சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, August 11, 2004
உண்ட மயக்கம்...
"என்னடா இப்பல்லாம் நான் வெஜ் சாப்பிட ஆரம்பிச்சிட்டியா?"

நான் முதல் முறை ஊர் திரும்பிய போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று!
சாதாரணமாக வெளிநாடு செல்லும் விஜிடேரியன்கள், நான் வெஜிடேரியன்களாக, சூழ்நிலை நிர்பந்தத்தில் மாறுவது வழக்கம் போலும்.

இல்லை என்று சொன்ன போது நம்பாமலே பார்த்தார்கள் என் சித்தி.

சவுதி மட்டுமல்ல மிடில் ஈஸ்டில் வேலை செய்யும் எல்லோருக்கும் ஆறுதலான விசயங்களில் ஒன்று இந்த சாப்பாடு சமாசாரம்.

பெரும்பான்மையான மலையாள மக்கள் இந்த் பகுதிகளில் தஞ்சமாக இருப்பதால் (அவங்களுக்குன்னு டெயிலி நியூஸ் பேப்பர் கூட
இருக்கு, லட்சத்தைத் தாண்டி விற்பனை!) நம் இந்திய உணவுப் பண்டங்களும் வெஜிடேரியன் சாப்பாடுகளும் தாராளமாகவே
கிடைக்கின்றன.

ரியாத்தில் ஏகப்பட்ட ரெஸ்டாரண்ட்கள், இந்திய/பாகிஸ்தானிய உணவு வகை ரெஸ்டாரண்ட்களில் விஜிடேரியன் சாப்பாடு பிரமாதமாகவே இருக்கிறது.

இதில் இன்னமும் சொல்லப்போனால், தமிழ்,மலையாள ஹோட்டல்களில் கிடைக்கும் பதார்த்தங்களின் விலை , நம்ம ஊர்
சரவணபவன் விலையை விட குறைவுதான்! (ஒரு மசால் தோசை 30+ ருபாய்கள் வரும், இட்லி ஒரு செட் 20+!)

இங்க உள்ள ரெக்ரியேஷனில் முதன்மையானது சாப்பாடு என்று தான் இங்குள்ள பலர் சொல்வது வழக்கம்.

டெய்லி ஒரு ஹோட்டலில் சாப்பிடலாம்தான், ஆனால் நம்ம வயிரு அப்செட் ஆயிடுமே அதனால் கொஞ்சமே கொஞ்சம் வீட்டிலும்
சாப்பிடலாம் என்று சொல்பவர்கள் உண்டு!

இன்று நண்பர் ஒருவர் முதல் முறை ஊருக்குச் செல்வதற்காக ட்ரீட் கொடுத்தார் ஹோட்டல் மக்கானியில் (இதுக்கெல்லாம் ட்ரீட்டா?! ஏதாவது விசயம் இருக்கும், ஆனா சொல்ல மாட்டேங்கறாரு... :-)). முதல் வெகேஷன்... வரும்போது கல்யாணம் ஃபிக்ஸாயிடும் நினைக்கிறேன் :). இன்னும் முழுசா என்னென்ன ரெஸ்டாரண்ட் இங்க இருக்குது அப்படி இப்படின்னு எழுதி வைக்கலாம் நினைச்சேன். ம்... அப்புறம் எழுதலாம்.... நல்ல சாப்பாடா... அதான் கண்ணை சுத்துது...

posted by சாகரன் @ 8/11/2004 04:37:00 PM  
1 Comments:
  • At 1:55 PM, Blogger Gyanadevan said…

    வெஜிடேரியனாக இருந்த என்னை 3 நாள் பன்றிகறி சாப்பிட வைத்தது ஹாங்காங் மெக்'டி. அது பன்றிகறி என்று தெரியாமல் தின்று ஜீரணித்தேன் :-) நான் சொன்னது முட்டை மப்பின், அதில் பன்றி இருக்கும் என்று தெரியாது. வெறும் முட்டை மட்டும் தான் என்று நினைத்து தின்று உயிர் வாழ்ந்தேன். அந்த அனுபவங்களை எல்லாம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER