Saturday, August 21, 2004 |
உள்ளம் நலமா? |
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்று சொல்வார்கள்.
'எண்ணங்கள்', என்ற எம்.எஸ் உதயமூர்த்தியின் புத்தகத்திலாகட்டும். 'நீ விரும்புவது எதுவானாலும் அடைவது எப்படி?' என்ற காப்மேயர் புத்தகத்திலாகட்டும், இன்னும் எத்தனை எத்தனையோ சுயமுன்னேற்ற புத்தகங்களிலும், இதே விசயம் திரும்பத்திரும்ப வலியுருத்தப்பட்டிருக்கும்.
இது பெரிய விசயங்களுக்கு வொர்க்-அவுட் ஆகிறதோ இல்லையோ சிறிய விசயங்களுக்கு கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகிறது!
சில தினங்களாக ஏனோ உடல்நிலை சரியில்லை என்று நினைத்தேன். நிஜமாகவே சரியாக இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது:-(
சில நண்பர்கள் சொல்வார்கள், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட, நான் நல்லா இருக்கேன் நினைச்சிக்கணும். தேவையில்லாம டாக்டர்கிட்ட போறது அது இதுன்னு செய்யக்கூடாது என்று. ஒரு விதத்தில் அது சரிதான். மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற ஆரம்பகட்ட விதிமுறை இதில் கண்டிப்பாக பெரும்பாலானவர்கு வேலை செய்யும்.
நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா? - பத்மினி சிவாஜியை பார்த்து கேட்ட கேள்வி. இதில் ஏதோ சொல்லப்படுகிறது.சாதாரணமாக நலம்தானா என்றால் உடல் நலம் என்று மட்டுமே நாம் எண்ணுவது வழக்கம். உள்ளம் நலமா? என்ற கேள்வியை யாரும் நம்மிடம் கேட்பதில்லை நாமும் யாரிடமும் கேட்பதில்லை. ஏன் நம்மிடமே நாம் கேட்டுக்கொள்கிறோமா என்றால் சந்தேகம்தான்!
உள்ளம் நலமா? என்று கேட்டால் 'என்னை என்ன மனபிறழ்ச்சி உள்ளவன் என்று கேட்கிறாயா' என்று யாரேனும் சண்டைக்கு வந்தாலும் வந்துவிடக்கூடும் என்பது காரணமாக இருக்கலாம்...:-) ஆனால் இந்த கேள்வியும் நிச்சயம் முக்கியமான ஒன்று தான்; குறைந்த பட்சம் நம்மிடம் நாமே கேட்டுக்கொள்வதற்காகவாவது....!
|
posted by சாகரன் @ 8/21/2004 10:51:00 AM |
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|