப்பவர்கள் சில நாள் கழித்து வராமல் போகலாம். இன்று திரட்டிகளின் புண்ணியத்தில், ஒரு மாதம் கழித்து எதையாவது எழுதினாலும் சுவாரசியமாக இருந்தால் கட்டாயம் வந்து பார்ப்பார்கள். எனவே 'தொடர்ந்து எழுத வைராக்கியம், அல்லது விடுமுறை அறிவிப்பு' இரண்டுமே தேவை இல்லை, என்பது என் எண்ணம்.
    -காசி

     
  • At 9:36 PM, Anonymous Anonymous said…

    (25.9.2004) சாகரன் said...

    உண்மைதான் காசி....

    விடுமுறை என்ற வார்த்தை அதீதம்.

    அதையும் தவிர, நீங்கள் சொன்னது போல, தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இருக்கும் போது... பதிவுகளைக் காணோமே என்ற கவலை யாருக்கும் இருக்கப்போவதில்லை.பிடித்திருந்தால் எழுதும் போது படிக்கப் போகிறார்கள். அவ்வளவே!

    நேரம் கிடைக்கும் போது, எதேனும் எழுத வேண்டும் என்று தோன்றும் போது, கண்டிப்பாக எழுதுவேன்.

     
  • At 4:07 PM, Anonymous Anonymous said…

    This comment has been removed by a blog administrator.

     
  • At 6:15 PM, Anonymous Anonymous said…

    (28.9.2004) மூர்த்தி said...

    கற்றது கைமண்ணளவு...கல்லாதது உலகளவு! இறக்கும்வரை கற்போம்! வெற்றிபெற வாழ்த்துக்கள் சாகரன்!

     
  • At 6:18 PM, Anonymous Anonymous said…

    (28.9.2004) சாகரன் said...

    மூர்த்தி, உங்களது முந்தைய கமெண்ட் கைத்தவறலாக நீக்கப்பட்டுவிட்டது. அதனால் நானே போஸ்டிவிட்டேன்:-)

    நன்றி மூர்த்தி, உங்கள் வாழ்த்துக்களுக்கு!

    - அன்புடன், சாகரன்.

     
  • At 10:10 PM, Anonymous Anonymous said…

    (28.9.2004) நவன் பகவதி said...

    சாகரன்,

    உங்களுடைய தேடல்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    என்னடா கமென்ட் எழுதிட்டு வலைப்பதிவுக்கு பதிலாக மின்னஞ்சல் முகவரி தந்திருக்கிறாரே என்று தான் பார்க்க வந்தேன்.

    அப்புறம் புதுசா ஏதாவது இன்டரெஸ்டிங்கா படிச்ச நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துக்கோங்க.

    அன்புடன்
    நவன்

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER