Tuesday, August 24, 2004 |
விலையேற்ற வேகம் |
இந்தியா முழுமைக்குமாக லேண்ட் பிரைஸ் ( பிளாட் மற்றும் இடங்களின் விலைகள்) வேகமாக ஏறி விட்டதாக ஒரு தகவல்.
கடந்த ஜனவரி பிப்ரவரிக்கு பிற்கு இந்த விலை ஏற்றம் வேகமாகி, இன்று சுமார் 20-30 % அதிகமாகிவிட்டதாம்.
முக்கியமாக டெல்லி போன்ற நகரங்களில் இந்த ஆறு மாத காலத்தில் 30 % ஏறி, இன்னமும் ஏறிக்கொண்டிருப்பதாகக் கேள்வி.சென்னை போன்ற பெரு நகரங்களில் புதிதாக உருவாக்கப்படும் எந்த புதிய பிளாட்களிலும் முதல் மற்றும் இரண்டாம் மாடிகள் உடனடியாக புக் செய்யப்படுகின்றன.
இதற்கான காரணங்களில் சில,
NRI - இவர்களின் முக்கிய இண்வெஸ்ட்மெண்டாக லேண்ட் மற்றும் பிளாட் மாறி வருகிறது. இவர்களுக்கு Tax உண்டு என்று சமீபத்தில் தெளிவானதிலிருந்து, லேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் அதிகரித்திருக்கிறது. இதுவும் இந்த அதிக விலைக்கு காரணம்.
Interest Rate - இது கூட காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதிகமாக இண்ட்ரெஸ்ட் ரேட் எங்கும் கிடைக்காத போது பிளாட்களில் இண்வெஸ்ட் பண்ணலாம் என்று மக்கள் நினைக்க் ஆரம்பித்து விட்டார்களோ....
Loans -- முன்னர் மாதிரி இப்போ இல்லை. வீடு வாங்க கட்ட லோன் வேணும் சொன்னா, போட்டி போட்டுக்குட்டு லோன் தருவதற்கு பேங்குகளும் கம்பெனிகளுகளும் தயாராக இருக்கின்றன. இது கூட ஒரு காரணமாக இருக்கும் போலும்...
இந்த விலையேற்ற வேகம், குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக பலர் நம்புகிறார்கள். காரணம், நிறைய பிளாட் பில்டர்கள் தங்கள் பிராஜக்டை விரிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில், உயர்ந்த ஒரு விலை அவ்வளவு சீக்கிரம் குறைக்கப்படாது என்பது நாம் பார்த்துக்கொண்டிருபப்துதானே. அதனால் இதே விலை இனிமேலும் தொடருமே தவிர, குறையாது!
இன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது இந்த தகவல்களைச் சொன்னார்...!
|
posted by சாகரன் @ 8/24/2004 09:59:00 AM |
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|