சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, April 23, 2005
Ctrl + Alt + Del
சமீபத்தில் 'மூன்று விரல்' என்ற புதினம் ஒன்றைப்படித்தேன். திரு.இரா.முருகன். எழுதியது. நல்ல புதினம்தான். ஆனால் டெக்னிகல் விபரம் தெரியாதவரால் பக்கம் தாண்டுவதென்பது கடினம்.  இதனை கணிணித் தெரியாதவர்கள் எப்படி படிக்கப்போகிறார்கள் எப்படி புரிந்து கொள்ளப்போகிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது.

அதைப் படிக்கும் போது சிலவிசயங்கள் மனதில் தோன்றின... தொடர்பில்லாத தொடர்பானவை. சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் பெரும்பாலானவர்களுக்கு அதுவும் கணிணித் தொழிலில் உள்ளவர்களுக்குக் கூட இதிலுள்ள சில பல டெர்மினாலஜிகள் புரிந்து கொள்ளப்படுவதில் தகராரு செய்யும். காரணம், இந்த ஊர்களில் உள்ள பெரும்பாலான கம்பெனிகலில் இந்த முறைகள் பின்பற்றப் படுவதில்லை. ஏனோ தானோ தான்! அதே நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதும் இன்னமும் நம்மை தயார் படுத்துவதில் தயங்கினால், கடைசி வரை இந்த ஊரில் மட்டுமே குப்பை கொட்ட முடியுமே தவிர இந்தியாவிற்கோ அல்லது வேறு இடங்களுக்கோ செல்வதென்பது பிரம்மப் பிரயத்னமாகிவிடும். (இவற்றைத் தெரிந்து கொள்வதென்பது 3-4 மாதங்கள் பிரிபரேசன் தான் என்பது அடுத்த விடயம். சமீபத்திய முன்னேற்றம், PMP(Project Management Professional) க்கு இப்பொழுது புதிதாக முக்கியத்துவம் தரப்படுகிறது. A good time to start learning.)

இல்லையென்றால், மூன்று விரல் அடிநாதம் போல, Ctrl + Alt + Del என்று வாழ்வை திரும்ப ஆரம்பிக்க வேண்டியதுதான்.

இன்னமும் சில பிடித்திருந்த விடயங்கள்:

தன்னைப் பார்க்க வரும் சந்தியா என்ற பெண்ணின் முன்னால், எப்படி அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அவன் செய்யும் முஸ்தீபுகள்.

காமம் - இந்த வயதின் கொடுமைகளில் ஒன்று, அதிலும், தாய்லாந்து போன்ற ஊர்களில் இருந்து கொண்டு தவிர்க்கவும் முடியாமல், உள்ளூர எங்கோ ஒரு ஓரத்தில் ஆசையுடனும் கதாநாயகனின் தவிப்பு. தான் ஒரு ஆண் விபசாரியோ என்ற மனக்குமைச்சல்.

பல்துளக்காமல் அலுவலகம் வந்து விட்டு, மனக்குமைச்சலுடன் திணரும் கதாநாயகன்.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும் தினப்படி நிகழ்வுகள்... சாதாரணமாக யாரும் யாருக்கும் சொல்லிக்கொடுக்காத பழக்கங்கள்.
posted by சாகரன் @ 4/23/2005 07:59:00 PM   2 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER