சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Tuesday, August 17, 2004
டைனமிக் ஐபி .....
சில நேரங்களில் நம்மிடம் உள்ள பெரிய கோப்புக்களை யாருக்காவது அனுப்ப வேண்டிய தேவை எற்படுகிறது.

சமீபத்தில் இதற்கு ஒரு நல்ல வழி கண்டு பிடித்தேன்.

அது வேற ஒண்ணும் இல்ல, நாமளே நம்ம கம்ப்யூட்டரில் ஹோஸ்ட் பண்றது. சுலபமா செய்யற விசயம்தான்.வீட்ல டயல் அப் கனெக்ஷன் இருந்தாலும் அல்லது டி.எஸ்.எல் இருந்தாலும் இது மாதிரி பண்றது சுலபம்.

dynDns.org இந்த தளத்திலேர்ந்து நமக்கு பிடிச்ச ஒரு ஹோஸ்ட் நேம், இலவசமா ரிஜிஸ்டர் பண்ணிக்கணும்.

நான் kalyanj.homeip.net என்ற பெயரை ரிஜிஸ்டர் செய்து கொண்டேன். அப்புறம் அங்க உள்ள ஏதாவது டூல் டவுண்லோடு பண்ணி, அதை கொஞ்சூண்டு கான்பிகர் பண்ணிட்டா போதும், ஆட்டோமேட்டிக்கா ந்ம்ம ஐபி எப்பல்லாம் மாறுதோ அப்பல்லாம் அது தானா அப்டேட் ஆகிடும்.

பின்னர், அபிசிஸ்(absys webserver : இது ரொம்ப நல்ல சர்வர், கூகிளில் தேடுங்க) மாதிரி சிறிய வெப்சர்வர் சாப்ட்வேர்  டவுண்லோடு பண்ணி ரன் பண்ணிட்டா போச்சு...

எங்கேர்ந்து வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நாம் லைனில் இருக்கும்போது நம்மிடம் உள்ள சி.டி யையோ படங்களையோ டவுண்லோடு பண்ற மாதிரி பண்ணிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு கொஞ்சம் கூகிளில் சர்ச் பண்ணினா போதும்!
posted by சாகரன் @ 8/17/2004 12:45:00 PM  
4 Comments:
  • At 11:54 AM, Blogger Gyanadevan said…

    இது படிக்க ஈஸியா இருக்கு செஞ்சா சரி படுமா?? வைரஸ் பிரச்சினை வந்துடாதே?

     
  • At 12:35 PM, Blogger சாகரன் said…

    ம்..... நம்ம கம்ப்யூட்டரில் ஒரு பர்சனல் firewall இன்ஸ்டால் ப்ண்ணி வச்சிக்கணும், "Personal Firewall" அப்படின்னே ஒரு நல்ல பிரீ சாப்ட்வேர் இருக்கு. அடுத்தது, Anti-Virus . இரண்டும் நம்ம கம்ப்யூட்டரில் இருந்தா பிரச்சனை இல்லை நினைக்கிறேன்.

    அதுவும் தவிர, எத்தனை பேருக்கு சொல்லப்போறீங்க? சும்மா ரெண்டு மூணு பேருக்கு... நீங்க லைனுக்கு வரும் போதுதான் அதுவும். தவிர வெப்சர்வர் மூலமா வைரஸ் வராது, யாராவது பேக் டோரில் இறங்கினால்தான் பிரச்சனை. அதுக்குதான் பர்சனல் firewall.

     
  • At 1:53 PM, Blogger Gyanadevan said…

    நீங்கள் Sygate Personal Firwall பற்றி சொல்கிறீர்களா??

     
  • At 12:08 PM, Blogger சாகரன் said…

    ஆமாம்... ஞானதேவன், sygate personal firewall, அல்லது tiny personal firewall . இரண்டுமே சுலபமான firewall's

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER