சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, October 06, 2004
FireWorks
திடும் திடும் என்ற தொடர் அதிரலில் கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டது எனக்கு.

சில மாதங்களாக சவுதியில் இருக்கும் எல்லாருக்கும் இப்படி ஒரு எண்ணம் ஏற்படும் ஏதாவது ஒரு அதிர்வு கேட்டால்.

அதற்கு காரணம் இருக்கிறது. சமீபத்தில் ரியாத்தில் வெடித்த வெடிகுண்டுகளின் தாக்கம் அது!
சில மாதங்களுக்கு முன் தக்கசுசி பாண்டா பக்கமாக வெடித்த வெடிச் சத்தம் எங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களில் கூட அதிர்வலைகளை எழுப்பியது. 'ஏதோ எங்கோ பாம் வெடிச்சிருக்கு' என்று சாப்பிடும் சமயத்தில் வேடிக்கையாகப் பேசிவிட்டு, சிறிது நேரம் கழித்து அந்த சூப்பர் மார்க்கெட் சென்றால், எல்லாரும் திரும்ப வந்து கொண்டிருந்தார்கள்.. மார்கெட் மூடப்பட்டுக்கொண்டிருந்தது.

இன்று, அதிரடியாக தொடர்ச்சியாக இந்த வெடிச்சத்தம் கேட்டபோது, விசிடியில் ஓடிக்கொண்டிருந்த 'செல்லமே' படத்தின் தொடர்ச்சியைப் பற்றிக் கூடக்(!) கவலைப்படாமல், மேல் மாடிப்பக்கம் சென்றேன். அட...

அங்கே முன்னரே ஒருவர் நின்று கொண்டிருந்தார். "பாலா சார்.. என்ன சார் ஆச்சு" என்ற போது... "இங்க வா.. பயர்வொர்க்ஸ் பாரு... இந்தப்பக்கம் நல்லாத் தெரியுது!"

"அட.. பயர்வொர்க்ஸா.. .நான் என்னமோ பாம்தான் எங்கியாவது வெடிக்குதோண்ணு நினைச்சேன்... "

"நான் கூட அப்படி நினைச்சுதான் அவசரமா மாடிக்கு ஓடி வந்தேன்"

பயர்வொர்க்ஸ்... சிம்பிளீ சூப்பர்ப்.. தொடர்ச்சியாக ஒரு 10 நிமிடம்.. கலர் கலராக.. படம் காண்பித்துக்கொண்டிருந்தன!

சவுதியைப் பொருத்த வரை, இந்த மாதிரி வேலைகள் எல்லாம், கவர்மெண்ட் மட்டுமே செய்ய முடியும். அதுவும் காரண காரியமில்லாமல் இருக்காது. ஏதாவது ஒரு புதிய கவர்மெண்ட் பில்டிங் ஓபனிங்... அல்லது ரமதான் (போன வருடத்திலிருந்து) போன்ற நேரங்களில் மட்டுமே இது சாத்தியம். வெடி என்று சொன்னால், குட்டி குட்டியான வெங்காய வெடி கிடைக்கும். எங்க பில்டிங்கில் ஒருவர், தீபாவளி நேரங்களில் அவர் குழந்தைகளுக்கு எங்கிருந்தோ சென்று சில புது வகை வெடிகளை வாங்கி வருவார்.. இப்ப அவர் குழந்தைகள்.. இந்தியாவில் +2 படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

இன்று வெடித்த வெடிக்கு என்ன காரணம் என்று யோசித்தால், 12 வருடங்களாக கட்டப்பட்டு வரும், மெடிகல் சிடி பில்டிங் ஓபனிங் செரிமனியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

... இந்த ஓபனிங் செரிமனி தீபாவளி அன்னிக்கி வந்திருக்கக்கூடாது? அப்படியே பாத்துட்டு... பண்டிகையைக் கொண்டாடி இருக்கலாமே! :-)


****

சவுதி அரேபியாவின் புதிய இந்தியத் தூதுவர் (தமிழர்) வரவேற்பிற்காக ஒரு நிகழ்ச்சி வரும் 13-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனக்கும் அழைப்பு வேண்டுமா என்று நண்பர் ஒருவர் கேட்டார்... 'ஆஹா.. அதுக்கென்ன, பேஷா வந்துடலாமே. புக் பண்ணி வச்சிரும்.' சொல்லிவிட்டு சில விநாடி தாமதிக்கிறேன்....., 'டிக்கெட் ரேட் 70 ரியால்' அப்படின்னு ஒரு குண்டைத் தூக்கி போட்டார்!

என்னது?!

"5 ஸ்டார் ஹோட்டல் இண்டர்காண்டினெண்டலில் வரவேற்பு! பப்வே சிஸ்டம்.. அதான், டிக்கெட் விலை அதிகம்... குறைந்தது 600 பேராவது வருவாங்க.."

அதிகம் யோசிக்கவேண்டியிருக்கவில்லை!

"ம்... அதெல்லாம் சரிசார்.. இண்டியன் எம்பசில நடக்கும் நினைச்சேன். ஆனால் இவ்வளவு செலவு பண்ணி...... இல்லை சார்.. நான் வரலை! "


****

"நீ வர்றியோ இல்லியோ ஒரு விசா வாங்கி வச்சிக்கயேன்... அதினால ஒண்ணும் குறைஞ்சிடாது..."

யூ.எஸ் விசா வாங்குவதற்காக இந்த அட்வைஸ் வந்து இரண்டு வாரம் இருக்கும்.... நான் யோசித்துக்கொண்டிருந்தேன். இந்திய ஜாப் மார்கெட் ஓஹோ வென்று இருக்கிறது. பெங்களூர் பக்கம் போய்விடலாமா என்ற எண்ணம் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டிருக்கிறது.
தினசரி குறைந்தது இரண்டு மெயில்கள் வருகின்றன. 6 வருடங்களுக்கு முன் விட்டு வந்த இந்திய இரவு நேர மொட்டை மாடிப் பேச்சுக்களின் சுகந்தம் மன நாசியை அவ்வப்போது நெருடிப் பார்க்கிறது... இதில் யூ.எஸ் வேறா?

கவலைப் படாதே சகோதரா.. இப்போதைக்கு விசா அவுட்..! இந்தச் சுட்டி மெயிலில் வந்து இந்த அவசரக் குழப்பத்தை வேகமாகக் கலைத்தது. இனி அடுத்த வருடம்தான். நேரம் இருக்கிறது. பொறுமையாகவே யோசிக்கலாம். இன்னமும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்..... கீதாசாரம்!
posted by சாகரன் @ 10/06/2004 01:16:00 AM  
4 Comments:
 • At 1:39 AM, Anonymous Anonymous said…

  (6.10.2004) Visitor said...

  சாகரன், இயல்பா இருக்கணும்னு நிறைய தமிங்கிலம் எழுதறீங்களோ?
  //பயர்வொர்க்ஸ்... சிம்பிளீ சூப்பர்ப்.. தொடர்ச்சியாக ஒரு 10 நிமிடம்.. கலர் கலராக.. படம் காண்பித்துக்கொண்டிருந்தன!
  //
  -காசி

   
 • At 10:23 AM, Anonymous Anonymous said…

  (7.10.2004) Visitor said...

  அமெரிக்காவுக்கான முயற்சிகள் தொடரட்டும் சாகரன். வாழ்த்துக்கள்.

  என் நண்பர் கேட்டார்னு ஏதோ தேடும்போது இந்த http://www.americagreencard.org/ இந்த முகவரி கிடைத்தது. போய் செப் பன்னினா இந்தியான்னாலே கழுத்தைப் பிடித்து வெளிய தள்ளுதுப்பா! சரி க்ரீன்லாம் வேனாம். ஏதாச்சும் H1 கிடைக்கலன்னா கூட Z1 ஆவது கிடைக்குதானு முயற்சி பண்ணலாம். (காதைக் குடுங்க..எளிய வழி..சுற்றுப்பயணியா வரும் அமெரிக்க ஆண்டிய ஒரே அமுக்கா அமுக்கி கல்யாணம் பன்னிட்டா போதும்!)

   
 • At 10:23 AM, Anonymous Anonymous said…

  (7.10.2004) Moorthi said...

  அமெரிக்காவுக்கான முயற்சிகள் தொடரட்டும் சாகரன். வாழ்த்துக்கள்.

  என் நண்பர் கேட்டார்னு ஏதோ தேடும்போது இந்த http://www.americagreencard.org/ இந்த முகவரி கிடைத்தது. போய் செப் பன்னினா இந்தியான்னாலே கழுத்தைப் பிடித்து வெளிய தள்ளுதுப்பா! சரி க்ரீன்லாம் வேனாம். ஏதாச்சும் H1 கிடைக்கலன்னா கூட Z1 ஆவது கிடைக்குதானு முயற்சி பண்ணலாம். (காதைக் குடுங்க..எளிய வழி..சுற்றுப்பயணியா வரும் அமெரிக்க ஆண்டிய ஒரே அமுக்கா அமுக்கி கல்யாணம் பன்னிட்டா போதும்!)

   
 • At 1:07 PM, Anonymous Anonymous said…

  (7.10.2004) KVR said...

  வெடிச்சத்தம் கேக்கிறப்போல்லாம் அந்த ஏரியாவிலே தான் இருந்தேன் (லாகூரில). முதல்ல துப்பாக்கி சூடோன்னு நினைச்சேன், அப்புறம் ஹோட்டல் சர்வரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டபோது தான் கொஞ்சம் நிம்மதி (வீடு எடுத்த அன்னைக்கே வெடிச்சத்தம் கேக்குது. நல்ல சகுனமா?)

   
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER