Wednesday, August 04, 2004 |
பிஸினஸ் Vs டெக்னாலஜி |
டெக்னாலஜி மக்களிடம் கோ ஆர்டினேட் பண்ணுவதிலும் பிஸினஸிடம் கோ ஆர்டினேட் பண்ணுவதிலும் நிறைய வேற்றுமை இருக்கிறது.
பிஸினஸ் என்று சொல்லப்படும் உபயோகிப்பாளர்கள் சுலபமானவர்கள் என்று தோன்றுகிறது. அவர்களிடமிருந்து requirement gather பண்ணுவதென்பது இன்னும் சுலபமானது. ஏனென்றால் பெரும்பாலான நேரம் அவர்களுக்கு என்ன தேவை என்பதையே அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். ஒரு manual பிராசசை கம்புயூட்டரைஸ் பண்ணப் போகிறோம் என்று சொன்னால் சந்தோஷமாக உதவி செய்வார்கள். தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இப்ப இருக்கற சாப்வேர் என்ன? இந்த மாதிரி விசயங்களை உடன் குடுப்பார்கள்.
ஆனால், அதே நேரத்தில், அடுத்த டீம் டெக்னாலஜில் உள்ளவர்களிடம் பேசிப்பாருங்க வெறுத்துடுவீங்க.
பாதி நேரம், சாரிப்பா நான் பிஸி அப்புறம் வந்து பாருன்னு சொல்வாங்க... இல்லியா நீ அந்த ஆளை புடி, அவர்தான் இதுக்கு சரியான ஆளுன்னு கை காட்டுவாங்க...
இந்த எஸ்கேபிஸம் கொஞ்ச நாள் ஓடும். அதுக்கப்புறம், சரி இதுதான் அப்படின்னு ஒரு படம் காட்டுவாங்க.அதை வச்சி நீங்க ஏதாவது செய்ய ஆரம்பிச்சீங்கன்னு வச்சுகங்க... வொர்க் ஆகாது. அப்புறம் மறுபடி அவங்க கிட்ட போனா, வேற ஒரு படம் வரும். நீ அதைத்தானே கேட்டே இதை கேட்கலியே சொல்வாங்க. நாமதான் மண்டைய பிச்சிக்கணும். அடுத்தவங்க அவங்க வேலையை, திறமையை பிடுங்கிகிட்டு போற மாதிரி ஒரு நினைப்பு.
எதுக்கு இப்ப இதை பேசறேன் கேட்கறீங்களா, நாங்க பண்ண ஆரம்பிச்சிருக்கற ஒரு பிராஜக்ட்ல முன்னாடியே ஒரு பழைய சிஸ்டம் இருக்கு. அந்த சிஸ்டத்தில என்னென்ன பண்ணியிருக்காங்க பார்க்கலாம்னு டிரை பண்ணினேன்.
ம்.. ஹும். நம்ம பசங்க யாரும் மசிஞ்சு குடுக்கலியே. சர்தான் இது வேலைக்காகாதுனு ஸ்ட்ரைட்டா பிஸினஸ் கிட்ட போய் முடிஞ்சளவு எல்லா விசயமும் வாங்கிட்டு வந்துட்டோம்! ஆனா வேற வழி இல்லை... இனிமேலத்தான் ... டெக்னாலஜி கோ-ஆர்டினேஷன்கற கடி !!
|
posted by சாகரன் @ 8/04/2004 02:44:00 PM |
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|