கடைசியில் சைபீரியாவே வாங்கியாகிவிட்டது. வேகம் ஒரளவிற்கு நன்றாகவே இருக்கிறது… 2.5 ஜி.பி பேண்ட்விட்த் லிமிட் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான். சவுதியில் எங்கிருந்து டவுண்லோடு செய்யமுடியும்.. மெகாஅப்லோடு போன்ற தளங்கலெல்லாம், பிளாக் ஆகியிருக்கும் போது! – இன்னும் ஒரிரு வாரத்தில் கலைக்குழுவின் பிரோகிராம் ஒன்று வரக் கூடும் என்று தெரிகிறது. மறுபடி கொஞ்சம் வேலை அதிகரிக்கும். – BEA Weblogic 9.2 b இன்ஸ்டால் செய்திருக்கிறேன். கலக்கலாக இருக்கிறது வொர்க்ஷாப். இன்னும் உள்நுழைந்து பார்க்க வேண்டும் என்னென்ன செய்யலாம் என்று! Vignette - கூட வேலை செய்ய வேண்டும். நேரம் தான் பரந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தின் நடப்பில் இருக்கும் எங்கள் பில்டிங், விரைவில் வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யப்படப்போவதாக பட்சிகள் சொல்லுகின்றன. அதற்குள் சில வேலைகள் செய்து முடித்து விட வேண்டும்!!
|