Monday, July 26, 2004 |
எதிர் கோபம் |
கோபம் பற்றி எழுதாதவர்கள் குறைவு.. வள்ளுவரிலிருந்து ராமகிருஷ்ணர் முதல் எத்தனையோ ஆன்மீகவாதிகள் எழுதிய ஒரு விசயம்தான். ஏன் எத்தனையோ பழமொழிகள் கூட உண்டு..மிகவும் பிரபலமான, 'கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்' என்ற பழமொழி ஒரு கிளிஷேயாக நம்மிடையே பயன்படுத்தப்பட்டுவரும் ஒன்று. குறைந்த பட்சம், 'எனக்கு கோபம் அதிகங்க...','எனக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவேன்னே தெரியாது' இந்த அளவிலாவது நம்மில் பலர் பேசுவதுண்டு.
இருந்தாலும் வேறு விதமாக யோசிக்க விரும்புகிறேன்.
கோபம் என்பது அதீதமான ஒரு சக்தி என்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு.
ஆமாம்... நான் கோபத்தினை வரவேற்கிறேன்... ஏன் அந்த அதீதமான சக்தி வேறு திசையில் திருப்பிவிடப்பட்டால்... என்ன விதமான பயனைத்தரும் என்று யோசிக்க ஆசைப்படுகிறேன்.
எப்படியெல்லாம் கோபம் வரும்? இரண்டு விதமாக.... ஒன்று உங்களுக்கு கீழ் உள்ளவர்களிடம் உங்களால் கோபம் காட்டமுடியும் என்று தெரிபவர்களிடம். இரண்டு உங்களிடம் கோபப்படுபவர்களிடம் திரும்ப கோபம் காட்டமுடியாத ஒரு நிலை.. அப்பொழுது ஏற்படும் கோபம்.
முதல் வகை பற்றி பேச நிறைய பேர் இருக்கலாம். குறைக்க வேண்டும் என்று அறிவுரை சொல்ல நிறைய பேர் வரலாம். தனிமனித வாழ்க்கையில் ஏற்படும் கோபங்கள் அப்படிப்பட்ட அறிவுரைகளுக்கு அடங்கியவையாகவும் இருக்கலாம். ஆனால் நான் பேசப்போவது இரண்டாம் வகைக்கு. அதாவது உங்களிடம் மற்றவர்கள் கோபப்படுவதால் ஏற்படும் எதிர் கோபம் பற்றி..! இந்த எதிர் கோபம் தான் முக்கியமானது ஒரு மனிதனை மிகவும் காயப்படுத்துவதால் ஏற்படும் எதிர்ப்பு சக்தி. எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்ற நியூட்டனின் விதி அறிவியலுக்கு மட்டுமல்ல...!
இந்த எதிர் கோபம்.. அழிவை நோக்கித் திரும்பாமல், வேறு பக்கம் மாற்றப்பட வேண்டும். முற்றிலும் வித்தியாசமாக கையாளப்பட வேண்டும். அந்த முயற்சியின் காரணமாக வெற்றியையும் அடையும் பொழுது, முன்னர் கோபப்பட்டவரை நன்றி சொல்லி நினைக்கத் தூண்டும்! இன்றைக்கும் எத்தனையோ கம்பெனிகளில் இருக்கும் M.Dக்கள் பலர் முந்தைய கம்பெனியை நினைத்துப்பார்ப்பது இதனால்தான்.
ஒரு நிர்வாகத்தினை பிடிக்காமல் தனி நிர்வாகம் துவங்கியது தான் சரியானதே தவிர, அதே நிர்வாகத்தில் இருந்து கொண்டு அந்த நிர்வாகத்தினை கெடுத்துக்கொண்டிருப்பது அல்ல. இந்த சிந்தனை நிச்சயம் பலருக்கு சரியான நேரத்தில் வரும். அப்படி வராதவர்கள் இன்னும் எதையும் புரிந்துகொள்ளாதவர்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.
எத்தனையோ அரசியல் கட்சிகள் உடைவதும் இப்படிப்பட்ட காரணங்களால்தான். ஆனால் எத்தனை பேர் கண்ணியம் காக்கிறார்கள் என்பது அரசியல் சார்ந்தது.
தனிமனித வாழ்க்கையிலும் கூட எதிர் கோபத்தினால் சாதித்தவர்களும், படித்தவர்களும், முன்னேறியவர்களும் அதிகம்... ஆனால் வெளியே சொல்வார்களா என்றால் சந்தேகம்தான்..
இப்படி புதிய சக்தியாக உருவெடுப்பவர்களிடமிருந்தும் பிரிந்து வேறு புதிய சக்திகள் உருவாகக்கூடும்.
இது ஒரு ஸ்டார் டோபோலஜி... முடிவில்லாத நட்சத்திரச் சிதறல்கள்...
பதிவு எண்: 34
|
posted by சாகரன் @ 7/26/2004 04:45:00 PM   |
|
3 Comments: |
-
கோபம் வருகிறது என்பதையும் அட!கோபமாய் இருந்தோம் என்பதையும் உணர முடிகிற எங்களால் கோபமடைந்து தன்னிலை மறக்கின்ற அந்த கண நேரத்தை கவனிக்க முடிகிறதில்லை. நாம் கோபமாகவும் கோபமே நாமாகவும் ஒன்றி விடுகிறோம். கோபத்திற்கும் எங்களுக்கும் உள்ள இடைவெளி என்ன? அதை இன்னும் இன்னும் அதிகரித்துக் கொள்ள முடியுமா?
ஷ்ரேயா
-
கோபத்தின் வீரியத்தை உபயோகப்படுத்த ஒரே வழி, அதை பொறுமையில் ஊறப்போடுவதுதான். அப்போதுதான் உங்கள் கோபத்தை நிங்களே உபயோகப்படுத்திக்கொள்ள முடியும்.
ஆற்றுக்கு அணை கட்டி மின்சாரம் எடுப்பதில்லையா..அதே லாஜிக் தான்.
-
மன்னிச்சுகங்க ஷ்ரேயா.. நான் எதிர் கோபம், அதாவது நம்மால நேரடியா காட்ட முடியாத கோபம் பத்திதான் எழுதினேன். நிங்க கேக்கறது பத்தி என்னால எதுவும் சொல்ல முடியல...
|
|
<< Home |
|
|
|
|
About This Blog |
 பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
 |
|
கோபம் வருகிறது என்பதையும் அட!கோபமாய் இருந்தோம் என்பதையும் உணர முடிகிற எங்களால் கோபமடைந்து தன்னிலை மறக்கின்ற அந்த கண நேரத்தை கவனிக்க முடிகிறதில்லை. நாம் கோபமாகவும் கோபமே நாமாகவும் ஒன்றி விடுகிறோம். கோபத்திற்கும் எங்களுக்கும் உள்ள இடைவெளி என்ன? அதை இன்னும் இன்னும் அதிகரித்துக் கொள்ள முடியுமா?
ஷ்ரேயா