இன்றைய புரிதல் மீட்டிங்கில் வழமை போல வெகுசில நண்பர்களே இருந்தார்கள்… புரிதல் கூட்டத்தில் யோசிக்கப்பட்ட சில ஐடியாக்கள்: 1) சவுதியைச் சேர்ந்த இந்தியச் சங்கங்கள் அனைத்தையும் இணைத்து, ஒரு குழுமம் அமைக்கப்பட வேண்டும். இந்தச் சங்கம் பொதுவான சில கொள்கையையும், தனிப்பட்ட முறையில் அவர்களது வழமையான எண்ணங்களையும் கொண்டிருக்கலாம். வழமை என்று சொல்வது, கல்சுரல் ஆக்டிவிட்டிகள். 2) சவுதி சங்கங்கள் அனைத்தையும் இணைத்து ஒரு இந்திய சங்கம் அல்லது குழு உருவாக்குவது பற்றி யோசித்தோமல்லவா, இத்துடன் இன்னொரு விடயம் செய்யலாம். உறுப்பினர் கட்டணம் : 30 ரியால் வசூல் செய்து, இந்த 30 ரியால் கட்டணத்தை ஹாஸ்பிடல் இண்ஸூரஸிர்க்காக அமைத்து விடலாம். இதன் மூலம், ஏராளமான இந்தியர்களை உறுப்பினராக்கவும் முடியும் என்பது மட்டுமல்ல. ஒரு முழுமையான டேட்டாபேஸ் உருவாக்கிவிடமும் முடியும். மருத்துவ சோதனை காலத்தில் இன்ஸூரன்ஸ் பணம் உதவிக்கு வரும். (தமிழர்களிடம் பணம் கலெக்ட் செய்யக்கூட முடியும். ஆனால் பேச்சிலிருந்து தப்பிக்க முடியாது. இதற்கு இது எவ்வளவோ பெட்டர் ஐடியா.) 3) புதிதாக தமிழர்களுக்கென்று உதவி (வெல்பேர்) டிரஸ்ட் அமைப்பது வேஸ்ட். ஏற்கனவே நன்றாக நடந்துவரும், கைரலி, ரியா, இண்டியன்ஸ் பார் கே.எஸ்.ஏ முதலிய அமைப்புகளுடன் இணைவது சாலச் சிறந்தது.
|