சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Tuesday, June 29, 2004
இண்டர்வியூ, சில நினைவுகள்...
இன்று ஒருவரை இண்டர்வியூ செய்தேன்.
இண்டர்வியூ என்றவுடன் சில எண்ணங்களும் நினைவுகளும் மனதிலாடுகின்றன.

Interview அட்டெண்ட் செய்வது எப்படி என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா என்று நான் ஏங்கியதுண்டு. அது ஒரு காலம.... கிட்டத்தட்ட எல்லோருக்கும் அந்த காலம் இருந்திருக்கும்...

அந்த காலம்,

கல்லூரி முடித்து, சில கணிணி மென் பொருட்கள் கற்று நான் வேலை தேட ஆரம்பித்திருந்த் நேரம்.
இண்டர்வியூ பற்றி சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். என்ன கேட்கப்படும் என்ன சொல்ல வேண்டும் என்று பேசுவது வழக்கம். என்னோடிருந்த சில நண்பர்களில் முக்கியமாக ஞாபகத்திற்கு வருபவர் கிரீஷ் என்ற நண்பர்.

என்னுடைய முதல் இண்டர்வியூவை சென்னைஆன்லைன்.காம் நிறுவனத்தினருடன். அட்வர்டைஸ்மெண்ட் பார்த்து முதலில் அப்ளை பண்ணி இருந்தேன். அழைத்திருந்தார்கள். எனக்கு உள்ளுக்குள் ஒரு வித நடுக்கம். இது தான் முதல் இண்டர்வியூ, என்ன ஏது என்று தெரியாது, ஏதேனும் இருந்தாலும் தைரியமாக பேசிப்பார்ப்போமே... நடப்பது நடக்கட்டும் என்று தோன்றியது.

சென்னைஆன்லைன் நிறுவனத் தலைவர் அவர்களுடன் பேசினேன். ய்ப்பா.. என்ன அழகாக ஜெண்டிலாக வரவேற்று பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் நானும் செய்ய வேண்டும் என்றேனும் ஒரு காலம்... ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு தாழ்வு மனப்பான்மை இருந்தது, இப்போதும் நினைவிலாடுகிறது!

அவர்கள் இண்டர்வியூ கேட்டிருந்தது பிரோக்ராமருக்காக இல்லை. டிரைனிங் குடுப்பதற்காகவும், சென்னை ஆன்லைன் மேகஸினை அப் டேட் செய்வதற்காகவும்! அதை தெளிவு படுத்தினார். எனக்கு கொஞ்சம் தயக்கம் வந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள்.
அப்படி ஆகிவிடுமோ என்று தோன்றியது. பல கணிணி தொடர்பான நண்பர்களுடன் தொடர்பு இருந்ததாலும், எனக்கு இந்த கருத்து இருந்து வந்தது. சரி வந்துவிட்டோம், கடைசி வரை பார்த்து விடலாமே என்று நினனத்தேன்.

அவர், என்னிடம் கேட்ட முக்கியமான கேள்வி,
சென்னைஆன்லைன்.காம் பார்த்திருக்கிறீர்களா? மேகஸின் குறித்து உங்கள் கருத்து என்ன?

அந்தகாலத்தில் நான் தமிழ் குறித்து பெரிதும் அறிந்தவனோ... அல்லது இலக்கிய அறிவு நிறைந்தவனோ அல்ல.. அதனால் நான் சொன்னது.... " ஓ.கே சுமாராக இருக்கிறது, ஆனால் இதெல்லாம் வெற்றி பெரும் என்று நிச்சயம் இல்லை."
பாவம், இப்போதும் கூட அவருடைய அந்த முகவாட்டமும் சுணக்கமும் ஞாபகம் வருகிறது. :-)
ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், டெக்னிகல் இண்டர்வியூ செய்பவரிடம் என்னை அனுப்பினார். டெக்னிகலில் செம சொதப்பல். எய்ம் என்ன, streangth, weakness போன்ற சாதாரண கேள்விகளுக்குக் கூட ஏதோ இஷ்டத்திற்கு பதில் சொல்லி வந்தேன்...

அந்த இண்டர்வியூ ரொம்ப நாள் மனதை பாதித்திருந்தது.

வேறு சில இண்டர்வியூ நினைவுகளும் இப்போது வருகின்றன.

என்னுடைய முதல் இண்டர்வியூ, நான் BSc முடித்து, சும்மா சுத்திக்கொண்டிருந்த நேரத்தில்.... நான் அட்டெண்ட் செய்த அந்த இண்டர்வியூவில், ஒரு வேடிக்கை. அதுவும் பேப்பரில் அட்வர்டைஸ்மெண்ட் பார்த்து அந்த கம்பெனிக்கு போயிருந்தேன். ரிசப்ஷனில் வேற்றுகிரக வாசி போல நான் அமர்ந்திருந்ததை பார்த்து ரிசப்ஷனிஸ்ட், என்ன விசயம் என்று கேட்டார்.
இண்டர்வியூவிற்கு வந்திருப்பதாக சொன்னேன். அப்புறம் தான் அவர் ஒன்று கேட்டார் பாருங்கள், நான் பேந்த பேந்த முழித்தேன்.

அதுதான் CV! என்ன செய்வது கிராமத்திலிருந்து வந்து நகரமாம் சென்னை பட்டணத்தை விழித்து விழித்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, அது பற்றியெல்லாம் அறிவுறுத்தக்கூட நண்பர்கள் கிடைத்திருக்கவில்லை.

ரிசப்ஷனிஸ்ட் சின்ன பெண் வேறு. முதலில் ஒரு நக்கல் பார்வை பார்த்தாலும், முழித்ததை பார்த்து, அவரே ஒரு CV-யை குடுத்து, அது போல ஒன்று எழுதித் தரச்சொன்னார். அதை பார்த்து விட்டு, அவரிடமிருந்தே ஒரு பேப்பர் வாங்கி நான் என் விபரங்களை எழுதிக்கொடுத்தேன். வாங்கிக்கொண்டார்.ஆனால் எனக்கு அவமானமாக இருந்தது. வெயிட் செய்யச்சொன்னார்.. மேனேஜரை பார்க்க இன்னும் நேரம் இருந்தது. மேனேஜரும் வந்திருப்பார்... ஆனால்.... நான் எஸ்கேப் ஆயிருந்தேன். ஏனோ... அதன்பிறகு இண்டர்வியூ என்றால் உள்ளுக்குள் ஒரு தயக்கம் வந்து உட்கார்ந்து கொண்டது.. அப்புறம்.. மேற்படிப்பு படித்து எக்ஸட்ரா.. எக்ஸட்ரா...

posted by சாகரன் @ 6/29/2004 12:28:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER