சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, September 19, 2004
தன்னளவில் தனிஉலகம்
எப்பொழுதாவது நீங்கள் வேறு அடுத்தவர் வேறு என்று உணர்ந்திருக்கிறீர்களா? கண்டிப்பாக உணர்ந்திருப்பீர்கள்.

தனிமையிலும் நெருக்கமில்லாத இடங்களிலும், நெருக்கமில்லாதவர்களுடனும் கண்டிப்பாகத் தெரியும்.
ஆனால் மற்ற நேரங்களில்? உதாரணத்திற்கு வீட்டில் இருக்கும் போது... அல்லது நெருங்கின நண்பர்களுடன் இருக்கும் போது... இப்படிப்பட்ட நேரங்களில் எப்படி?

எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் இது எல்லோருக்குமே எல்லா நேரமுமே தோன்றுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நட்பு உறவு என்று இருந்தாலும் கூட, இந்த விலகல் மனப்பான்மையும் கூடவேதான் இருக்கிறது. பல நேரங்களில் உள்ளார்ந்த விசயமாக இருந்தாலும், சில நேரங்களில் தனித்து நமக்கே தெரிய நேரிடுகிறது.

இதில் பிரச்சனை என்ன வென்றால், நம்மைத் தவிர மற்றவர் மிகவும் சந்தோஷமாகவும் தன்னை மறந்து மகிழ்வாகவும் இருக்கிறார் என்று தோன்றுவதுதான்! :-)

இது உண்மையா? நாம் மட்டும் வித்தியாசமா? அடுத்தவரைப் போல ஒரு விசயத்தில் ஒன்றுவதில் நமக்கு ஏன் இப்படிப்பட்ட சந்தேகம்?

நான் பேசுவது, பொருளாதார நிலைகள் குறித்து அல்ல... வாழ்வின் தேடலில் வழிநடத்துதலில் முக்கியமாக இருக்கும் சந்தோஷத் தேடல் குறித்த ஒரு சிந்தனை.

இதற்கு ஒரு காரணம், நம் அளவில் நிம்மதியின்மை. அல்லது அமைதியின்மை. இதன் அடிப்படையாக நம்மைப் பற்றி நாம் எண்ணிக்கொண்டிருக்கும் அதீத மதிப்பு, அல்லது பெரியமனிச தோரணை என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதுதான் இந்த மெல்லிய பொறாமைக்கே அடித்தளமாக அமைகிறது!

பொறாமை என்பது நம்மில் உயர்ந்தவர்கள் மீதுதான் ஏற்படும் என்பது ஒரு தவறான அபிப்ராயம். உற்று கவனித்தால், எப்பொழுதெல்லாம் நம்மைவிட அடுத்தவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட சிறிய பொறாமை ஏற்பட்டே தீருகிறது!

*****

இங்க எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்... சின்னச் சின்ன விசயங்களைக் கூட சந்தோஷமா பேசுவாரு... இன்னிக்கி ப்ளாங்க் சி.டி வாங்கப்போனேன்... அங்க இந்த சி.டி பென் பிரீயா கிடைச்சுது அப்படிங்கறத ஒரு பெரிய விசயமா வேலை மெனக்கெட்டு போன் பண்ணி சந்தோசப்பட்டாரு.. என்கிட்ட மட்டும் இல்லை.. எங்க சர்கிளில் இருக்கறவங்களுக்கும் கூடச் சொன்னாரு கேள்விப்பட்டேன்...

எப்பவுமே அந்த நண்பர் இப்படித்தான்னு நாங்க பேசிக்கிட்டாலும், மனசுல ஒரு மூலையில இந்த விசயங்களைக்கூட எடுத்துக்கிட்டு சுவாரஸ்யமா சந்தோஷப்பட முடிகிறதே என்று ஒரு சிறு பொறாமை வரத்தான் செய்தது!
posted by சாகரன் @ 9/19/2004 01:50:00 AM  
2 Comments:
 • At 6:49 AM, Anonymous Anonymous said…

  (21.9.2004) அன்பு said...

  அதுமாதிரி நண்பரை பார்க்கும்போது, 'வெவரம் தெரியாத ஆளா இருக்காரு.... இது ஒரு விஷயமா?"ன்னு எனக்கும் தோணும், உண்மை. அதே நேரம், இன்னும் யோசித்துப் பார்த்தால் - ஒங்களோட பொறாமை எனக்கும் வரும். அது ஏன்? நாம் அந்தநிலையைக் கடந்ததால், இருக்கும் நிலையைத் தக்கவைக்கப் போராடி, அடுத்த நிலைக்குச்செல்லும் கனவு காண்பதால்.

   
 • At 6:53 AM, Anonymous Anonymous said…

  (21.9.2004) அன்பு said...

  மேலும்... அந்த தொலைபேசி அழைப்பு - நமக்கு எரிச்சலாக இருந்தாலும், அந்தத்தொடர்பு இருக்கவேண்டும் - அறுந்துவிடக்கூடாது. அதிலும், நம்மைப்போல வெளியூரில் இருப்பவர்களுக்கு - நட்புதானே எல்லாம்!?

   
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER