Saturday, June 11, 2005 |
புத்தகத் தொடராட்டம் |
கே.வி.ஆர் - ன் 'புத்தக மீமீ' பதிவில் மற்றும் மூர்த்தியின் 'புத்தகம் சரணம் கச்சாமி' பதிவுகளில் என் பெயருக்கு தொடர்ச்சி கொடுத்திருக்கின்றனர். நண்பர்களின் அழைப்பிற்கிணங்கி, இதோ என் பதிவு...
என்னிடம் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை:
சரியாக இதுவரை எண்ணிப்பார்த்ததில்லை. சில தினங்களுக்கு முன் தான் ஒவ்வொரு புத்தகத்திற்கும் எண் எழுத வேண்டும் என்று யோசித்திருந்தேன். சுமார் 200 புத்தகங்கள் சவுதியிலும், 150-200 புத்தகங்கள் சென்னையிலும் இருக்கக் கூடும். (சவுதியில் பெரும் பகுதி எழுத்துச்சித்தரின் புத்தகங்கள்! இந்த புத்தக லிஸ்ட், லேட்டஸ்ட் மற்றும் அவுட்டேட்டட் டெக்னாலஜி புத்தகங்களும் சேர்ந்தது.)
கடைசியாக வாங்கிய புத்தகம்:
கண்மூடியிருக்கும், 'மனத்துக்கண்' பதிவிலிருந்த லிஸ்ட் வைத்து, சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில் நிறையவே புத்தகங்கள் வாங்கியிருந்தேன். நினைவிலிருக்கும் சில புத்தங்களின் எழுத்தாளர்கள், ஆதவன், பா.ராகவன், சுஜாதா,ஜெயமோகன். (ஆனால், எதையுமே எடுத்து வரவில்லை :-(. முக்கியமாக எடுத்து வராததற்காக வருத்தப்படும் புத்தகம், 'தமிழ் மொழி நடைக் கையேடு'. )
கடைசியாக படித்த புத்தகம்:
சோ-வின் மகாபாரதம். அதற்கு முன்னர், 'மூன்றுவிரல்', 'புலிநகக்கொன்றை'.
எனக்குப் பிடித்த ஐந்து புத்தகங்கள்:
தலையணைப் பூக்கள்: பாலகுமாரன் ( மட்டுமல்ல, அவரது பல புத்தகங்கள்) பொன்னியின் செல்வன் அர்த்தமுள்ள இந்துமதம், கீதை - சித்பவானந்தரின் உரை. குறுதிப்புனல் - யோசித்துப் பார்க்கும் போது, ஏனோ நினைவில் வருகிறது.(ஒரு வேளை நேற்று இது பற்றி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்ததாலிருக்குமோ!) . ( கட்-கட் -கட் 0 இதற்கு பதிலாக தெய்வத்தின் குரலை இணைக்கிறேன்) தெய்வத்தின் குரல் - காஞ்சி பெரியவரின் அருளுரைகள். புலிநகக்கொன்றை - சமீபத்திய இணைப்பு.
என் சார்பில் தொடராட்டத்திற்கு:
நான் அழைக்க நினைத்த பல நண்பர்கள் ஏற்கனவே (மூர்த்தி, நவன், கோபி ,அன்பு, ராம்கி, செல்வராஜ்) எழுதிவிட்ட காரணத்தால், இனி.... (ஷ்ரேயா, பரணி தவிர்த்த) அதிகம் எழுதாத சில நண்பர்களும்..
ஷ்ரேயா, http://mazhai.blogspot.com/ இக்பால் - http://pkiqbal.blogspot.com/ பூ - http://pookkal.blogspot.com பரணி http://www.baranee.net/blog/ ஞானதேவன் http://gyanadevan.blogspot.com/ பரஞ்சோதி http://paransothi.blogspot.com/
கூடவே,
ஒரு வருடத்திற்கு முன்னர், வலைப்பதிவில் அந்தர் தியானமாக இருந்த (இன்று இஸ்லாம் காண்ட்ரோவர்சியாக மாறிவிட்ட) ப்ளாக்டிரைவ் ஆன்மீகப் பதிவாளர், நேசக்குமார்.
|
posted by சாகரன் @ 6/11/2005 03:54:00 PM   |
|
|