இந்திய கலைக்குழுவின் அடுத்த நிகழ்ச்சிக்கான மீட்டிங்..! கொஞ்சம் சீக்கிரமாகவே மீட்டிங் நடக்கும் இடந்தில் இருந்தோம்… வழக்கம் போல வர்ணிகா, கொஞ்சம் கொஞ்சமாக இடத்தினை நோக்கம் விட்டபடி தனக்கு பிடித்த விதத்தில் எப்படி விஷமம் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் இருந்தாள். எல்லோரையும் எப்பொழுதும் பாராட்டுவதென்பது ஒரு நல்ல பழக்கம். அதிலும் அவருக்கு அந்த பழக்கம் மிக மிக அதிகம்! தினமலரில் வெளிவந்த என் வ்லைப்பதிவு அறிமுகம் (?!) பார்த்துவிட்டு, என்னைப் புகழ்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தாக்கிக்கொண்டிருந்தார்.அதிலும், பார்ப்பவரிடமெல்லாம், “நிறைய எழுதியிருக்காருங்க.. தினமலர்ல எல்லாம் நிறைய எழுதுவாரு” என்று ‘தேன்கூடு வலைப்பதிவர்’ ரேஞ்சுக்கு புகழ்ந்து கொண்டிருந்தார்! இன்றும் பேச ஆரம்பித்த போது, எனக்கு எதற்காகவோத்தான் இப்படி இழுக்கிறார் என்று தோன்றி விட்டது…. அவர் சொன்னதன் சாராம்சம்: தலைப்பில் குறிப்பிட்ட பெயருடைய இந்தப் புத்தகத்தில், ஆண்கள், பெண்கள் குறித்து அலசப்பட்டிருக்கிறது. ஆண்கள், ஆதிகாலத்தில் வேட்டைக்கு புறப்பட்டு வழி நெடுக மார்க் செய்து பின்னர் திரும்பவும் அதே வழியில் வேட்டையில் கிடைத்த உணவுப் பொருட்களும் வந்தனராம். ஆனால் அதே நேரத்தில் பெண்கள், வீட்டில் இருந்தவண்ணம், பாம்பு, பூரான், பல்லி முதலிய பூச்சிகளிலிருந்து குழந்தைகளை காபந்து பண்ணிய வண்ணம் இருந்திருக்கிறார்கள். இந்த காரணங்களினால், பெண்களுக்கு இயல்பாகவே வீடு மற்றும் அருகில் உள்ள அசைவுகளில் பொருட்களில் கவனம் அதிகம்! ஆனால் ஆண்களுக்கு வெளியிடத்தில் செல்லும் போதும், தூரத்தில் இருக்கும் பொருட்களிளைப் பற்றிய கவனமும் அதிகம்! சுமார் 200 மீட்டர் தூரத்தில் செல்லும் பெண்ணின் சேலை கலரைச் சொல்லக்கூடிய ஆனால், அருகிலுள்ள பிரிட்ஜில் ‘வெண்ணை’யை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது எதிரிலேயே இருந்தாலும் கண்ணில் படுவதில்லை! இது தவிர, ஒரு நாளைக்கு ஆண்களால் செய்யப்ப்டும் செயல்கள் சுமார் 7000 அசைவுகள். இந்த அசைவுகள் அனைத்தும் அலுவல்களிலேயே இந்த காலத்து ஆண்கள் செய்துமுடித்து விடுவதால், வீடு திரும்பும் போது அவர்கள் டயர்-டாக இருப்பது சகஜம். பெண்களுக்கான ஒரு நாளைய அசைவுகளோ 21000. இந்த 21000 அசைவுகளும் இந்தக் காலத்துப் பெண்களால் செய்யப்படுவதில்லை. (ம்.. சுகம் கண்டுட்டாங்க!) வாஷிங்மிஷின், மிக்ஸி கிரைண்டர் இத்தியாதிகளால் அவர்களது வேலை சுலபமாக்கப்பட்டு… அசைவுகளும் குறைக்கப்பட்டுவிடுவதால், மாலை நேரத்தில் அவர்களால் ‘பிரிஸ்க்’காகவே இருக்க முடிகிறது! அப்புறம் என்ன, வெளியில அழைச்சுட்டு போகச்சொல்லி பிரச்சனைதான்! இந்த புத்தகத்தினைப் படிக்கும் ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் இந்த பிரச்சனைகளின் ஆணி வேர் பிடிபட்டு, வீட்டில் பிரச்சனைகள் மிகக் குறைவாக இருக்குமாம்! இந்த புத்தகம் இதுவரை இவரால் பரிந்துரைக்கப்பட்டு படித்தவர்கள் அனைவரும் மிகவும் நிம்மதியாக இருப்பதாக அறியப்படுவதாகவும் சொன்னார்! இவ்வளவும் சொல்லிட்டு, என் மனைவியைப் பார்த்து, ‘நீங்க இவ்வளவு நேரம் கம்ப்யூட்டரிலேயும், நிறைய ஆக்டிவிட்டீஸ்லயும் ஈடுபடறத்துக்கு விடற உங்க மனைவி மாதிரி கிடைக்கிறதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்!’ அப்படின்னு அவர் போட்டு வாங்காமல் மட்டும் இருந்திருந்தால் …
|