சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, June 25, 2006
Toast Masters - Entrance

டோஸ்ட் மாஸ்டர்ஸ் - சில தினங்களுக்கு முன்னர் டோஸ்ட் மாஸ்டர் புரோகிராம் விசாலக்கிழமை (இது ஒரு சுவையான பேச்சு வழக்கு!) மாலை நேரத்தில் நடக்க இருப்பதாகவும் வரவேண்டுமாயும் எனக்கு ஒரு அழைப்பு வந்தது.

ஏற்கனவே ஒரு முறை இந்த புரோகிராம் அட்டெண்ட் செய்திருக்கிறேன். அருமையாக இருக்கும். இந்த வாரம் இது நடந்த இடம் ஒரு பள்ளிக்கூடத்தின் ஒரு அறை. இரண்டு மணி நேரத்திற்கு வாடகை 50 ரியால் ( சுமார் 15 டாலர்)
வாடகை அதிகமென்பதே இல்லை.. இப்படி ஒரு இடம் கிடைக்கத்தான் அனைவரும் திண்டாடி வருகின்றனர்.
(பிரின்ஸீ மேடம் - ரொம்ப சின்னப் பொண்ணு - அவர்களிடம் எழுத்துக்கூடத்திற்காக இடம் கேட்டேன். ஆனால் வெள்ளிக்கிழமைகள் செம புல்லாம்!)

டோஸ்ட் மாஸ்டர் - ப்ரசண்டேஷன் ஸ்கில் - இம்ப்ரூவ் செய்து கொள்ள உதவும் ஒரு சங்கம். கூட்டம் கம்மி என்பதால் இரண்டு குரூப்-பினைச் சேர்ந்தவர்கள் இணைந்து ரியாத்-தில் இந்த கூட்டத்தினை வாரா வாரம் நடத்தி வருகிறார்கள். எலோருமே இண்டலக்சுவல்ஸ். நல்ல வேலையில் இருப்பவர்கள். படிக்கும் மாணாக்கர்கள். ஆண்கள் பெண்கள் என்று ஒரு கண்ணியமான குழு இங்கு இருக்கும். ரியாத் நகரத்தில் நடக்கும் தமிழ் மற்றும் அனைத்து மொழி கலை நிகழ்ச்சிகளில் இந்த முகங்களையே நீங்கள் பார்க்க முடியும்!

இந்த வாரம் , போரன் ஜோஷி என்ற குஜராத்தி பெண் - இந்தியாவில் கல்லூரியில் படிக்கிறார், விடுமுறைக்கு சவுதி - கொடுத்த பிரசண்டேஷர் பார்த்து மொத்த கூட்டமும் ஸ்தம்பித்திருந்தது என்று சொன்னால் மிகையே இல்லை. இந்த பெண் அழகு என்பது மட்டுமல்ல்… இவர் பேசும் போது, கைகள், உடல், முகம், புருவம், கண் காது என்று ஒரு ஓரங்க நாடகமே நடந்தது! யப்பா.. இந்த ஜெனரேஷன் எவ்வளவு திறமையாக இருக்கிறார்கள்!! இவரது தம்பியும் ஒரு பிரசங்கம் செய்தான் - ஹாட் சப்ஜெக்ட் - ரிசர்வேஷன் பற்றி. ஒவ்வொரு காஸ்ட் க்காகவும் தனியாக கல்லூரி - அதாவது MBA for MBC, என்பது போல ஆரம்பித்துவிடலாமே என்று கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லவும் மாட்டார்கள் என்று பின்னர் பேசியபோது புரிந்தது. இந்த மீட்டிங் பேச்சுப்பயிற்சிக்காகத் தானே தவிர, பேச்சுகளில் உள்ள நிறை குறைகள் உள்ளே யாரும் நுழைவதில்லையாம்! - ரியலி ஜெண்டில்.

posted by சாகரன் @ 6/25/2006 07:18:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER