| 
                        
                          | Sunday, November 19, 2006 |  
                          | ஆடுபுலி ஆட்டம் |  
                          | ஆடுபுலி ஆட்டம் என்றால் என்னவென்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. ஆனால் ஆடுபுலி ஆட்டம் சுமார் நான்கு மணி நேரம் சவுதி - ரியாத் - இந்தியன் எம்பசி ஆடிட்டோரியத்தில் க ல க் க லாக நடைபெற்றது.  (ஏன் கலக்கலாக என்பதற்கு நடுவில் இவ்வளவு Gap ? கூட்டம் அவ்வளவு குறைவு :-)  பின்ன... நாம நடிச்சதையெல்லாம் பார்க்கறதுக்கு அவ்வளவுத்தேன் வரும் :-))
 
 இந்திய தமிழ் கலைக்குழுவின்  தலைவர் திரு.எஸ்.ஜெயசீலன் அவர்களின் எழுத்து, ஆக்கம், உருவாக்கம், டைரக்ஷன் (இன்னும் என்னென்ன சொல்லலாமோ அத்தனையும் சொல்லலாம்) நடிப்புடன், எங்களது நடிப்பும் இணைந்து அருமையான ஒரு நாடகமாக இது இருந்ததாக அக்கம் பக்கத்தில் அதிசயமாக காத்திருந்து பார்த்த பொறுமைசாலிகள் சொன்னார்கள். (அவர்களுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுக்கச் சொன்ன என்னுடைய யோசனையை யாரும் கேட்கவில்லை).
 
 ஆட்டம் நடைபெற்ற தேதி: 16 நவம்பர்.
 |  
                          | posted by சாகரன் @ 11/19/2006 12:39:00 PM   |  
                          |  |  |