சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Friday, July 23, 2004
எது விரயமாகும் நேரம்?
எது விரயமாகும் நேரம்?

இது ஒரு இண்டரஸ்டிங்கான கேள்வி... ! ஏன் சொல்கிறேன் என்றால் இது ஆளாளுக்கு மாறுபடும் ஒன்று!

யோசித்துப்பாருங்கள்... எந்த நேரம் உங்களுக்கு முக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ... அந்த நேரம் அடுத்தவர் பொருத்த வரை நீங்கள் வெட்டியாக கழித்துக்கொண்டிருப்பதாக எண்ண வைக்கலாம்.

இந்த விசயம் நம்முடைய மிகச் சிறிய வயதிலிருந்தே ஆரம்பித்து விடுகிறது.

உதாரணத்திற்கு கிரிக்கெட் விளையாடுவது என்பது எனக்கு முக்கியமான ஒன்றாக இருக்கலாம் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது... ஆனால் அந்த நேரத்தை வெட்டியாகக் கழிப்பதாக என் தந்தை சொல்லக்கூடும்..!

இப்படி ஒவ்வொரு விசயத்தில் ஒருவர் ஈடுபடும் போதும் மற்றொருவர் மறுகருத்து கொண்டிருப்பதால் தான் பிரச்சனைகள் வருகின்றன. அதிலும் முக்கியமாக தன் கருத்தை பிறர் மீது திணிக்க வேண்டும் என்று நினைக்கும் போது நிச்சயம் உள்ளார்ந்த பிரச்சனை வருகிறது... மன வருத்தம் வருகிறது.

இந்த பிரச்சனைகளும் சின்னஞ்சிறு வருத்தங்களும் கால காலத்திற்கும் இருக்கக் கூடியவை மட்டுமல்ல நீங்களும் தெரிந்தோ தெரியாமலோ இது போன்ற மன்வருத்தங்களை பெறவோ தரவோ போகிறீர்கள் என்பது நிச்சயம்.... !

இதிலிருந்து முழுமையாக தப்பிக்க வேண்டுமானால் துறவறம் தான் ஒரே வழி....ஆனால் இந்த சின்னஞ்சிறு விசயங்களுக்காக துறவறம் கொள்வது முட்டாள்தனம்... அதைவிட அப்பப்ப வெகேஷன் போகலாம்....  இந்த கேள்வி, இதனால் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் எல்லாமே மறந்து போகும்...!!!


posted by சாகரன் @ 7/23/2004 12:51:00 AM  
2 Comments:
  • At 5:13 PM, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said…

    ஒவ்வொருத்தரும் தங்கள் எதிர்பார்ப்புகள் என்கிற filter கண்ணாடியினூடாக பார்த்தால் தோற்றங்கள் உண்மையிலிருப்பதை விட வேறாகத்தான் தெரியும். எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால் dissappointments க்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.

    ஷ்ரேயா

     
  • At 7:43 PM, Blogger சாகரன் said…

    உண்மைதான் ஷ்ரேயா....

    நீங்கள் சொன்ன இந்தக் கருத்துதான் இந்தப் பதிவின் கடைசி பாராவாக இருக்க தகுதியானது. முத்தாய்ப்பானது!

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER