சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, August 28, 2005
கல் மண்டபம்
அது ஒரு டிரஸ்டால் நடத்தப்படும் ஆஸ்பத்திரி. இறந்துபோனவரை வீட்டில் கொண்டு விடுவதற்காக அங்கு மரண ஊர்தி இருந்தது. அதற்கும் ஆஸ்பத்திரியில் பணம் வசூலித்துக்கொண்டார்கள். ஆனாலும்... ஊர்தி எடுக்கப்படவில்லை. ஏன்?

டிரைவருக்கு பணம் வேண்டும். எவ்வளவு? 3000 ரூபாய். கொடுத்தால் முக்கால் மணி நேரத்தில்.. இல்லையென்றால் எப்ப வரும் தெரியாது.
அந்த மனிதருக்கு வேறு வழி இல்லை. பணம் கொடுத்துவிட்டு அந்த நெருங்கிய உறவினரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இதோ இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது பணம் பறிக்கும் படலம்...இனி எல்லா இடத்திலும், பணம்தான். வாத்யார் ஏதேதோ கதைகள் சொல்லி, எத்தனையோ விதமாக மனதைக் குழப்பி, பணம் பறிக்கிறார். சென்சிடிவ் ஆக இருக்கும் அந்த மனிதரின் பணம் தண்ணீராக கரைகிறது. இந்த மனிதர்களுக்கு மனமே இல்லையா என்று தோன்ற வைக்கிறது!

இது ஒரு பக்கம்....

இன்னொரு பக்கம் இருக்கிறது.. அதுதான் இந்த புத்தகம் சொல்லும் கதை.

எழுத்தில் சுவாரஸ்யம் நிறைய இருக்கிறது என்று சொல்ல முடியாது. புலிநகக் கொன்றை அளவிற்கு எழுத்து வீச்சு அதிகம் இல்லை. ஆனால், சுவாரஸ்யம் என்பது இந்த புத்தகம் எடுத்துக்கொண்டிருக்கும் களம். சுற்றி சுற்றி வெளியேற முடியாமல் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஒதுக்கப்பட்ட வாழ்க்கை முறையினரின் வாழ்க்கைச் சுவடுகள்.

கல் மண்டபம் - சமீபத்தில் படித்த ஒரு நாவல். சுமதி அவர்கள் எழுதி காவ்யா வெளியீடு.
மிகக் குறைவான பாத்திரங்கள். சவுண்டி என்று சொல்லப்படும் பிராமண சமூதாயத்தின் வாழ்க்கை முறையைச் சொல்லும் ஒரு நாவல்.

படிக்கலாம். நேரடி அனுபவம் உள்ளவர்களை கண்டிப்பாக அசைத்துப் பார்க்கும்.
posted by சாகரன் @ 8/28/2005 12:52:00 PM   12 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER