சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, September 06, 2004
பிரச்சனை
நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி' என்ற புத்தகத்தில், முதல் அத்தியாயத்திலேயே ஒரு கருத்து வரும்... அதாவது, பிரச்சனை என்பது ரிலேடிவ். ஒருவருக்கு பிரச்சனையாகத் தோன்றுவது அடுத்தவருக்கு ஒன்றுமே இல்லை. அப்படி இருக்கும் போது பிரச்சனையை எப்படி முக்கியமானதாகச் சொல்ல முடியும்?

ஒரு உதாரணம் கூட கொடுத்திருப்பார். கணக்கு வாத்தியார் மிகவும் கடினமான பிரச்சனையான கணக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக, ராமானுஜத்தை கூப்பிட்டு 'இந்த கணக்கை போடுப்பா பார்க்கலாம்' என்று சொல்லி ஒதுங்கிக்கொள்வாராம். கணித மேஜை ராமானுஜமோ இது என்ன விசயம்கறமாதிரி அனாயாசமாக அந்த கணக்கை வாத்தியாரே யோசிக்காத கோணத்தில் சுலபமாகப் போட்டு விடுவாராம்.

வாத்தியாருக்கு பிரச்சனையாகத் தெரிந்தது ராமானுஜத்திற்கு இல்லை! அதே நேரத்தில் வாத்தியாரின் பிரச்சனை ராமானுஜத்திற்கு விசயத்தை தள்ளி விடுவதுடன் முடிந்து விடுகிறது.

****

இன்று மாலை வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் பிரொடக்ஷனிலிருந்துப் போன்! ஒரு சிஸ்டம் டவுன்!
அர்ஜெண்டாக எல்லா சப்போர்ட் நண்பர்களையும் வீட்டுக்கு போகாமல் நிறுத்தி வைத்து, போய் பார்த்தால் பிரச்சனைக்கான காரணம் துத்தமாகப் புரிபடவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இன்னமும் பழைய லாக் கோப்புக்களை எடுத்து ஏதேதோ ஐடியா செய்து கொண்டிருந்தோம்.

அந்த பக்கமாக ஒரு நெட்வொர் ஆசாமி வந்தார். எனக்கு அவரைத் தெரியும். சாதாரணமாக...
"என்ன ஹசன், பிரொடக்ஷன் சைடு வந்திருக்கீங்க" - விசாரிச்சேன்.
ஏதோ சர்வர் அப்டேட்-க்காக வந்திருப்பதாகச் சொன்னார்.
அப்புறம் என்னைப்பற்றி கேட்க,
"எங்க போர்டல் சைட் டவுன் ஆயிடுச்சு ஹசன், விண்டோஸ் NTLM Auto லாகின் ஆகல... சாயந்தரம் 5 மணியிலேர்ந்து வொர்க் ஆகமாட்டேங்குது... அதான் எல்லாரும் பார்த்துகிட்டிருக்கோம்!"

கேஷுவலா... "அந்த domain central serverஐ நான் 5 மணிக்கே அப்கிரேட் பண்றதுக்காக டவுண் பண்ணிட்டேனே... எப்படி லாகின் ஆகும்?" சொல்லிட்டு சிரிக்கராப்ல... !!!

"ஏன்யா.. ஒரு மெயில் போடக்கூடாதா" கேட்டா, "சீக்கிரம் முடிஞ்சிடும் நினைச்சேன் கல்யாண்"-ங்கறாரு...

விட்டா போதும்னு கிளம்பி வந்தாலும், பிரச்சனைனு நினைச்சது எப்படி ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது யோசித்தால்....


posted by சாகரன் @ 9/06/2004 01:14:00 AM  
5 Comments:
  • At 6:02 PM, Anonymous Anonymous said…

    அது யாருய்யா அந்த அறிவுஜீவி. சொல்லாம கொள்ளாம சர்வரை டவுன் செய்றவர். நான் மட்டும் அந்த எடத்தில இருந்திருந்தா ... சரியா கடிச்சிருப்பேன்.

    நீங்க என்னடான்னா தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிட்டுன்னு சந்தோசமா இருக்கீங்க.

     
  • At 8:01 PM, Blogger சாகரன் said…

    :-)

    என்ன பண்றது நண்பா... எனக்கும் முதல்ல கோபம்தான் வந்தது. ஆனாலும், லேட் நைட் ஆயிடிச்சா... ஏற்கனவே எல்லாரும் மூடு அவுட்... பிரச்சனை தீர்ந்துதா...நிம்மதி, நாளைக்கு காலைல மெயில் போட்டு ஒரு வாங்கு வாங்கிடலாம்னு எல்லோரும் எஸ்கேப்!

     
  • At 10:34 PM, Anonymous Anonymous said…

    அப்புறமா கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன். பாவம் யாராவது கத்துக்குட்டியா இருக்கும். இது மொத தடவையா இருந்தா தனியா கொஞ்சம் அட்வைஸ் செய்திட்டு விட்டுருங்க.

    திருப்பியும் இப்படி நடந்துச்சுன்னா பாத்துக்கலாம்.

     
  • At 11:41 PM, Blogger சாகரன் said…

    :) அதெல்லாம் ஒண்ணும் இல்லை... ஆனா, அவர் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலயாம், ஒரு compaq டிரைவர் படுத்திடுச்சு :-( . சீக்கிரமா முடிக்கலாம் நினைச்சிருக்காரு... ஆனா லேட்டாயிடுச்சு. காலைல வந்து வருத்தப்பட்டாரு... சும்மா கிண்டல் பண்ணி பேசிட்டு விட்டுட்டோம்... நீங்க சொன்னமாதிரிதான், 'அடுத்த தடவை ஏதாவது ஒண்ணுன்னா, முன்னாடியே இன்பார்ம் பண்ணுங்க' அப்படின்னு சொல்லி பெரிசு படுத்தாம விட்டாச்சு.... ஒண்ணு தெரியுமா எங்க ஆபீஸ்ல டெக்னாலஜில இருக்கற சுமார் 250 பேர்ல, மூணு பங்கு நம்ம தமிழ் ஆட்கள்தான். :-)

     
  • At 7:12 PM, Blogger Unknown said…

    //ஒண்ணு தெரியுமா எங்க ஆபீஸ்ல டெக்னாலஜில இருக்கற சுமார் 250 பேர்ல, மூணு பங்கு நம்ம தமிழ் ஆட்கள்தான். :-)//

    அதை பார்த்து வயிறெரியும் ஆளுங்கள்ல நான் ஒருத்தன்.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER