Friday, September 17, 2004 |
கிருஷ்ணார்ப்பணம்! |
'பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ?'
எம்.எஸ் -ன் குரலில் அடிக்கடி எங்கள் வீட்டில் ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று! காற்றினிலே வரும் கீதத்தைத் தாண்டி எனக்குப் பிடித்த பாடல். தலையாட்டும் ஒரு இசை நயம் அதில் இழையோடும்.
மீரா... எத்தனையோ தடவை பார்த்திருந்தாலும், மறுபடியும் பார்க்கும் போது கூட நெஞ்சைக் கொள்ளை கொள்ளத்தான் செய்கிறது. அந்த கேரக்டருக்கு எம்.எஸ் தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.
இறை என்ற நம்பிக்கையின் மீது ஆழமான பற்றும் தீராத நினைவும் இருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு உருகி நடிக்க முடியும். அவர் கண்களில் தெரியும் எங்கோ ஓரிடத்தில் எப்பொழுதும் நினைப்பிருப்பது போன்ற மயக்கமான காந்தமும், குரலில் இருக்கும் நெகிழ்வான கம்பீரமும் வேறு யாருக்குமே நடிப்பு என்ற வகையில் இருந்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
நிறைய பேருக்கு பிரியமான கடவுள்கள் என்று பட்டியலிட்டால், முருகன்,பிள்ளையார், கண்ணன் இவர்கள் மூன்று பேர்தான் அதிகம் வருவார்கள் என்று நினைக்கிறேன்.
என்ன காரணமாக இருக்கக் கூடும்?
குழந்தைகளாக இருந்ததான கதைகளும், அவர்களது விளையாடல்களும் கேட்பவர் மனதிலும், நெருங்க முடியும் என்ற எண்ணத்தை உருவாக்குவதாலா?
இருக்கலாம். சுலபமானவர்கள், எளிதானவர்கள், நம்மவர்கள் என்ற நினைப்பு உடனடியாக ஏற்படுவது நியாயம்தானே!
கண்ணன் பாடல்கள் தமிழிசையில் தனியிடம் பிடித்தவை. எத்தனையோ புகழ்பெற்ற சினிமா பாடல்களும் உண்டு என்பதும் தெரியாத விசயமல்லவே!
'தீராத விளையாட்டுப் பிள்ளை...' - பாரதி பாடிய இந்தப்பாடல் முதல்வரியைக் கேட்டாலும் கூட போதும் அடுத்தவரி தானாகவே மனதில் ஓடும்!
'தாயே யசோதா' என்றொரு பாடல்... அதில் வரும் ஒரு வரியை வெகு சமீபத்தில்தான் கவனமாகக் கேட்க நேர்ந்தது. ரொம்பவே ரசித்தேன். ..
யசோதையிடம் புகார் சொல்ல வருகிறார்கள் அந்த கிராமத்து தாய்மார்கள். பலவிதத்தில் புகார் சொல்லிய பிறகு ஒரு புகாராக இதனையும் சொல்கிறார்கள்...
"அடியே யசோதா, பாலனல்லடி உன் மகன், ஜாலம் மிகப் புரிபவன். பாலன் என்று நினைத்து முகம் கொடுத்தால், மாலையிட்டவன் போல வாயில் முத்தமிடுகிறான்! நான்கு பேர்கள் பார்க்கச் சொல்ல வெட்கமாக இருக்கிறது!!"
****
இங்கே டி.ஆர்.டி (டி-ஐ ரி என்று எழுதுவார்கள்!) என்றொரு தொலைகாட்சி வந்தது. அதில் அடிக்கடி கண்ணன் கதை கொண்ட படம் ஒன்று போடுவார்கள். அவர்களிடம் வேறு டி.வி.டி இல்லையென்றால் இதனைப்போட்டு விடுவார்கள் போலும்! அருத பழசு. கட்டாகி கட்டாகி ஓடும். இந்த நாள் வரை அந்தப் படத்தின் பெயர் என்ன என்பது தெரியவில்லை. அதில் வரும் கம்சனும், கிருஷ்ணனின் நண்பர்களாக வருபவர்களும்தான் ரொம்ப சுவாரஸ்யம்..
N/A
|
நான் வாசிச்சது எப்படி இருந்தது?
|
N/A
| கண்ணன் பிறந்த கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதையொட்டி எனக்கு ரொம்பவும் பிடித்த விசயம் என்று ஒன்றிருந்தால் அந்த நாளில் செய்யப்படும் தின்பண்டங்களும், வீடு முழுக்க போடப்படும் குட்டிக் குட்டி கால்களின் தடங்களும்தான் :-) இங்கே சவுதியில் ஏது அதற்கெல்லாம் வழி?!
வீட்ல ஊருக்கு போயிருக்காங்கள்ல... இன்னிக்கு ஒரு மெயில் அனுப்பிருந்தாங்க. என்னன்னு பிரிச்சு பாத்தா...
பானைல வெண்ணை தருவாங்க சொன்னாங்களே?!
| "எங்க வீட்டுக்கு கிருஷ்ணர் வந்திருந்தாரு... இதோ பாருங்க" - சொல்லி படம் அனுப்பியிருக்காங்க... :-)
படத்தில் எங்கள் மகள்...!
|
posted by சாகரன் @ 9/17/2004 01:26:00 AM |
|
8 Comments: |
-
(17.9.2004) நவன் பகவதி said...
அருமையான பதிவு.
உடனேயே வீட்டில சொல்லி திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க.
-
(17.9.2004) சாகரன் said...
நன்றி நவன்...
இதோ இப்பவே சொல்லிடறேன்... :-)
-
(18.9.2004) Shreya said...
choooo chweet!
-
(18.9.2004) Moorthi said...
அடடே என் உயிர்த்தோழியா இது?..பாருங்க என்னை கண்டுக்கவே இல்லை!...ம்...அப்புறம் அழுவேன்...ஹலோ சொல்லுங்க பார்க்கலாம்?!
-
(18.9.2004) Moorthi said...
அடடே என் உயிர்த்தோழியா இது?..பாருங்க என்னை கண்டுக்கவே இல்லை!...ம்...அப்புறம் அழுவேன்...ஹலோ சொல்லுங்க பார்க்கலாம்?!
-
(18.9.2004) பரஞ்சோதி said...
மருமகள் வர்ணிகா கிருஷ்ண அவதாரம் அருமை. வெண்ணை திருடும் கள்ளியா?
-
(19.9.2004) காசி said...
மயிலிறகு முதற்கொண்டு ஏற்பாடு செய்திருக்கீங்க... அழகு!
-
(21.9.2004) KVr said...
திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க சார் :-)
|
|
<< Home |
|
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|
(17.9.2004) நவன் பகவதி said...
அருமையான பதிவு.
உடனேயே வீட்டில சொல்லி திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க.