Sunday, September 05, 2004 |
கிங்டம் செண்டர் - ஒரு மீட்டிங்... |
இன்று,
ஒரு மீட்டிங்கிற்காக முதல் முறை சவுதியின் உயர்ந்த கட்டிடமாகிய கிங்டம் செண்டர் சென்றிருந்தேன்...
வாவ்... என்ன அருமையான பில்டிங்... எப்படி இழைத்து வைத்திருக்கிறார்கள்...
ஆச்சரியமாக இருந்தது. மொத்தம் 99 ப்ளோர்கள்... மிக உயரமான பில்டிங்...
மேல் பக்கத்தில் வண்ண விளக்குகளின் மாற்றம்... உள்பக்கத்திலோ... தண்ணீர்களால் ஆன மேடை.. எப்பொழுதும் வழிந்து கொண்டிருக்கும் நீர் சலசல்கள்.. பவுண்டன்கள்..
எல்லா அறைகளுக்கும் கண்ணாடித் திரை.. குறைந்த பட்சம் ஒரு பக்கமாவது!
மீட்டிங் என்னமோ கடிதான்... வழக்கம்போல் பாதி மீட்டிங்கில் தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. கஷ்டப்பட்டு வேண்டுமென்றே கொஞ்சம் கவனமானேன். நிறைய மீட்டிங்குகள்.. அதிலும் தொடர் மீட்டிங்குகள் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் பேசியதையே பேசித்தான் அறுக்கிறார்கள்..
இது வேண்டும் அது வேண்டும், இது முடியுமா என்பது பலமுறை டெக்னாலஜி ஆட்கள் பேசினால்தான் முடிவுக்கு வரும் விசயம்;ஆனால் அதுவே பிஸினஸுடன் இருந்தால் பெரும் குழப்பம்தான். எல்லாம் பல நேரங்களில் கனவுகள். ஒரு மீட்டிங் என்பது, தெளிவாக முன்னரே இதைத்தான் பேசப்போகிறோம் என்று யோசித்து, திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும். இதற்கு யாராவது ஒருவராவது நிறையவே உழைக்க வேண்டும். இல்லையென்றால் நாமும் மீட்டிங் பேசினோம் என்பது போல ஏதாவது சொதப்பலாகத்தான் முடியும்.
என்னுடைய மீட்டிங் அறை... 16ம் மாடியில் இருந்தது. அங்கிருந்து ரியாத் .. இன்னமும் அழகு...
நான் மீட்டிங்கை கவனித்தேனோ இல்லையோ, அந்த வெயில் சாய்ந்த நேரம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவியிருந்த ரியாத்தின் சுவர் படங்களின், சாலையில் தீப்பெட்டியாகச் செல்லும் வாகனங்களின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.
ஏனோ எனக்கு தஞ்சை சரபோஜி அரண்மனையின் மேலே இருந்து தஞ்சையைப் பார்த்த ஞாபகம் வந்தது...!
எதையுமே தூரத்திலிருந்து பார்த்தால்தான் அழகு போலும்..!
|
posted by சாகரன் @ 9/05/2004 01:20:00 PM |
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|