சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, September 22, 2004
பாஸ்போர்ட்....
பாஸ்போர்ட்...

இதை வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டுபவர்கள் அதிகம். அதிலும் சவுதியைப் பொருத்த மட்டில் இங்கு இது ஒரு கண்ட்ரோலிங் டாகுமெண்ட்.

வேலை செய்பவர்களின் பாஸ்போர்ட் கம்பெனிகளிடம் இருக்க வேண்டும் என்பது சவுதியில் ஒரு விதி தான் போலும்! ஸ்பான்ஸர்ஸ் என்று சொல்லப்படும் வேலை வாய்ப்புக் கம்பெனிகள், இந்தப் பாஸ்போர்டினை வைத்துக்கொண்டு இகாமா(Iqama) என்னும் குடியிருப்பு தாளினையோ அல்லது பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் காப்பியையோ தரும். இந்தப் பேப்பர்கள் இல்லாமல் இங்கு நடமாடுவதென்பது ரொம்பவே ரிஸ்கானது.

சவுதி அரேபியா வருவதில் ஏற்படும் நல்லது அல்லது தீயதுகளில் ஒன்று இந்த கவனக் குவிப்பு. சும்மா இருக்கும் போது கூட, பேண்டின் பின் பக்கம் உறுத்திக்கொண்டிருக்கும் பர்ஸ் மீது கவனம் இருக்கும். அது ஒரு தவிர்க்க முடியாத மனப்பழக்கம். இந்தப்பழக்கம் பல காலம் இருந்து விட்டபிறகு வேறு எங்கு சென்றாலும் கூட இந்த கவனப்படுதல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

சில வருடங்களுக்கு முன்னர் துபாய் சென்றிருந்தபோது, அங்கு பேசிய நண்பர் ஒருவர் சொன்னார்,


"சவுதிலேர்ந்து வந்ததினால, இன்னிக்கும் எப்ப பார்த்தாலும், பாக்கெட்ல பர்ஸ் இருக்கா, அதில பாஸ்போர்ட் இருக்காங்கற எண்ணம் உறுத்திகிட்டே இருக்கு. அதுவும் தவிர, சலா டைம் வந்துடப்போகுது கடையெல்லாம் மூடிடுவாங்க-ங்கற எண்ணம் கூட பல நேரம் வரும். ஏதோ ஒரு விதத்தில் அடிமையாக பழக்கப்பட்டுவிட்ட மாதிரி... முன்ன இருந்த சுதந்திரமான எண்ணம் தொலைஞ்சுடுச்சுங்கறமாதிரி ஒரு பீலிங்."
சவுதி அரேபியா, வோர்ல்ட் ட்ரேட் ஆர்கனைசேசனில் (WTO) இணையப்போவதாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது நடக்குமா நடக்காதா என்பது சவுதி பிசினஸ் வட்டாரங்களின் முக்கியப் பேச்சுக்களில் ஒன்று! நம்ம ரேஞ்சுக்கு இந்தப் பேச்சுக்கள் புரியாவிட்டாலும், பாஸ்போர்ட் எல்லாம் இனிமேல் அவரவரிடமே இருக்க வேண்டும் என்பது WTO வின் கட்டளைகளில் ஒன்று என்று சொல்கிறார்கள். இந்த விசயம் எவ்வளவு தூரம் உண்மை என்பதுத் தெரியவில்லை.

சமீபத்தில் ஒரு சவுதி நண்பரின் பாஸ்போர்ட்டைப் பார்த்தேன். ஆச்சரியமான விசயம் என்னவென்றால் அதில் ஒரு சின்ன சிப்பும்( chip) இணைந்திருந்ததுதான்!! அனைத்து பழைய பாஸ்போர்ட்களையும் மாற்றி புதிய பாஸ்போர்ட்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் இருக்கும் இந்த சிப்-பில் அந்தந்த பாஸ்போர்ட் ஓனரின் முழு விபரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இனி போலிகள் நடமாடுவது தவிர்க்கப்படும் என்பது மட்டுமல்ல.. ஏர்போர்ட் பணிகளும் சுலபமாகும் என்கிறார்கள். எல்லாம் யூ.எஸ்-ஸின் கைங்கரியம்தான் என்று கேள்வி!!

பாஸ்போர்ட் - ஸ்பான்ஸரிடம் இருப்பது பற்றி, 'நம்ம கிட்ட இருக்கறதவிட, அங்க இருந்தா பத்திரமா இருக்குல்ல...' என்று எடுத்துக்கொள்வது ஒரு பக்கம் என்றாலும், இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது லேபர் கிளாஸ் என்று சொல்லப்படும் வேலையில் இருக்கும் நண்பர்களினுடையது!

சில மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர், என் வீட்டிற்கு எலக்ட்ரிக் வேலை செய்து கொடுத்தவர்... திருச்சிப் பக்கம். அவர் ரூமிற்குக் கூட பலமுறை சென்றதுண்டு. ஆல்-இன்-ஆல் அழகுராஜா. எலக்ட்ரிகலிருந்து.. டிஷ் ஆண்டெனா, பிளம்பிங்க், பெயிண்டிங் என்று எந்த வேலையும் செய்யக்கூடியவர்.

"வந்து 8 வருசம் ஆச்சுங்க.. முன்ன இருந்த மாதிரி இப்ப உள்ள கஃபில்(ஸ்பான்ஸர்) இல்லை. வர்ற ஜூன்ல இகாமா எக்ஸ்பைர் ஆகுது. போதும் போ-ன்னு கிளம்பிடலாம் இருக்கேன்" என்றார்.

"எப்படிங்க அது, உங்க ஸ்பான்ஸர் அலோ பண்ண வேண்டாமா?".

"அவன் என்னங்க சொல்றது. நானே போய் இகாமா இல்லைன்னு போலீஸ்ல மாட்டிகிட்டா அவங்களே அனுப்பி வச்சிடறாங்க. என்ன.. டிக்கெட்டுக்கு மட்டும் காசு எடுத்து வச்சிக்கணும்."

"பாஸ்போர்ட் கேட்டா?"

"அதுவும் தொலைஞ்சிடுச்சு சொல்லவேண்டியதுதான்!"


பி.கு


அந்த நண்பர் இப்பொழுது இந்தியாவில்....

****

இன்று ஒரு அவசரத் தேவையாக பாஸ்போர்ட் காப்பி தேவைப்பட்டது. வீட்டுக்குச் சென்று தேடினால் கிடைக்கவில்லை. சரி, ஸ்பான்ஸர் கிட்ட கேட்டு வாங்கலாம்னு போனா...

மதியம் 2:00 மணிக்கே அலுவலகம் திறந்திருந்தாலும், 'மாலை 4:30 மணிக்கு மேலத்தான் அந்த ஆள் வருவாரு.. நீங்க 4:30க்கு வாங்க' சொல்லிட்டாங்க.

சரின்னு, மறுபடி 4:30 க்கு போனேன்... அப்பவும் அவரைக் காணோம்!

உட்காரச்சொல்லி, மணி 5:20 க்கு மேலாகியும் வரவில்லை. பொறுக்க முடியாமல் ரிசப்சனில் சென்று விசாரித்தால், 'அந்த ஆள் 4 மணிக்கு வந்துட்டு உடனே கிளம்பி வெளியில போய்ட்டாரே... திரும்ப வருவாரான்னு தெரியாது'-ன்னு கேஷிவலா சொல்றாங்க!! (.. Grrr...)
posted by சாகரன் @ 9/22/2004 11:35:00 AM  
3 Comments:
 • At 2:55 AM, Anonymous Anonymous said…

  (22.9.2004) மூக்கன் said...

  கேட்கவே கஷ்டமாக இருக்கிறது...:-(

   
 • At 12:04 PM, Anonymous Anonymous said…

  (23.9.2004) KVr said...

  சாகரன், இது போல சொல்ல ஆரம்பித்தால் வலைப்பதிவு முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

  என்ன செய்வது, ஒவ்வொருவருக்கு அமையும் ஸ்பான்ஸர்கள் அப்படி. ஆனாலும் தினமும் குறைந்தது நூறு பேராவது சவுதிக்கு லேபர் க்ளாஸில் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

   
 • At 12:25 PM, Anonymous Anonymous said…

  (23.9.2004) சாகரன் said...

  தெரியும் நண்பா...

  நேற்று இதை எழுதத் தூண்டிய காரணத்தையும் கீழே குறித்து வைத்திருந்தேன். ஆனால் பின்னர் பி.கு இணைக்கும் போது, div tag செய்த பிரச்சனையால் காணாய்ப் போய்விட்டது....

   
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER