சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, October 27, 2004

நண்பர்கள் மன்னிக்கவும்.

கடைசியாக இன்று பதிவிட்டது... தவறான ஒரு பதிவு...

தெரியாமல் வந்துவிட்டது.

during testing some code change in template, i was thinking i suppressed the atom feed. But looks like it was on. :-(


*****

இந்தப் பதிவு...  வெறுமையாக இல்லாமலிருக்க முன்னர் ஒரு நாள் எழுதப்பட்ட ஓரு பதிவினை இங்கு குறித்துவைக்கிறேன்.
--

நண்பர் பரம்ஸ் எழுதிய ஒரு பதிவிலிருந்து...!

 
நண்பர்களே, கால இயந்திரம் அது நம்முடைய அனைவரின் கனவு இயந்திரம். காலகாலமாக அறிவியல் வல்லுஞர்களின் குறிக்கோளாக இருந்த ஒன்று.

நண்பர்களே! நம்மில் அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையேனும், கால இயந்திரம் பற்றி யோசிக்காமல் இருந்திருக்க மாட்டோம்.

கால இயந்திரம், அது நாம் விரும்பும் காலத்திற்கு கொண்டு செல்லும் இயந்திரம். என்னுடைய வாழ்க்கையில் கால இயந்திரத்தை என் கற்பனையில் இயக்கி வெற்றி கண்ட நாட்கள் ஏராளம்.

எனக்கு தேவை எல்லாம், யார் யார் எந்த எந்த கால கட்டத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள், அதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள்!
 
  
 

கால இயந்திரம்.... நன்றி பரம்ஸ்.. சிறு பிள்ளைத் தனமாக எனக்கு கனவுகள் நிறைய....

கடல் போன்ற வீர நாராயண ஏரியில் கால் நனைக்க ஆசை...., ஆழ்வார்கடியான் நம்பி, வந்தியத்தேவனுடன், சோழ நாடு முழுவதும், ஒரு நண்பனாக சுற்றிப் பார்த்து, பின்னர் அருள்மொழி வர்மனுடன் இலங்கையும் சுற்றிப் பார்க்க ஆசை.. பூங்குழலியின் குரல் இனிமையில் ஒரு பாடல் கேட்க ஆசை....

கல்கி அறிமுகப்படுத்திய பரஞ்சோதி நாயனாரின் பாதம் தொட்டு வணங்கி நிற்க ஒர் ஆசை..

தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிந்தது போல சிறு வயதில் நானும் ஆற்று மணலில் எதையாவது புதைத்து வைத்து துப்பறிந்த காலங்கள்... ஞாபகம் வருகிறது...

வானொலியில் அன்று பிரபலமாக இருந்த வானொலி அண்ணாவின் கதையை மீண்டும் கேட்க ஆசை ...
கோகுலத்தில் அழ.வள்ளியப்பா எழுதிய கதைகளை படித்து மகிழ்ந்த எனக்கு அவர் பற்றி தெரிந்து கொள்ள ஆசை...

அரக்கு மாளிகையில் தப்பித்த பாண்டவர்களுடன் அஞ்ஞாத வாசம் காட்டில் கழித்த அந்த காலகட்டத்தில் தினசரி நிகழ்வுகள் எப்படி இருந்தன என்று அறிந்துகொள்ள ஆசை..... கூடவே சென்று ஒரு வேடுவ நண்பனாக ஒரு தினம் அந்த சகோதரர்களின் பாசப்பிணைப்பை பருகி வர ஆசை... வயத்தில் முதிர்ந்த அந்த தாயை கவனித்துக்கொண்ட பாங்கை காண ஆசை... விதுரனின் வீட்டில் வேலைக்காரனாக இருக்க ஆசை...

ரகு வம்ச திலகம் ராமர் சீதைக்கும் அதே நேரத்தில் மற்ற மூன்று சகோதரகளுக்கும் ஒரே மேடையில் நிகழ்ந்த அந்த கல்யாண வைபோகத்தை ஒரு ஓரமாக நின்று பார்க்க வேண்டும் என்று ஆசை....

கர்மவீரர் காமராஜரின் காலத்தில் அவருடன் உணர்வாலும் கொள்கையாலும் இணைந்த நல்லோரின் நடுவில் ஒரு நாள் உட்கார்ந்திருக்கும் ஆசை...

TINTIN (காமிக்ஸ்) உடன் ஒரு அட்வென்ச்சர் டிரிப் மற்றும் Famous Five உடன் ஒரு டிரிப் அடிக்கும் ஆசை...

தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் சங்கத்திலிருந்து வெள்ளம் கொண்டு போன அந்த பழைய தமிழ் நூல்கள் மீண்டும் கிடைக்க ஏதேனும் முயற்சி செய்ய முடியாதா என்று பார்க்க அந்த சங்கத் தமிழ் காலம் செல்ல ஆசை....

தமிழ் வேதம் தந்த திருவள்ளுவ பெருந்தகையின் சீடனாக மாற ஆசை ...

மணிமேகலையின் கருணை முகம் பார்த்து, அட்சயப் பாத்திரத்தில் ஒரு நாள் உணவு எடுத்துக்கொள்ள ஆசை ....

தீன் இலாஹி உருவாக்கிய அக்பரின் அரண்மனையில் அனைத்துமத விவாதங்கள் நடந்த காலத்தில் அங்கு பேசப்பட்ட கருத்துக்களை ஒரு ஓரமாக நின்று வாயில் காப்போனாக கேட்க வேண்டும் என்று ஆசை....

யோசித்தால் இன்னும் எத்தனை எத்தனையோ கனவுகள்...

-சாகரன்

posted by சாகரன் @ 10/27/2004 02:24:00 PM  
3 Comments:
  • At 4:04 AM, Anonymous Anonymous said…

    (27.10.2004) Visitor said...

    அதானே பார்த்தேன், ஒரே இறைவா இறைவான்னு புலம்பவும் நானும் பயந்தில்ல போயிட்டேன்:-)
    -காசி

     
  • At 1:48 PM, Anonymous Anonymous said…

    (28.10.2004) Visitor said...

    அட.. நீங்க வேற, அதை தமிழ்மணத்தில பார்த்தவுடனே நானே கூட பயந்திட்டேன்..! :-)
    -சாகரன்

     
  • At 3:54 AM, Anonymous Anonymous said…

    (5.11.2004) shreya said...

    aanaalum aasaippaduvathu niRpathillaith thaanee?

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER