சவுதி அரேபியாவில் டி.எஸ்.எல் கனெக்டிவிட்டியில் இப்பொழுதெல்லாம் நிறைய Restrictions புகுத்தியிருக்கிறார்கள். புதிதாக இணைப்பு வாங்குபவர்களுக்கு திண்டாட்டம்தான்! இந்த நிலையில்.. ஒரு சிறு அலசல்! 1) Jeel.net -இந்த சர்வீஸைத்தான் நான் இது நாள் வரை உபயோகப்படுத்தி வந்தேன். நன்றாகத்தான் இருந்தது. டவுண்லோடு ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இல்லை. எல்லாம் சரியாகவே இருந்து வந்தது. யூசர் ஐடி - xxx@64k.jeel.com என்று கொடுப்பார்கள். இப்பொழுதெல்லாம் xxx@64k.jeelcorp.com என்று கொடுக்கிறார்கள். இதில் ஏகப்பட்ட கூதல் இருக்கிறது. ஒழுங்காக பிரவுசிங் மட்டும்தான் வேலை செய்யும் மற்றபடி, எல்லாமே இவர்கள் ஓபன் செய்திருக்கும் பிராக்ஸிக்கு உட்பட்டுத்தான் வேலை! இது ஒரு கடி . இந்த சர்வீஸை இனிமேல் அவாய்ட் செய்வது நல்லது. 2) Nesma.com - இதுவும் நன்றாக வேலை செய்த பலராலும் உபயோகிக்கப்படும் ஒரு தளம். மிக சிறப்பாக இருந்ததாக அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் இனிமேலும் இல்லை!. தனியாக ஒரு பைப் போட்டு.. அதில் பலரை உள்நுழைத்து என்று ஏகப்பட்ட வேலைகள் செய்துவிடுவதால். இது மிகவும் வேகம் குறைந்துவிடுகிறது! 3) Awalnet.com - மிகவும் பிரபலமான ஐ.எஸ்.பி. எனினும், இந்த ஐ.எஸ்.பி-யிலும் நெஸ்மா போல ரெஸ்ட்ரிக்சன் இருப்பதாகத் தெரிகிறது. இதனை இன்று சோதிக்க இருக்கிறேன். 4) SaudiNet - வேகம் குறைவு (டி.எஸ்.எல் - 64கே யில்) 5) Cyberia - டவுண்லோடு ரெஸ்ட்ரிக்ஷன் உண்டு. 2.5 GB ஒரு மாதத்திற்கு. அதற்குப் பிறகு 1.5 ஜி.பி ஷேர்டு நெட்வொர்கில் விட்டு விடுவார்களாம். பின்னர் 1ஜிபி ஷேர்டு நெட்வொர்கில் விட்டு விடுவார்கள். அப்புறம் டிஸ்கனெக்ட் ஆகிவிடும். மொத்தத்தில் ஒரு மாதத்திற்கு 3 - 4 ஜீபி வரை உபயோகப்படுத்தலாம். இது ஓரளவு போதும் என்றே தோன்றுகிறது. வேகம் அதிகம் இருக்கும் வரை 2.5 ஜி.பி / மாதம் மிகவும் போதுமானது. முடிவாக - இப்பொழுதைக்கு சைபீரியா மூன்று மாத கார்ட் வாங்க இருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
|