சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, May 21, 2005
உயிரில்லா விதைகள்
"எக்ஸ்க்யூஸ் மீ.. Is there any other beach other than this?" - வழிமறித்து அந்த தம்பதியரை என் துணை கேட்ட போது, நேரம் மாலை 8:30 ஐக் கடந்திருந்தது.

அது ஒரு வியாழன். வியாழனன்று வெளியே செல்வதென்பதே பல வாரங்களாக முடியாமலிருந்தது. ஒரு வாய்ப்பு கிடைத்த அன்று, எங்கேனும் சென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் நான் மாட்டிக்கொண்ட நாள் அது.

சுமார் 5 மணி நேர பயணத்தில் அந்த இடத்தில் இருந்தோம். புது இடம் - ஜுபைல், முதலில் பார்த்த அந்த பீச்.. அவ்வளவாக கூட்டமில்லாமல், அமைதியாக இருந்தது.

'அதோ ஒரு இந்தியன் பேமிலி வர்றாங்க. அவங்ககிட்ட விசாரிக்கலாம்' என்று என் துணை சொன்னபோது, எனக்குள் தயக்கம்தான்.

வயதில் முதிர்ந்த அவர், மிகுந்த கரிசனத்துடன், பேசினார். ஏனோ தெரியவில்லை, சிலருக்கு சிலரைப் பார்த்தவுடனே பிடித்து விடுகிறது. எனக்கும் அவரிடம் அப்படி ஒரு எண்ணம் தோன்றியது. இன்னமும் இரண்டு அழகான கடற்கரைகள் இருக்கின்றன் என்றும் அங்கு செல்லுவதற்கான வழியையும் சொல்லியவர், சில நிமிடப் பேச்சில் அவரே அழைத்துச் செல்ல முன்வந்தார். அதுவுமமில்லாமல், இரவு நெருங்கிவிட்டதால், அவரது வீட்டிலேயே தங்கவும் கூப்பிட்டார்.

இந்தியாவில் பூனா. ஒரே மகள். கனடாவில் திருமணமாகியிருக்கிறார். சாப்ட்வேரில் தான் வேலை. ஜாவா ஜாதி!

நட்பு எந்த நேரம் எப்படி ஏற்படும் என்பது எப்பொழுதுமே சுவாரஸ்யம்தான். அதிலும் எதிர்பார்ப்பில்லாத நட்பு! அன்றிரவே எப்படியோ ரியாத் வந்து விட்டாலும், மறு நாள் நெடு நேரம் தொலை பேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.

ம்... ஜுபைல பீச் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், சுவாரஸ்யம், இண்டஸ்டிரியல் சிட்டி தான். சுமார் 5-7 நிமிடங்கள் இண்டஸ்டியல் சிட்டி வழிப்பயணம். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை, விளக்கொளி. சிறு வயதுக் கனவுகளின் மாய மாளிகைகளின் மீட்சி!

*******

'வெஜிடேரியன் என்றாலும், அந்த உணவிலும் ஒவ்வொரு விதையிலும் உயிர் இருக்கத்தான் செய்கிறது. உயிர் கொல்லாமல் உணவு என்பது இல்லை. அதனால் இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், நாம் உயிர் வாழ என்ன உணவு தேவை என்பதைப் பார்த்தால் போதுமானது."

'ஆர்ட் ஆப் லிவிங்' - சேர்ந்த ஒரு நண்பர், யாரிடமோ, பேசிக்கொண்டிருந்த போது காதோரமாக இந்த பேச்சு அடிபட்டது. கூடவே சில சுவாரஸ்யமான தகவல்களும். (சமீபத்தில் ரியாதில் இது ட்ரெண்ட். 500 ரியால் ஒரு முறை இணைவதற்கு. பலர் இணைந்திருக்கிறார்கள். சென்ற வருட துவக்கத்தில் என் நண்பர் ஒருவர் இது பற்றி சொல்லிய போது ஆச்சரியப்பட்டேன். இப்போதைய இவர்களது வளர்ச்சி அதுவும் இந்த ஊரில் இன்னமும் பெரிய ஆச்சரியம்!)

இப்போது கிடைக்கும் பல உணவுப் பொருட்கள், கோதுமைகள் உயிரில்லாதவை. கெமிகல் மூலமாக உருவாக்கப்படும் இந்த உணவு விதைகள் மறுபடி பயிர் செய்ய இயலாதவை. இப்பொழுதெல்லாம், கிடைக்கும் முட்டைகள் கூட, உயிரில்லாத முட்டைகள்தான்!

