சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, August 08, 2004
மின்னஞ்சல் பனித்திரை
நட்பு என்பதும் தொடர்ந்து கருத்துப்பரிமாற்றம் நிகழ்வதால் தொடர்வதோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு.

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும் நாம் செய்யும் மிக முக்கிய தவறுகளில் ஒன்று உடனடியாக ரிப்ளை செய்யாமை.

இது நட்பை தூரமாகிவிடும் நிலையில் கொண்டு வந்து விடும்.

நட்பு என்பது தூரமாகும் ஒன்றா? இல்லை. உள்ளுக்குள் எப்பொழுதும் இருக்கும் ஒன்று. ஆனால், எல்லா நட்பும் அப்படிப்பட்டதல்ல.
நட்பு அந்த நிலையை அடைய நிறையவே காலம் எடுக்கிறது. முழுமையான புரிதல் ஏற்பட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நட்பு வேண்டும் என்பது நம் அத்தனை பேரின் கனவாகவும் இருக்கிறது. ஆனால், நாம் செய்யும் சிறு தவறுகலால் பல நல்ல நட்பையும் தூரத்தில் நிற்க வைத்துவிடுகிறோம். அப்படிப்பட்ட தவறுகலில் ஒன்றுதான் இந்த மின்னஞ்சலில் நேரம் தாழ்த்துவது.

நேரம் தாழ்த்தி நான் அனுப்பும் மின்னஞ்சலில் முதல் வாக்கியம் : காலம் கடந்து பதில் அனுப்புவதற்கு மன்னிக்கவும்.!

எனக்குத் தெரிந்த வரை, யாரும் இந்த வரிக்கு பதில் சொல்வதில்லை. அப்படியே விட்டு விடுவார்கள். இருந்தாலும் நமக்கே இது உறுத்திக்கொண்டிருக்கும்.

அதே போல நீங்கள் மடல் அனுப்பி அடுத்தவரிடமிருந்து பதில் எதிர்பாக்கும் நிலையிலும் உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை கொஞ்சம் கண் முன் கொண்டுவாருங்கள். இதே நிலையில் மற்றவரும் இருப்பார் அல்லவா? சில காலம் வெயிட் செய்துவிட்டு உங்களை அவர் மறந்துவிடக்கூடும்! இல்லை என்றால், நான் மெயில் அனுப்பினேன் ஆனா அவர் பதில் அனுப்பவே இல்லை என்று சொல்லிவிடக் கூடும். இது போன்ற காரியங்களால் சில நல்ல நட்புகளை நான் இழந்திருக்கிறேன்.

இது போன்ற நிலமைகளில் சரியான செயல், தொடர்பு கொண்டவரை உடனடியாக தொலைபேசியில் அழைத்து உரையாடுவதுதான். இதை பெரும்பாலானவர் செய்வது உண்டு.

என் குழப்பம் எல்லாம், இப்படி எல்லாம் யோசிக்கத் தெரிந்தும் பல நேரம் உடனடியாக மடல் அனுப்பி வைப்பதில் காலம் தாழ்த்துவது ஏன் என்பதுதான். இந்த சோம்பேறித்தனம் எங்கிருந்து வருகிறது?! :-(
posted by சாகரன் @ 8/08/2004 02:44:00 PM  
2 Comments:
  • At 11:43 AM, Blogger Gyanadevan said…

    காலம் தாழ்த்தி பதில் அனுப்புவதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம் இல்லையா? எல்லாரும் எல்லா நேரமும், எல்லா மின்னஞ்சல்களையும் பார்ப்பதில்லை. நான் என் நண்பர்களுக்கு முடிந்தவரை உடனே பதில் அனுப்பி விடுவேன். மற்றவர் என்றால் 1 நாள் கழித்து தான் பதில் அனுப்புவேன் :)

     
  • At 1:01 PM, Blogger சாகரன் said…

    கருத்துக்கு நன்றி நண்பா...
    அப்புறம் அனுப்பலாம்னு நான் ஒரு மெயில் எடுத்து வச்சேன்னா அனுப்பி வைக்கறதுக்கு ரொம்ப டிலே ஆயிடும்.
    உங்களை மாதிரி நானும் உடனடியா மடல் அனுப்ப கத்துக்கணும்.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER