எனக்கு இன்னும் வலைப்பூ எழுதுபவர்களும், இணையத்தில் எழுதும் திறமையாளர்கள் பத்தியும் அதிகம் தெரியாது.நான் புதுசு. இங்க எழுதி வைக்கறது எல்லாமே சும்மா என் மனசுல தோன்றதுதான். நேசமுடன் வெங்கடேஷ் பேட்டி பார்த்தேன்... இந்த மாத திசைகள் இதழில். சுட்டி: http://www.thisaigal.com/augest04/spl.html "This is not a Spam Mail" புகழ் வெங்கடேஷ் பத்தி எனக்கு கோபம் உண்டு. எப்படி எல்லோருடைய மின்னஞ்சலையும் திருடி அவர் மெயில் அனுப்பலாம் அப்படின்னு. அவரோட கருத்துக்களை திணிக்க வைக்கிற முயற்சி. ஆனா, இந்த பேட்டி படிச்ச போது அந்த கோபம் கொஞ்சம் குறைஞ்சுடுச்சு. முக்கியமா புடிச்சிருந்த ஒரு விசயம்: வெங்கடேஷ்: நேசமுடன், மின்னஞ்சல், அதற்குள்ளிருந்து ஒரு வடிவமும், எழுதும் முறையும் கூடத் தோன்றலாம். இது நம்பிக்கைதான். தோன்றாமலும் போகலாம். அதுவும் சாத்தியமே. ஆனால், முயற்சித்துப் பார்ப்பதில் எனக்கு எந்த நஷ்டமுமில்லை.
நேசமுடன், இப்போதைக்குப் 16 இதழ்களே வந்திருக்கின்றன... ஒரு முயற்சியில், இது மிக மிக ஆரம்ப பருவம். ரொம்ப தூரம் போகவேண்டும். புதிதாக ஒன்று தென்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பரவாயில்லை... தான் செய்யறதுதான் சரின்னு வாதாடல... ஏதோ டிரை பண்றேன் சொல்றாரு... 9. தமிழ் படைப்புலகில் நடை என்ற ஒரு அம்சம் இப்போது இரண்டாம் பட்சமாகிவிட்டதாகத் தோன்றுகிறது. அலங்காரமாகவோ, நளினமாகவோ கதைகளை விவரிக்கும் போக்குகள் அருகிவருகின்றன. இன்னொருபுறம் இதழாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொல்லின் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலே பயன்படுத்தி வருகிறார்கள். கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட சங்க இலக்கியங்களையோ, செவ்விலக்கியங்களையோ, பாசுரங்களையோ, பாரதியைக்கூட முற்றிலுமாகப் படித்தவர்களாக இல்லை. மொழி அறிவு என்பது எழுதுபவனுக்கு அவசியமில்லை என்ற மனோபாவம் ஏற்பட்டுவிட்டது. இணையதலைமுறை எழுத்தாளர்கள் இந்த நிலையை மாற்றுவார்களா? அல்லது நிலை மேலும் மோசமாகுமா? ஆர்.வி.: இணைய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகும் ஆரம்ப கட்டத்தில் நாம் இருக்கிறோம். எல்லோரும் நல்ல மொழிஅறிவு படைத்தவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் இணைய எழுத்தின் தரம் உயரும்.
இன்று இணையத்தில் எழுத வந்துள்ளவர்கள் பல்வேறு பின்னணியில் இருந்து வருகிறார்கள். பலர் ஆங்கிலக் கல்வியும், கணினிக் கல்வி அறிவும் மட்டுமே பெற்றவர்கள். ஆனால், இயல்பாகவே தமிழ் மேல் ஆர்வம் மிகுந்திருக்கிறது. இந்த ஆர்வம் தான் முக்கியம். தமிழ் மொழியின் வளங்களை மெல்ல மெல்ல பயின்றுகொண்டு விடுவார்கள்.
உடனடியாக அவர்கள் மேல் ஒரு வேல்யூ ஜட்ஜ்மெண்ட்டை வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது அவர்கள் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளிவிடுவது போன்று ஆகிவிடலாம். அட... இந்த பதில் எனக்கு பிடிச்சிருக்கு!
|
enakkoru mail pOdureengaLLa?
mathygrps at yahoo dot com
~Mathy Kandasamy
(http://maraththadi.com
http://tamil.weblogs.us
http://valaippoo.yarl.net)