Tuesday, February 15, 2005 |
ஓரத்தில் ஒரு சிகப்பு டி-ஷர்ட்! |
சிரியாவைச் சேர்ந்தவர் அவர். சுமார் 45 வயது இருக்கும். நான் பார்த்து ஆச்சரியப்படும் பர்பெக்ஷனிலிஸ்டுகளில் ஒருவர். எந்த வேலையைச் செய்தாலும், அதை சிறப்பாகச் செய்வார். அவர் மீது எல்லோருக்கும் நல்ல மதிப்பு உண்டு. 'உலகத்திலேயே சிறந்த மருந்து' என்று எனக்கு குடிநீரின் மகிமை பற்றி ஒரு நாள் மதியம் பாடம் எடுத்தவர்..
"யூ நோ..." பேசிக்கொண்டே அவர் அந்த பாஸ்போர்ட் கட்டை எடுத்து பிரித்த போது எனக்குள் எந்த எண்ணமும் இல்லை. "இது என்னுடைய மகளுடைய பாஸ்போர்ட். இப்பொழுது ஜோர்டானில் படித்துக்கொண்டிருக்கிறாள். இவள் படிப்பிற்கு மட்டும் எனக்கு வருடத்திற்கு 25ஆயிரம் ரியால்கள் செலவாகிறது. இது என்னுடைய அடுத்த மகள். பக்கத்திலுள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள். இது என்னுடைய மகன் கடைசிவருடம் பள்ளியில் படிக்கிறான். இது என்னுடைய அடுத்த மகன்..இரண்டரை வயது. இது என்னுடைய மகள்.. நான்காம் வகுப்பு படிக்கிறாள்.." தொடர்ந்து அவர் பாஸ்போர்ட்டின் பக்கங்களை பிரித்து காண்பித்துக்கொண்டிருக்க, என்னவென்று சொல்லவியலாத ஒரு மனநிலைக்கு நான் வந்திருந்தேன்.
இவர் எனது மகள் மகன் என்று அறிமுகப்படுத்தும் போது, ஒரு நெருக்கமான மனநிலையும், அந்த குழந்தைகள் நம்மவர்கள் என்பதான ஒரு எண்ணமும் எனக்குள் ஏற்படுவதை கவனித்திருக்கிறேன். அதே போன்ற ஒரு மனநிலை இப்பொழுதும் ஏற்பட்டாலும், உள்ளார்ந்த ஒரு அயர்ச்சி அல்லது சுணக்கம்; இத்தனை பேரா ஒரு குடும்பத்தில்? ஏனோ ஒரு இனம் புரியா வருத்தமும், சுமார் 5000 ரியால் சம்பளத்தில் இவ்வளவு குடும்ப பாரமும் தாங்குவது என்பது எவ்வளவு கடினமானது என்ற எண்ணமும் வந்து என்னை ஒரு குழப்பமான மனநிலைக்கு மாற்றியிருந்தது.
சவுதி அரேபியா போன்ற முஸ்லீம் நாடுகளில் குழந்தை பிறப்பு என்பது கடவுளின் கட்டளை என்று கருதப்படுவது உண்மைதான் என்றாலும்..........
*****
வைரமுத்து - கவியரங்கம்!
ரியாத் வாழ் தமிழர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விசயம்... கவிஞர் வைரமுத்து தலைமைதாங்க வரும் 17ம் தேதி ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் இன்னமும் சுவாரஸ்யமான விசயம், இது வரை தனித்தனியாக செயல்பட்டு வந்த ஐந்து இந்திய தமிழ் கலை குழுக்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது. சுமார 4 லட்ச ரூபாய் செலவில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. தலைமை பாண்டிச்சேரி முதலமைச்சர்! எல்லாம் தற்போதைய இந்தியத் தூதுவர் திரு.பரூக் மரைக்காயர் மகிமை?!
***** 15/2/2005
அலுவலகத்தில் நுழைந்தவுடன், 'ஹே கல்யாண், என்ன உன்னை போலீஸ் புடிச்சுட்டாங்க சொன்னாங்க..!:-)" என்ற கூச்சல்! வழக்கமான(!?) வம்பு அறியும் சுவாரஸ்யத்துடன், "என்ன ஆச்சு" என்று விசாரித்ததில்.... என் பெயருடைய வேறொருவரை போலீஸ் பிடித்திருப்பதைச் சொன்னபோது அதுவும் காரணத்தைச் சொன்னபோது உண்மையிலேயே ஷாக் அடித்தது!
காதலர் தினமான நேற்று அந்த நண்பர் சிகப்பு டி-ஷர்ட் அணிந்து வாக்கிங் சென்றிருக்கிறார். அதன் காரணமாக போலீஸ் அவரை பிடித்துக்கொண்டு சென்று விட்டது. சவுதி அரேபியாவில் சிகப்பு டிரஸ் காதலர் தினம் அன்று அணிந்திருப்பது தவறு என்று நேற்று சி.என்.என் தளத்தில் கூட அறிவிப்பு இருந்ததாம். முதல்நாள் மசூதிகளில் இதைப் பற்றி சொல்லியிருந்தார்களாம்..! இன்றைய அலுவலக 'ஹாட் டாக்' இதுதான்!!
"லச்சுக்கு போயிருந்தப்போ என்கிட்ட இருந்த சிகப்பு கலர் டி-ஷர்ட்டை தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டேன்..." - இது பக்கத்து சீட்டிலிருப்பவர்! :-)
|
posted by சாகரன் @ 2/15/2005 05:36:00 PM |
|
7 Comments: |
-
குழந்தை பிறப்பு, கடவுளின் கட்டளை... சுவராசியமாக சொல்ல ஆரம்பித்து.. நிறுத்திவிட்டீர்களே.. (எப்போ ஊருக்கு திரும்பினீர்கள்?)
-
(20.2.2005) சாகரன் said...
வணக்கம் ராம்கி, நலமா இருக்கீங்களா? இங்க வந்து ஒரு வாரம் ஆச்சுங்க....
-
(22.2.2005) KVR said...
//சவுதி அரேபியா போன்ற முஸ்லீம் நாடுகளில் குழந்தை பிறப்பு என்பது கடவுளின் கட்டளை என்று கருதப்படுவது உண்மைதான் என்றாலும்..........//
வேற entertainment ஒண்ணும் இல்லையே :-)
-
(27.2.2005) சாகரன் said...
//வேற entertainment ஒண்ணும் இல்லையே :-) //
Nice கமெண்ட் ராஜா... :-)
-
(28.2.2005) மூர்த்தி said...
குழந்தை பிறப்பு ராஜாக்கு எண்டர்டெயின்மெண்டா? ஹிஹிஹி.. இப்ப அப்படித்தான் இருக்கும்...
-
(8.3.2005) முத்து said...
கல்யாண், சிவப்பு டி-ஷர்டில் இப்படியெல்லாம் ஆபத்து இருக்கிறதா ? .. அது சரி . காதலர் தினத்தன்று சிவப்பு டிரஸ் போட்டிருந்தால் உண்மையில் என்ன அர்த்தம்?.
-
(15.3.2005) KVR said...
//குழந்தை பிறப்பு ராஜாக்கு எண்டர்டெயின்மெண்டா? ஹிஹிஹி.. இப்ப அப்படித்தான் இருக்கும்...//
குழந்தை பிறப்பை சொல்லவில்லை மூர்த்தி :-). அதற்கு முந்தின முஸ்தீபுகளைச் சொல்கிறேன் :-)).
|
|
<< Home |
|
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|
குழந்தை பிறப்பு, கடவுளின் கட்டளை... சுவராசியமாக சொல்ல ஆரம்பித்து.. நிறுத்திவிட்டீர்களே..
(எப்போ ஊருக்கு திரும்பினீர்கள்?)