சில தினங்களாகவே உடல்நிலையில் ஒரு சுணக்கம். எக்ஸிகியூட்டிவ் கமிட்டியில் புதிதாக இணைந்த பின்னர் நடத்தப்படும் முதல் மீட்டிங் என்பதால், இந்த கூட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக எனக்குப் பட்டது. கூட்டத்தில் சில அஜெண்டாக்கள் பேசப்பட்டன. இதில் எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டது இது.. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 8:30 - முதல் 9:00 மணி வரையிலான பொதிகை சேனல் ஸ்லாட் ரியாத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! 1000 ரியாலுக்கான ஸ்பான்ஸர் மட்டும் கொடுக்கப்பட்டு விடுமென்றால்! இதில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். 1) 1000 ரியாலுக்கான ஸ்பான்ஸர்; இதை பிடிப்பது கூட சுலபமாக இருக்கலாம். 3 நிமிட நேரங்களில் எப்படி பிரித்து அட்வர்டைஸ்மெண்ட் கொடுப்பது என்பதை கூட sort out செய்துவிடலாம்; ஆனால்.. 2) எத்தனை புரோகிராம்கள் கொடுக்க இயலும்? - பொதிகை என்பதால், இது தமிழர்கள்மட்டுமே பார்ப்பது. இருப்பது 5 தமிழ்ச்சங்கங்கள். 5 சங்கங்களும் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு புரோகிராம் என்று வைத்தால். 5 புரோகிராம்கள். மூன்று மணி நேரத்திற்கு மேற்பட்ட ஒவ்வொன்றும் எடிட் செய்த பிறகு, 4 வாரங்களுக்கு வரும் என்று வைக்கலாம். 5*4 = 20 வாரங்கள். ஆர்.டி.எஸ் - பெரிய புரோகிராம், வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒன்று 1 *6 = 6 வாரங்கள். மொத்தமுள்ளா 54 வாரங்களில் (ஒருவருடம்) 26 வாரங்கள் முடிவாகிவிட்டாலும், இன்னமும் 18 வாரங்கள் சும்மா இருக்கப்போகிறது. இதற்கு என்ன செய்யலாம்? அ) தனியாக இதற்கென்றே புரோகிராம் செய்யலாம்… எப்படிப்பட்ட புரோகிராம்கள்? 1) ரியாத் வாழ் மக்களினை பேட்டியெடுத்து. அவர்களது வாழ்க்கை முறையினை உலகுக்கு அறிவிக்கலாம். அத்துடன் அவர்களுக்கு பிடித்த பாடல்களைக்(அருத பழசு ஐடியா, ஆனாலும் வொர்க் அவுட் ஆகும்.) கேட்டு ஒளிபரப்பலாம். 2) லேபர் கேடர் என்று சொல்லப்படும் தமிழர்களின் பிரச்சனைகளை அலசும் விதமாக ஒரு அரட்டை அரங்கம் ஏற்பாடு செய்யலாம். (இண்டோர் தான்:-)) 3) சில நிமிடங்களுக்கு, ரியாத்-தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை வாசிக்கலாம். வாரத்தில் சில செய்திகளாவது கிடைக்காமல் போகாது! 4) செவ்வாய் கிழமை நாடகம் போல.. இண்டோர் நாடகங்கள் போடலாம். 5) ரியாத் எழுத்துக்கூடத்தின் சார்பாக - எழுத்தாளர்களை வரவழைத்து - பேட்டி எடுக்கலாம் 6) ரியாத் நகரத்திற்கு அடிக்கடி பல பெருந்தலைகள் வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். அவர்களை பேட்டி எடுக்கலாம். 7) ரியாத் + சுற்றியுள்ள நகரங்களில் பார்க்ககூடிய இடங்களை சுட்டு, ஒரு சுற்றுலா வீடியோ தரலாம். 8) ரமலான் மாதத்தில் - இஸ்லாமிய புரோகிராம்களை - நிறைய ஐடியா செய்யலாம் - ஒளிபரப்பலாம். 9) இந்தத் துறையில் ஆர்வமுள்ள தமிழர்களை ரியாத் தமிழ்ச் சங்க யாகூ குரூப் மூலமாக கூப்பிட்டு ஆலோசனை கேட்கலாம். மொத்தத்தில் ஒரு வார விசுவல் பத்திரிக்கையாகவே நடத்த முடியும்! மனமும் - நேரமும் - பணமும் இருந்தால் :-)
|