Monday, June 28, 2004 |
கணிணி துறையில் இருப்பவர்களின் நிலை! |
கணிணித்துறையில் இன்று என்னைப்போல் பலர் இருக்கிறார்கள்.
நான் கணிணித்துறையை விரும்பி ஏற்க வில்லை. ஆனால் திணிக்கப்பட்ட ஒன்றை ஏற்றுக்கொண்டு முறையாக செயல்பட்டால் வெற்றி னிச்சயம் என்பது எல்லோரும் அறிந்தது தானே..!
சரி, நான் அறிந்த வரை கணிணித்துறையில் இருப்பவர்களின் நிலை என்ன என்பதையும், சவுதி அரேபியாவில் இருக்கும் என் மனதில் தோன்றும் எண்ணங்களையும் இங்கு எழுத்தில் வடிப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி..
இன்று இந்த துறை மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.
ஜாவா... னான் வேலை பார்க்கும் பிரிவைச் சேர்ந்த ஒரு மென்பொருள்.
ஆரம்பித்த புதிதில், ஜாவாவில் எழுதுபவர்களுக்கு வேலையும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை.
ஜாவா தெரிந்திருக்க வேண்டியது பல வேலைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டு விட்டது.
நான் வேலை பார்க்கும் கம்பெனியில் இன்று எத்தனை எத்தனை பேர்கள் .. ஜாவா தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. இணையத்தின் மூலம் சேவை எவ்வளவு முக்கியமாகப் போய் விட்டது என்பதைப்பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
இன்றைய புது கணிணியாளர்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் , வேலை தேட வேண்டும் என்றால் என்னென்ன தேவை என்று பட்டியலிட்டால்,
ஜாவா பேசிக். மற்றும், ஜாவா எண்டர்பிரைஸ் இரண்டும் நிச்சயம் தேவை.
முக்கியமாக, வெப்லாஜிக் மற்றும் சில அப்பிளிகேசன் சர்வர்களில் வேலை
பார்த்திருப்பது அவசியம்.
என்னென்ன வேலைகள் என்றால், Jஎஸ்பி, இஜெபி ஆகியன முக்கியம்.
நம்மை நாமே உயர்த்திக்கொள்ள தெளிவு படித்திக்கொள்ள ஒரு சுலபமான வழி இருக்கிறது. அது தான் சர்டிபிகேஷன்.
ஜாவா ப்ரொக்ராமர், ஜாவா வெப் காம்பொனெண்ட் டெவெலபர் மற்றும் ஜாவா பிசினஸ் காம்பொனெண்ட் டெவெலபர் போன்ற சர்டிபிகேஷன் எழுதியிருந்தால் உங்களுக்கும் தன்னம்பிக்கை வரும், வேலை கொடுப்பவர்களுக்கும் நம்பிக்கை வரும் என்று தோன்றுகிறது.
(தொடரும்)
|
posted by சாகரன் @ 6/28/2004 11:37:00 AM |
|
3 Comments: |
-
நல்ல பயனுள்ளதாய் எழுதுகிறீர்கள்.. இது நிறையப் பேரைச் சென்றடைய உங்கள் பதிவை வலைப்பூக்கள் பட்டியலில் சேர்த்துவிடுங்களேன் ..
-
-
நன்றி முத்து, நன்றி கார்த்திக்...
|
|
<< Home |
|
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|
நல்ல பயனுள்ளதாய் எழுதுகிறீர்கள்..
இது நிறையப் பேரைச் சென்றடைய உங்கள் பதிவை வலைப்பூக்கள் பட்டியலில் சேர்த்துவிடுங்களேன் ..