எப்பொழுதுமே இந்திய கிரிக்கெட் தற்காலிக ஹீரோக்களால் மட்டுமே தூக்கி நிறுத்தப்படுகிறது. சிறு வயதில் உனக்கு எந்த விளையாட்டில் விருப்பம் என்று என் விளையாட்டு ஆசிரியர் கேட்ட போது நான் சொன்னது, ‘கிரிக்கெட்’. அதற்கு அவர், பலர் ஒன்றாக இணைந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றும் சுவாரஸ்யம் இருக்காதென்றும், தனித்து விளையாடும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தவும் என்னை நிர்பந்தித்திருந்தது நினைவிற்கு வருகிறது! இப்பொழுதுதெல்லாம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் போது, அப்படி ஒன்றும் பலர் இணைந்து விளையாடும் விளையாட்டாகவோ ஒருவரது விளையாடும் திறம் டீம் ஸ்பிரிட் மூலமாக அடிபட்டுப் போவது போலவோ தெரியவில்லை. மாறாக, ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒரு 15 நிமிடப் புகழ் போல யாரவது ஒருவர் ஹீரோவாக இருந்துதான் பெயர் வாங்கித் தருகிறார்! சமீபத்தில் டோனி என்ற ஒரு ஹீரோ வாகட்டும், இன்னும் நினைவில் வரும் எத்தனை எத்தனையோ ஹீரோக்களை நினைத்துப் பாருங்கள். எல்லோரும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையே. நீண்டு நினைவில் நிற்பவர்கள் வெகுசிலர்… அதில் கண்டிப்பாக, கவாஸ்கர், கபில், சச்சின் போன்ற சிலர் மட்டுமே வரக்கூடும்.
|