பிரிஜில் வைத்து காய்கறிகளைச் சாப்பிடுவதென்பது, மார்ச்சுவரியிலிருந்து எடுத்துச் சாப்பிடுவது போன்றது. இந்தப் பேச்சு இப்படிச் சென்று கொண்டிருக்க,
எனக்கு ஒரு வாக்கியம் பிடித்திருந்தது.

"எப்படி சமைத்தாலும், நன்றாகத்தான் இருக்கக்கூடிய ஒரே உணவுப் பொருள் உருளைக்கிழங்கு"

அட..!

*********

சில வாரங்களுக்கு முன்பு ஒரு வியாழன் மாலை, 'ரியாத் தமிழ்ச்சங்கத்தினரின்' முறையான தொடக்க விழா நடைபெற்றது. சில கலைநிகழ்ச்சிகளுடன். நண்பர் கேவிராஜாவின் கார் அந்த நேரம் பார்த்து ரிப்பேராகி அவரை காப்பாற்றிவிட்டாலும், பாலராஜன்கீதா மாட்டிக்கொண்டார்:-).
அந்தப் புரோகிராம்களில் ஒன்று, எவ்வளவு பேசினாலும் தீராத பட்டிமன்ற சப்ஜெக்ட் - திரைஇசையும் தமிழும். இதில் சுவாரஸ்யம், 'சஜாவுதீன்' என்ற ஒருவர் பேசிய பேச்சு எனக்கும் பாலராஜன்கீதாவிற்கும் எங்கோ கேள்விப்பட்ட மாதிரியே இருந்ததுதான். சில மாற்றங்களுடன், திரு. மூர்த்தி எழுதிய 'பெரியம்மா பெண்ணை...' பதிவினையும், மரத்தடியில் ஓடிய பேச்சுக்களை ஒட்டியும் இருந்தது போன்ற ஒரு தோற்றம்.

அது உண்மையா இல்லையா, சஜாவுதீனுக்கு இணையம் தெரியுமா? (அதுவும் தவிர பேசப்படும் சம்ஜெக்ட் ஒன்றும் பெரிய விசயம் அல்ல, அடிக்கடி சாதாரணமாகவே பேசப்படுவதுதான். சஜாவுதீன் அவராகவும் கூட இதைப் பேசி இருக்கலாம்.ஆனால், நிறைய விபரங்கள் எங்கோ படித்த வார்த்தைகளிலேயே வந்ததுதான் சம்சயம்!) இது ஒரு பக்கம் இருந்தாலும், இது தவறாகுமா? கருத்துத் திருட்டு என்று ஒன்று உண்டா? பேச்சு என்று வரும்போது, ஆங்காங்கே படித்ததை இணைத்து அல்லது அப்படியே சொந்த கருத்தென்று பேசுவது சகஜமான ஒன்றுதானே?! அதிலும், ஒரு ஊடகக் கருத்தை வேறு ஊடகத்தின் வழி பிரசவிக்கும் போது...
posted by சாகரன் @ 5/21/2005 05:53:00 PM  
2 Comments:
  • At 11:37 AM, Anonymous Anonymous said…

    (9.6.2005) KVR said...

    //நண்பர் கேவிராஜாவின் கார் அந்த நேரம் பார்த்து ரிப்பேராகி அவரை காப்பாற்றிவிட்டாலும், பாலராஜன்கீதா மாட்டிக்கொண்டார்:-).//

    :-))

    //கருத்துத் திருட்டு என்று ஒன்று உண்டா?//

    மேடைப்பேச்சுகளில் எங்கேனும் ஓரிடத்தில் படித்த கருத்துகளை நயம்படக் கூறுவது கருத்துத் திருட்டாக எனக்கு தோன்றவில்லை. ஆனால் அப்படி குறிப்பிடும்போது "நான் இணையத்தில் கூட இதுபற்றிய கருத்துகளைப் படித்தேன்" என்று சொல்லி பின்னர் பேசினால் கொஞ்சம் நியாயமாக இருக்கும் (பலரும் செய்வதில்லை என்பது வேறு விஷயம்).

    மூர்த்தி எழுதிய "பெரியம்மா பொண்ணை" பதிவு போலவே அதற்கு முன்பாகவே ஆனந்த் ராகவ் ஒரு நகைச்சுவை சிறுகதை எழுதி இருக்கிறார். அதன் தாக்கத்தில் கூட அந்த நண்பர் அப்படி மேடையில் பேசி இருக்கலாம்.

     
  • At 2:05 PM, Anonymous Anonymous said…

    (10.6.2005) மூர்த்தி said...

    அன்புள்ள சாகரன்,

    நான் உங்களை புத்தகம் பற்றி பதிவு செய்ய அழைத்துள்ளேன். மேல் விபரங்களுக்கு எனது வலைப்பூவைப் பார்க்கவும். நன்றி!

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER