Tuesday, January 09, 2007 |
ஐந்து(5) டிகிரி |
அங்கேயே ஒரளவு சொல்லியிருந்தார்கள் என்றாலும், இறங்கும் நேரத்தில் காபினெட்டிலிருந்து அறிவிப்பு வந்த போதே தெரிந்து விட்டது இந்த வருடம் நிச்சயம் குளிர் அதிகம்தான் என்று. ஐந்து டிகிரி!
மேற்கூரை இல்லாத வீட்டில் இருப்பது போலத்தான் இருக்கிறது. அதிலும் இரண்டாவது மாடி. கார்னர் பிளாட். இரண்டு சன்னல் உள்ள அந்த ரூம்(ப்) பக்கமே போக முடியவில்லை! ஆசையாசையாய் நல்ல ரேட்ல கிடைக்குதுண்ணு செகண்ட் ஹேண்டில் வாங்கிய ஏ.சி யில் ஹீட்டர் போட்டால் - சுகமாக தென்றல் வீசுகிறது. போன முறை வாங்கி வைத்த ஆயில் ஹீட்டர் மட்டுமே ஏதோ கை கொடுக்கிறது.
குளிர்.. அதிலும் மத்திய கிழக்கு நாடுகளில் குளிர் சீசன். அனுபவிக்க வேண்டிய ஒன்று. வருடத்திற்கு வருடம் அதிகரிப்பதும் அதைப் பற்றி பேச வேண்டிய தேவை இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
பேச வேறெதுவும் இல்லை என்றால், நம்மூர்ப் பக்கங்களில் 'வெயில் இன்னிக்கு அதிகம் இல்ல' என்று பேச ஆரம்பிப்பார்கள். வருடா வருடம் அதே வெயில்தான் ஆனாலும் ஏனோ அன்றுதான் அதிகம் போல பேச்சு ஆரம்பிக்கும். எதிரில் இருப்பவரும் மறுத்தோ ஆதரித்தோ பேச ஆரம்பித்து நண்பர்களாக மாறி அவரவர் வேலை முடிந்த பின் பிரிந்து விடுவார்கள். வாய் மூட இயலாத ஒரு குணம் நம்மவருக்கு உண்டு. இதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல என்பது தெளிவாகத் தெரிந்தாலும் ஏனோ குளிர் அதிகம் என்பதைச் பேசாமல் இருக்கமுடியவில்லை!
*****
தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது ஒரு தேசத்திற்குத் தவிர்க்க இயலாதது. வளர்ந்து வரும் சவுதி அரேபியா இன்னமும் உற்சாகமாக மாற்றங்களை எதிர்கொண்டுதான் வருகிறது.
சமீபத்திய புதிய மாற்றங்கள்: காலை 9 மணி முதல் மாலை 4:30 வரை மட்டுமே - அனைத்து வங்கிகளின் அலுவலகங்களும் திறந்திருக்கும் - லஞ்ச் பிரேக் கூட விடாமல். ததாவுல் - சவுதி ஸ்டாக் மார்க்கெட் - நேரமும் அதே!
எதிர்பார்க்கப்படும் புதிய மாற்றம்: தற்போதுள்ள வியாழன், வெள்ளி விடுமுறை என்பது மிக விரைவில் வெள்ளி, சனி விடுமுறை என்று மாற்றப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிலிருந்து செய்தி கசிகிறது. ஏற்கனவே பல மத்திய கிழக்கு நாடுகளில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டது அறிந்ததே!
*****
சவுதி அரேபிய மன்னரின் இந்திய விஜயத்தினை கொண்டாடும் பொருட்டு இந்திய அரசாங்கத்தின் ஆணைப்படி ஜனவரி 26 ம் தேதிவரை ஒரு வாரத்திற்கான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன. இது ரியாத் நகரத்தில் மட்டுமல்ல, ஜெத்தா, தமாம் போன்ற இடங்களிலும் என்று தெரிய வருகிறது. சவுதி வாழ் மக்களுக்கு இந்த மாசம் நிறையவே சுவாரஸ்யங்கள் இருக்கிறது! ஒரு வாரத்திற்கான கொண்டாட்டம் என்பது சாதாரண விசயமே அல்ல.., எல்லாம் முடிந்த பிறகு இவை பற்றி எழுதுகிறேன்.
*****
On Progress...
தமிழ் சினிமா பாடல்களின் வரிகள் - லிரிக்ஸ் - டேட்டாபேஸ் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு சிறிய நிகழ்ச்சிக்காக... Quick Answer from google: mohankumars.com
|
posted by சாகரன் @ 1/09/2007 10:35:00 AM   |
|
|
|
About This Blog |
 பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
 |
|