Wednesday, August 18, 2004 |
கூட்டுப்புழு |
பட்டாம் பூச்சி கூட்டுப்புழு உதாரணங்களை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
கூட்டுப்புழுவாக இரு, கற்றுக்கொள், உன்னை வளர்த்துக்கொள், சட்டென்று ஒரு நாள் பட்டாம்பூச்சியாக வெளியே வா... என்று.
இது எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. ஏனோ தெரியவில்லை, இப்படி இருக்க வேண்டும் என்று அடிக்கடி தோன்றுவதுண்டு.
கற்றுக்கொள்ள வேண்டியது ஏகப்பட்டது இருக்கும் போது, பட்டாம்பூச்சியாக முயற்சி செய்தால் சரியாக இருக்குமா? உடனடியாக வெளியே வந்தால், குத்திக்குதறி எடுத்துவிட ஏகப்பட்ட வழிகள் உண்டு.
இந்த விசயம் இங்கு என்று இல்லை, எங்குமே கவனிக்கப்ப்ட வேண்டும். முக்கியமாக, நீங்கள் உங்கள் திறமையை ஏதோ ஒரு விதத்தில் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம், அதற்கும் இப்படிப்பட்ட கூட்டுப்புழு நிலை தேவைப்படுகிறது.
சமீபத்தில் ஜாவாவில் ஒரு சர்டிபிகேஷன் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தேன். நெருங்கிய நண்பர் ஒருவனிடம் எத்தனையோ முறை சொல்லியும்அவர் அதனை கண்டுகொள்ளாமல் அவருடம் ஊர் சுற்றுவதற்கு என்னை நெருக்கிக்கொண்டிருந்தார்.ஒரு கட்டத்தில் சண்டையிட்டே பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அப்புறம் தான் நிம்மதியாக படிக்க முடிந்தது.
ஒரு விசய்த்தில் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு, அடுத்தவருக்கு புரியாமலே போய்விடும். சில நேரங்களில் மட்டும், புரிந்தும் புரியாமல் நடிக்கிறார்களோ என்றுதோன்றும். வேண்டுமென்றே நாம் இதில் ஈடுபடுவது தவிற்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார்களோ என்று நினைக்க வைக்கும்.
சரியாகத் தெரியவில்லை. இன்னும் வாழ்கையில் கற்றுக்கொள்ள வேண்டியது, மனிதர்களை படிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது.
ஆனால், ஒன்று நிச்சயம், எந்த ஒரு செயலையும், நீங்கள் செய்யும் முன்னர், அது உங்களுக்கானது என்று மிகத் தெளிவாக மனதில் கொண்டுவந்து, அடுத்தவர் யாருக்கும் தெரியாமல் அந்த செயலில் ஈடுபடுவது, வெற்றி பெற்ற பின்னர் கூட தேவை இருந்தால் மட்டும் அறிவிப்பதும், முடிந்தவரை இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை இதை விட திறமையாக செய்பவர்கள் உண்டு என்பதை மனதில் நிறுத்துவதும் நிச்சயம் உள்ளார்ந்த அமைதியைத் தருகிறது.
அந்த அமைதிதானே முக்கியம்!
|
posted by சாகரன் @ 8/18/2004 10:57:00 AM |
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|